"பாதி போதும்"
சில நேரங்களில் தொழில்முனைவோருக்கான ஆலோசனைகளை வழங்கும்போது அவர்களிடம் காணப்படும் முக்கியமான சில நெகட்டிவ் அம்சங்கள் இவைதான்.
1.தன்னம்பிக்கையின்மை
2.பொருளாதாரக்குறைவூ
3.ரிஸ்க் எடுக்க தயக்கம்
4.பயம்..பயம்...பயம்
இவற்றை வெற்றி கொண்டு விட்டால் யார் வேண்டுமானாலும் அதிகம் சம்பாதித்து விடலாம்.பெரிய தொழிலதிபர் ஆகா விட்டாலும் வேண்டியமட்டும் பணத்தைசம்பாதித்து விடலாம்.வசதியாக வாழ்க்கையை வாழ்ந்து விடலாம்.சில அன்பர்கள் பேச்சு வாக்கில் சொல்வதுண்டு.
ஏதாவது செய்ய வேண்டும் என்ற நினைப்பாக இருக்கிறது.என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை.அப்படி எதைச் செய்ய வேண்டுமென்றாலும் இந்த காலத்தில் எதற்கும் பணம் தேவைப்படுகிறதே.விலைவாசி என்ன சும்மாவா இருக்கிறது.எதைச் செய்வதாக இருந்தாலும் பணம் தேவைப்படுகிறதே.என்னை நம்பியெல்லாம் வங்கிகளில் எல்லாம் பணம் தரமாட்டார்கள்.பணத்திற்கு எங்கே போவது?
இதுதான் இவர்களின் முதல் அங்கலாய்ப்பு.இதுவே முதல் தடையாகவூம் மாறிப்போய் அவர்களை முன்னேற விடாமல் போட்டு அழுத்துகிறது.இப்போது சுலபமாக பணம் புரட்டுவதற்கான டெக்னிக்கைப் பார்ப்போம்.இந்த பணத்தை நீங்கள் வங்கிகளிலிருந்தோ நண்பர்களிடமிருந்தோ உறவினர்களிடமிருந்தே பெறப்போவதில்லை.உங்களிடமிருந்தே பெறப்போகிறீர்கள்.ஆம்.உங்களிடம் பணம் இருக்கிறது.அது எங்கே இருக்கிறது என்றுதான் உங்களுக்கு தெரியவில்லை.அதுவூம் உங்கள் வீட்டிலேயே உள்ள பணம் உங்களுக்கு எங்கே இருக்கிறது என்று கண்ணில் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அதெப்படி என் வீட்டில் எனக்குத் தெரியாமல் பணம் இருக்கும்.ஒரு கடுகு டப்பா முதற்கொண்டு புரட்டிப் பார்த்து விட்டேன்.எங்கேயூம் பணம் இல்லை என்றுதான் இன்னமும் நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.ஆனால் பணம் இருக்கிறது.
இந்த டெக்னிக்கின் பெயர்" பாதிராஜ்ஜியம்" என்று வைத்துக் கொள்வோம்.அதாவது இந்த நிமிடத்திலிருந்தே நீங்கள் "பாதி"தான் வைத்துக் கொள்ள வேண்டும்.இன்னும் புரியூம்படி சொல்கிறேன் கேளுங்கள்.இப்போது நீங்கள் ஒரு கப்பலில் பயணம் செய்வதாக வைத்துக் கொள்வோம்.உங்களுடன் சேர்ந்து உங்களது உடமைகளும் பயணிக்கின்றன.அப்போது கப்பலின் மாலுமி ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார்.கப்பலில் ஓட்டை விழுந்து விட்டது.இன்னும் சிறிது நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் கப்பல் கடலில் மூழ்கிப்போய்விடும்.அதனால் கப்பலில் பயணிக்கும் ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள உடைமைகளில் பாதியை கடலில் வீசி விட வேண்டும்.அப்படி யாராவது உடைமைகளில் பாதியை கடலில் வீசி விட மறுத்தால் அந்த நபரை நாங்களே கடலில் வீசி எறிந்து விடுவோம்.
இதுதான் அவரது அறிவிப்பு.
உங்களுக்கு இருப்பது இரண்டே சாய்ஸ்
ஒன்று உங்களது உடமைகளில் பாதியை வெளியே வீச வேண்டும்.அல்லது நீங்கள் கடலில் குதித்து மூழ்கிப்போக வேண்டும்.எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
உங்கள் உடைமைகளில் பாதியை வெளியே வீச சம்மதித்து விடுவீர்கள்தானே.அதைத்தான் இப்போது உங்களது வீட்டிலும் செய்ய வேண்டும்.
உங்கள் வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களில் இருந்து பழைய பிளாஸ்டிக் நாற்காலிகள் காலியாகக் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் செய்தித்தாள்கள் படித்து முடித்த புத்தகங்கள்(புத்தகக்கண்காட்சியில் ஆசைப்பட்டு வாங்கிய புத்தகமாகவே இருந்தாலும் அவை இப்போது வேண்டாம்.ஈபுக்காக பென்டிரைவ்வில் சேமித்து வைத்துக் கொண்டால் இடம் மிச்சமாகும்.புத்தகமும் மக்கிப்போய் பக்கங்கள் மங்காமல் இருக்கும்) பத்தாமல் போன உடைகள் பீரோக்கள்(அவற்றை கடாசி விட்டு சுவற்றில் பதித்துக் கொள்ளும் கப்போர்டாக வைத்துக் கொண்டால் இன்னும் இடம் மிச்சமாகும்) அப்புறம் பாத்திரங்கள் என்று என்னென்ன பொருட்கள் உங்கள் வீட்டில் இருக்கிறதோ அவற்றை முதலில் ஒரு லிஸ்ட் எடுங்கள்.
