பணம் பற்றிய இந்த தொடரில் முந்தைய அத்தியாயங்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.எத்தனை முறை முடிகிறதோ அத்தனை முறை வாசித்துப் பாருங்கள்.முடிந்தால் பிரின்ட் அவூட் எடுத்து வைத்துக் கொண்டு வாசித்துப் பாருங்கள்.ஏனென்றால் பணம் என்பதைப் பற்றி எத்தனை முறை நீங்கள் சிந்திக்கிறீர்களோ எத்தனை முறை அதனுடன் இணக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறீர்களோ அந்த அளவூக்கு பணம் உங்களிடம் நெருங்கி விரும்.
இப்போது ஒரு சின்ன வேலை செய்யூங்கள்;.உங்களது சட்டைப் பையில் பான்ட் பாக்கெட்டுகளில் இருக்கிற ரூபாய் நோட்டுக்களை வெளியே எடுங்கள்.அவற்றை வரிசையாக ஒரு மேசை மேல் பரப்பி வையூங்கள்.குறிப்பாக பத்து ரூபாய் நோட்டுக்களை தனியாக எடுத்து வையூங்கள்.ஐம்பது ரூபாய் நுரறு ரூபாய் ஐநுரறு ரூபாய் நோட்டுக்களை தனியே ஒரு குரூப்பாக எடுத்து வையூங்கள்.
முதலில் பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்துப் பாருங்கள்.பெரும் பாலும் அந்த பத்து ரூபாய் நோட்டுக்கள் கசங்கிப் போனதாகவூம் அழுக்கு படிந்ததாகவூம்தான் இருக்கும்.எப்போதாவதுதான் ரொம்பவூம் அரிதாக புத்தம் புது பத்து ரூபாய் நோட்டுக்கள் எப்போதாவதுதான் கிடைக்கும்.இந்த அழுக்கு நோட்டுக்களை மீண்டும் உற்றுப் பாருங்கள்.இத்தனை அழுக்கான நோட்டுக்களை யார் யாரெல்லாம் பயன்படுத்தியிருப்பார்கள்.கோடீஸ்வரரர்களும் தொழிலதிபர்களும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுமா இந்த பத்து ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தியிருந்திருப்பார்கள்.ஏதாவது பெட்ரோல் பங்க் மளிகை;கடை காய்கறி கடை சின்னச் சின்ன வியாபாரஸ்தலங்கள் பேருந்துகள் போன்ற இடங்களில்தான் இந்த பத்து ரூபாய்கள் கை மாறியிருந்திருக்கும்.இப்போது இந்த பத்து ரூபாய்களை வைத்திருந்தவர்களின் மனோபாவம் என்னவாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
இதற்கு ஒரு சின்ன குறிப்பு.முந்தைய தலைமுறையில் மிடில்கிளாஸில் அதாவது லோன் வாங்கி பாடுபட்டு ஒரு சொந்த வீட்டைக் கட்டியிருந்திருப்பவர்களின் வீட்டு வாசலை கவனித்துப் பார்த்தீர்களானால் அதில் இரண்டு டூவீலர்கள் நிறுவத்துவதற்குத்தான் இடம் இருந்திருக்கும்.ஒரு பெரிய போர்டிகோ இருந்திருக்கவே இருக்காது.அவர்களது மனதளவில் கார் என்பது ஒரு ஆடம்பர விஷயம் என்றும் அதை தங்களால் வாங்கவே முடியாது என்று நினைத்திருந்திருப்பார்கள்.ஆனால் அது தவறு.முயற்சி செய்திருந்தால் அவர்களாலும் கார் பங்களா என்று வசதியாக வாழ்ந்திருக்க வேண்டும்.அதற்கான மனோபாவம் அவர்களிடம் இல்லாததால் அவர்களால் வாங்க முடியாமல் அப்படியே வாழ்;க்கையை ஓட்டி விட்டார்கள்.
என்ன சொல்ல வருகிறேன் என்றால் சில்லறைகளில் புழங்குபவர்களால் அதிகம் சம்பாதிக்க முடியாது.அவர்களிடம் வரும் சில்லறைகளும் சில ஐந்துபத்து ரூபாய்களும் அவர்களை அந்த வட்டத்திலேயே மனதளவில் கட்டிப் போட்டு வைத்து விடும்.
