"விதி என்பது விலங்கு அல்ல..."
ஜோதிடசாஸ்திரத்தைப் பொறுத்தவரைக்கும் விதியையூம் பூர்வஜென்மப் பலன்களையூம் மிகவூம் உறுதியாக நம்புவோம்.ஆனால் அதற்கும் பரிகாரம் என்ற பெயரில் விதியை அதன் பிடியிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்வதற்க பல அருமையான தந்திரங்களை நமது மகரிஷிகள் அருளியூள்ளனர்.ஆனால் இப்போது நான் சொல்ல வரும் விஷயம் அதுவல்ல.
இவ்வளவூதான் உங்களது எல்லை.இதற்குள்தான் நீங்கள் செயல்படமுடியூம்.இதைத்தாண்டி ஒரு அடி கூட எடுத்து வைக்கக் கூடாது என்பது வேண்டுமானமானால் சூழ்நிலையில் நிர்பந்தமாக இருக்கலாம்.அது கூட நீங்கள் அந்த சூழ்நிலையின் நிர்பந்தத்திற்கு பணிந்து போவதால்தான் இருக்கக் கூடும்.
குடும்பச் சூழ்நிலை.பெற்றௌர்கள் சரியாக அமையாதது.சரியான வயதில் சரியான கல்வி கிடைக்காதது.சரியான நண்பர்கள் கிடைக்காதது.ஏன் வங்கியில் ஒரு பைசா லோன் கேட்டாலும் கூட கிடைக்காதது.என்று பட்டியல் எடுத்தால் குறைந்தது நீங்களே கூட ஒரு முப்பது நாற்பது காரணங்களை பட்டியலிட முடியூம்.ஆனால் இவையெல்லாம் நம்மைப் போட்டு அழுத்தவே செய்யூம்.இதிலிருந்து மீண்டு வரவே முடியாது என்ற நிலையூம் கூட ஒரு காலத்தில் இருந்ததது.
ஒரு காலத்தில் என்றால் இன்டர்நெட்டும் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடும் இல்லாத காலத்தில் அப்படி ஒரு அவலநிலை இருந்தது.அப்போதெல்லாம் ஆகாஷவாணியில் சரோஜ்நாராயணசாமியூம் ஆல்இந்தியாரேடியோவில் செல்வராஜூம் சொல்வதுதான் செய்தியாக இருந்தது.தினசரி பத்திரிகைகள் சொல்வதுதான் செய்தி.அலுவலகத்தில் மேலாளரை மீறி எதுவூம் செய்ய முடியாது.தனிப்பட்ட முறையில் பகுதி நேரமாக எதுவூமே செய்ய முடியாது.மிஞ்சி மிஞ்சிப் போனால் ஸ்ரீராம் சிட்ஸ் போன்ற கம்பெனிகளுக்கு சீட்டு பிடிக்கலாம்.நாய் போல அலைந்து திரிந்து(நாய் போல என்று குறிப்பிடுவது மரியாதைக் குறைவால் அல்ல.நாய் என்ற ஒரு உயிரினம்தான் ஆட்களை சரியாக கண்டுபிடிக்கும்.திரும்பத் திரும்ப கடினமாக முயற்சி செய்யூம்.நன்றியோடு இருக்கும் என்ற அர்த்தத்தில் குறிப்பிடுகிறேன்.தவறாக எண்ண வேண்டாம்) எல்ஐசி பாலிசி பிடிக்கலாம் என்ற வகையில்தான் பார்ட் டைம் பிசினஸ் முயற்சி என்பது இருந்தது.
எப்போது இணையம் மற்றும் மொபைல் ஃபோன் உலகை ஆளத் தொடங்கி விட்டதோ அப்போதே முன்னேறுவதற்கான அத்தனை கதவூகளும் திறந்து விடப்பட்டு விட்டன.ஆனால் இன்னமும் பயத்தோடும் சந்தேகத்தோடும் நம்மால் எல்லாம் முடியூமா என்ற சுயகழிவிரக்கத்தோடும் தயங்கிக் கொண்டே இருப்பது நீங்கள் மட்டும்.