இன்வன்ட்ரி மேனேஜ்மென்ட் என்பதை தொழில் செய்யூம் இடங்களில் வணிக இடங்களில் சாப்ட்வேரில் பயன்படுத்துவதுண்டு.ஆனால் அதை வீட்டில் பயன்படுத்திப் பார்த்தால்தான் தெரியூம்.எத்தனை வேஸ்ட்டான பொருட்கள் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது என்று.வாஸ்துப்படி பார்த்தாலும் பயன்படுத்தாத எந்த பொருள் வீட்டில் இருந்தாலும் அது பணநாசத்தைக்கொண்டு வந்து விடும்.
நான் பயமுறுத்தவில்லை.
அத்தனை தேவையற்ற பொருட்கள் உங்கள் வீட்டிலும் என் வீட்டிலும் இருக்கின்றன.இவற்றை அவ்வப்போது கணக்கு எடுத்து வைத்துக் கொண்டால் போதும்.இப்போது "பாதி ராஜ்ஜியம்" டெக்னிக்கிற்கு வருவோம்.
நீங்கள் வாழ்வில் முன்னேற வேண்டுமென்றால் பாதி பொருட்களை மட்டுமே வீட்டில் வைத்துக் கொள்ள அனுமதி.மீதிப் பொருட்களை தயவூ தாட்சண்யம் பாராமல் விற்ற விட வேண்டும்.அப்படி விற்று வருகிற பணம்தான் உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் உங்களது தொழில் முயற்சிக்கான முதலீட்டுப் பணம்.
இதில் என்ன வந்து விடப்போகிறது என்று நினைக்கலாம்.
அந்த காலத்தில் (1984 கால கட்டம்) இன்ஃபோசிஸ் நிறுனத்தை துவங்க நாராயமூர்த்தியின் மனைவி கடனாக கொடுத்த பத்தாயிரம் ரூபாயில்தான்(அன்றைய தேதியில் பத்தாயிரம் ரூபாய் என்பது பெரிய தொகைதான்) அந்த நிறுவனம் துவங்கப்பட்டது.எச்சிஎல்டெக் நிறுவனமும் பத்தாயிரம் ரூபாயில்தான் துவங்கப்பட்டது.மைக்ரோசாப்ட்டும் டெல் கம்ப்யூட்டரும் சில டாலர்களில்தான் துவங்கப்பட்டது.பேஸ்புக் கூட அப்படி சிறிய முதலீட்டில் துவங்கப்பட்டதுதான்.
அதனால் தொகை சிறிது என்பது ஒரு குறைபாடல்ல.
எதைத் துவங்கப்போகிறீர்கள்.அதை எப்படி வளர்க்கப்போகிறீர்கள் என்பதில்தான் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் மறைந்திருந்து உங்களுக்கு கண்ணாமூச்சி காட்டுகின்றன.
இருபத்தைந்து ஆண்டுகள் முன்னால் திருச்சி தெப்பக்குளத்தில் ஒருவர் வெள்ளை உடை அணிந்து பேனாக்களை கூவிக்கூவி விற்றுக் கொண்டிருப்பார்.அப்போது நீலநிற மூடியூடன் வெள்ளையாய் மார்க்கெட்டிற்கு வந்து ரேனால்ட்ஸ் பேனா ரூ 3.50 ரூபாயில் செம சேல்ஸ் காட்டிய காலம்.அப்போது சின்ன ரீபிள் முப்பத்தைந்து பைசாவூக்கு பெட்டிக் கடைகளில் கிடைக்கும்.ஆனால் அந்த பேனா விற்கும் மனிதர் ஒரு ரீபிள் பேனாவை அப்போது ஐம்பது காசுகளுக்கு விற்றுக் கொண்டிருப்பார்.இது எப்படி சாத்தியம்.என்ன லாபம் அவருக்கு கிடைத்து விடும் என்ற சந்தேகத்தில் அவரிடம் அப்போது பேசிப்பார்த்திருக்கிறேன்.டில்லியில் அது போன்ற பேனாக்கள் இருபது பைசாக்களுக்கு கிடைக்குமாம்.அதை வாங்கிக் கொண்டு வந்து விற்பதாக தெரிவித்தார்.அப்போது அவர் ரேனால்ட்ஸ் பேனாவை விற்பனையில் தனி ஆளாக ரோட்டில் நின்று ஜெயித்துக் கொண்டிருந்தார்.அதன்பின் அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.
சாதாரண தரை பெருக்கும் விளக்கமாற்றை மொத்தமாக வாங்கி அவற்றை அலங்கரித்து காஷ்மீர் வரை கொண்டு சென்று விற்றுக் கொண்டிருந்த ராஜரத்தினம்(அப்புறம் இவர் பற்றி வேறு செய்திகள் வந்தது வேறு கதை.அவை நமக்கு வேண்டாம்) நாட்டிலுள்ள பல வங்கிகளையே விலைக்கு வாங்கிப் போட்டதெல்லாம் மிரள வைக்கும் சரித்திர உண்மை.
ஆன எதைத் துவங்குவதற்கும் பெரிதாக பணம் வேண்டாம்.
சிறிது பணம்.+ பெரிய அளவில் நம்பிக்கை.+ தொடர்ந்த முயற்சி.இவை மட்டும் இருந்தால் என்னுடன் சேர்ந்து வெற்றிப் பாதையில் பயணம் செய்ய வாருங்கள்.
நீங்களும் முன்னேறி விடுவீர்கள்.ஒரு பெரிய தொழிலதிபராக.பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கக் கூடியவராக.
வாழ்த்துக்கள்!
வாழ்க பணமுடன்!
ConversionConversion EmoticonEmoticon