இப்போது ஐம்பது ரூபாய் நுரறு ரூபாய் அப்புறம் ஐநுரறு ரூபாய்களை எடுத்துப் பாருங்கள்.அதில் ஏதாவது கிறுக்கியிருக்கிறதா?கையெழுத்திருக்கிறதா? என்று பாருங்கள்.பொதுவாக ரூபாய் நோட்டுக்களை மதிப்பிற்குரிய பொருளாக நான் கருதுவேன்.அதில் எதையாவது எழுதியிருந்தால் என்னளவில் அது எனக்குப் பிடிக்காது.இது ஏனென்றால் அவர்கள் அந்த எழுத்துக்களை எழுதும் போது என்ன மனநிலையில் இருந்தார்கள் என்று தெரியாது.எழுதியவர்களின் மனோபாவம் ஒரு தொற்றுவியாதி பொல ஒரு விர்ச்சுவல் வைரஸ் போல அந்த ரூபாய் நோட்டின் வழியாக வந்து உங்களது மனதிலும் பதியூம்.இது தானாக நடைபெறும்.பட்டாம்பூச்சி விளைவை நீங்கள் நம்புபவராக இருந்தால் இதையூம் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.இதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் எல்லாம் கிடையாது.இது ஒரு வைல்ட்மேன் தாட்தான்.
இப்போது நமது மெயின் மேட்டருக்கு வருவோம்.
உங்களிடம் வரும் பணத்தை உற்றுப் பாருங்கள்.அதில்தான் உங்களது எதிர்காலத்திற்கான குறிப்புகள் உள்ளது.அதாவது அந்த ரூபாய் நோட்டில் எழுதப்பட்டிருக்கிற விஷயத்தில் எந்த குறிப்பும் கிடையாது.தொடர்ந்து அழுக்கான ரூபாய் நோட்டுக்களே உங்களிடம் வந்து கொண்டிருந்தால் பணத்துடன் தரித்திரமும் கூடவே சேர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.அது போன்ற சமயங்களில் அந்த அழுக்கான ரூபாய்நோட்டுக்களை வங்கியில் கொடுத்து புதிய நோட்டுக்களாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
எப்போது ரூபாய் நோட்டுக்கள் வந்தாலும் அதை வலது கையால் வாங்குங்கள்.இடது பாக்கெட்டில் வைத்து விட்டால் உங்களது பணவளம் குறைந்து போகும்.அதனால் வலதுபுற பாக்கெட்டுகளில் வைத்துக் கொள்ளுங்கள்.அதே சமயம் சில்லரைகளை இடதுபுற பாக்கெட்டுகளில் வைத்திருங்கள்.முடிந்தவரை சில்லரைக்காசுகளை உங்களது சட்டைப் பாக்கெட்டிலோ வீட்டிலோ வைத்துக் கொள்ளாதீர்கள்.இரும்பாலான அந்த காசுகள் இருக்குமிடத்தில் செல்வம் சேராது.இது ஏன் என்பதை ஜோதிடரீதியில்தான் விளக்க வேண்டும்.ஆனால் இந்த கட்டுரை ஜோதிடத்தை மையமாக வைத்தது அல்ல.
எனவே சில்லரைகள் அறவே வேண்டாம்.அழுக்கு நோட்டுக்களை வாங்குவதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.உங்களது வீட்டில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.அதில் தினம் ஒரு ரூபாய் நோட்டை (ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாய் அல்லது உங்களது வசதிக்கேற்ப அதற்கு மேலும்) வைத்துக் கொண்டே வாருங்கள்.மறந்தும் உண்டியலில் போட்டு பணத்தை சிறைப்படுத்தாதீர்கள்.நல்ல காற்றௌட்டமான இடத்தில் பீரோவினுள் வைத்துக் கொள்ளுங்கள்.அது பாட்டுக்கு வளர்ந்து கொண்டே(வளர்வது என்றால் தானாக அல்ல.தினம் ஒரு ரூபாயாக நீங்கள் போட்டு வைப்பதால் வளர்கிறது) வரட்டும்.இது மூடநம்பிக்கையாவே இருந்து விட்டுப் போகட்டும்.செய்து பாருங்கள்.புரியூம்.
வாழ்க பணமுடன்!
ConversionConversion EmoticonEmoticon