அதனால்தான் சொல்கிறேன்.
விதி என்பது ஒரு விலங்கு போல உங்களது கையைக் கட்டிப்போட்டிருக்கவில்லை.நீங்கள்தான் அப்படி விதி உங்களைக் கட்டிப்போட்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறீர்கள்.
நாய்பிழைப்பு என்று சொல்வார்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இன்றைக்கு கூட மார்க்கெட்டிற்கு சென்று கறிகாய் வாங்கி வரும்போது எதேச்சையாக ஒரு நாய் கண்ணில் பட்டது.அழகான லாப்ரடார் வகை நாய்.அது சொகுசாக ஒரு கறுப்புநிற டாப்என்ட் ஹோண்டாசிட்டி காரில் முன்சீட்டில் அமர்ந்து வந்தது.அது இறங்கிய இடம் ஒரு இளநிக்கடை.அந்த நாய் அங்கே இளநி சாப்பிட ஆரம்பித்தது.எங்கே இப்போது சொல்லுங்கள்.நாய்பிழைப்பு என்பது கஷ்டமானதாகவா இருக்கிறது.
சரி மெயின் மேட்டருக்கு வரலாம்.
அடிக்கடி நான் ஒன்றை சொல்வதுண்டு.'முதல் அடி நம்முடையதாக இருக்க வேண்டும்' அடி என்றால் அடிப்பது என்ற பொருளில் அல்ல.காலடி எடுத்து வைப்பது.கடவூளை வழிபடுவதாக இருந்தாலும் கூட அவரை நோக்கிய முதல் அடியை நாம்தான் எடுத்து வைக்கவேண்டும்.அப்போதுதான் அவரும் ஓரடி எடுத்து வைப்பார்.ஒரு பிசினஸ் மீட் என்று வைத்துக் கொள்வோம்.அதிலும் முதலடி நம்முடையதாக இருந்தாக வேண்டும்.அப்படி செய்தால் அப்படி நகர்ந்தால் உங்களை தன் காலடியில் போட்டு நசுக்கிக் கொண்டிருக்கும் 'சந்தர்ப்ப சூழ்நிலைக்கே' கூட தன் மீதே ஒரு சந்தேகம் வந்து விடலாம்.இவனை ஜெயிக்க முடியாதோ.இவன் ஜெயித்து விடுவானோ? இந்த எண்ணத்தை மட்டும் நீங்கள் ஏற்படுத்தி விட்டால் 95 சதவீதம் நீங்கள் ஜெயித்த மாதிரிதான்.ஒரு தொழில் விஷயமாக உங்களது வங்கி மேனேஜரிடம் சென்று லோன் கேட்கப் போகிறீர்கள்.அவரது அறையில் போய் அமர்ந்து விஷயத்தை சொன்ன நிமிடத்தில் நீங்கள் தருகின்ற விபரங்களை தாளில் இருப்பதை படித்து விட்டு நிமிர்ந்து உங்களை ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள் அந்த நிமிடத்தில் 'இவன் ஜெயித்து விடுவானோ' என்ற எண்ணம் மட்டும் அவர் மனதில் தோன்றி விட்டால் நீங்கள் ஜெயித்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
அதனால்தான் சொல்கிறேன்.மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.நன்றாக காது கொடுத்துக் கேளுங்கள்.கேட்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.அது இதுதான்.
விதி வலியது.
அதை விடவூம் வலியது நீங்கள்தான்.
ஆம்.நீங்கள்தான்!
எனவே விதியைப் பார்த்தும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பார்த்தும் பயப்படாமல் முன்னேறுங்கள்.வாழ்த்துக்கள்!
ConversionConversion EmoticonEmoticon