நமது தளத்தில் எத்தனை சுயமுன்னேற்ற கட்டுரைகள் எழுதினாலும் சிலரை திருத்தவே முடியாது போலிருக்கிறது.நாம் மட்டுமல்ல பலரும் சொல்லும் ஒரு விஷயம் மனோபாவம் அதாவது ஆட்டிட்டியூட் (attitude)மட்டுமே வளமான வாழ்வைத் தரும்.பணவளத்தையூம் தரும் என்பார்கள்.ஆனால் நிஜத்தில் நடப்பதென்ன.
முதலீட்டாளர்கள் முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.எதுவூம் கொடுத்தால்தான் கிடைக்கும்.பணம் கொடுக்காமல் பணம் கிடைக்காது.இதை இவர்கள் புரிந்து கொள்வதே இல்லை.எங்கே எது இலவசமாக கிடைக்கும்.அல்லது யாரை எப்படி கேட்டு தாஜா செய்து இலவசமாகப் பெற்றுக் கொள்வது என்றே நினைக்கிறார்கள்.இது குற்றச்சாட்டு அல்ல.பல நிபுணர்களும் சொல்லும் அனுபவக் கூற்று இது.நாமும் இது போன்ற அனுபவத்தை சந்தித்துள்ளோம்.
மாருதி 800 கார் வாங்க விரும்பினால் அதைத்தான் வாங்க வேண்டும்.ஆனால் மாருதி 800 கார் வாங்கி விட்டு அதில் ஆடி அல்லது பிஎம்டபிள்யூ காரில் உள்ள வசதிகளை எதிர்பார்ப்பது தவறு.அது போல ஒரு சிறிய பேக்கேஜை பயன்படுத்திக் கொள்ள நினைத்தால் அதில் எப்படி சரியாக டிரேடிங் செய்வது என்று பாருங்கள்.
இன்றைக்கு ஒரு அன்பர் செய்த தவறு வெளிச்சத்திற்கு வந்தது.ரூ 555 என்ற கட்டணத்தில் ஐந்து ஆஃப்ஷன் டிப்ஸ்களுக்கு கட்டணம் செலுத்தி விட்டு டிப்ஸ் பெற்றுக் கொண்டிருந்தார்.இன்று நாம் கொடுத்திருந்த டாடாமோட்டார்ஸ் கால் ஆஃப்ஷனில் டிரேடிங் செய்யூங்கள்.இதுதான் டார்கெட்.இதை மீறிப்போகாது.டார்கெட்டை அடையாமல் கீழே வரும்போல தெரிந்தால் ஸ்டாப்லாஸ் வரை காத்திருக்காதீர்கள் விற்று வெளியே வந்து விடுங்கள் என்று கண்டிப்பாக சொல்லியிருந்தோம்.
இவருக்கு நாம் கொடுத்திருந்தது 560 கால் ஆஃப்ஷன்.அதன் டார்கெட் ரூ9.40 இதனை இவருக்கு ரூ 7.40ல் பரிந்துரைத்திருந்தோம்.சரியாக வாங்கி விட்டார்.ஆனால் வாங்கியதைச் சொல்லவில்லை.ரூ 9.40ஐ அடைந்ததும் விற்று விட்டீர்களா என வினவினோம்.அதற்கும் பதிலில்லை.அப்புறம் மார்க்கெட் சரிய ஆரம்பித்து விட்டபோது மூன்று மணிநேரம் கழித்து இவர் கேட்கிறார்.நான் என்ன செய்யட்டும் என்று.சந்தை விழுகிறது.விற்று விடுங்கள் என்றௌம்.
விற்க இயலது.பத்து லாட்கள் வைத்திருக்கிறேன்.வைத்திருந்து பார்க்கிறேன்.நாளை ஏறினாலும் ஏறும் என்றார்.
எப்படி இருக்கிறது பாருங்கள்.
ரூ 555 என்ற கட்டணத்திற்கு ஒரு லாட்டில் மட்டுமே குறைந்த லாபத்தில் டிரேடிங் செய்யக் கூடிய பேக்கேஜில் அதுவூம் முழுமையாக பணம் கட்டாமல் 5 டிப்ஸ்களுக்கு பணம் கட்டியிருக்கிறார்.
ஆனால் இவர் என்ன மனக்கணக்கு போட்டிருக்கிறார் என்றால் காஸினோ ஆஃப்ஷன் டிப்ஸில் உள்ள டிப்ஸைத்தான் நாம் இவருக்கும் கொடுத்திருப்போம்.அதனால் ரூ 555ல் ரூ 35555 என்ற கட்டணத்தில் வாங்க வேண்டிய டிப்ஸை புத்திசாலித்தனமாக வாங்கி விட்டதாக நினைத்துக் கொண்டு செய்திருக்கிறார்.இது போல் மூன்று நாட்களாக செய்து வந்திருக்கிறார்.இவரது கெட்ட மனோபாவத்தை இன்றைக்கு அவரது மனதை வைத்தே சந்தை தண்டித்து விட்டது.நாளை இந்த பங்கு ஏறினால் அவருக்கு லாபம்.இல்லையென்றால் நம்மை ஏமாற்றியதற்கு அவர் தண்டம் அழுததாக இருக்கப்போகிறது.
இன்று மாலை கோவிலில் இருந்தபோது ஒரு அன்பர் கோயமுத்துரரிலிருந்து பேசினார்.சிறுமுதலீட்டாளர்களுக்கான ஈக்விட்டி ஸ்பெகுலேட்டிவ் டிப்ஸை(அட்சயதிருதியை ஆஃபர் பகுதியில் கொடுத்திருந்தது.இப்போது அதை நீக்கி விட்டோம்) ரூ 1555க்கு ஈக்விட்டியில் ஏதோ ஜாக்பாட் டிப்ஸ் தருகிறீர்களாமே.அதற்கு சந்தா செலுத்தினால் எத்தனை டிப்ஸ் எவ்வளவூ நாளைக்கு தருவீர்கள் என்று புரியாத மாதிரி கேட்டார்.
நாம் சரியாகவே கொடுத்திருக்கிறௌம்.
இது ஒரே ஒரு டிப்ஸ் ப்ளான்.ஜாக்பாட் அல்ல.ஈக்விட்டி ஸ்பெகுலேட்டிவ் டிப்ஸ் என்று.இதை அவரிடம் உறுதிபடச் சொன்னதும் அடுத்த கேள்வியைக் கேட்டார்.
அப்படியானால் எவ்வளவூ லாபம் எத்தனை ஆயிரம் கிடைக்கும் என்று.ஒரு டிப்ஸ் தருகிறௌம்.அதில் ஒரே ஒரு ஷேரைக் கூட வாங்கலாம்.பத்து வாங்கலாம்.100 வாங்கலாம்.அதற்கு மேலும் வாங்கலாம்.அதைப் பொறுத்துதானே எத்தனை ஆயிரங்கள் கிடைக்குமென்று தெரியூம்.அதையூம் கோபப்படாமல் பொறுமையாகச் சொன்னோம்.அவரது அடுத்த கேள்வியில் ஒளிந்திருந்த பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது.
எஃப்அன்ட்ஒவில் உள்ள பங்காகப் பார்த்துக் கொடுப்பீர்களா? என்றார்.
அதாவது ஈக்விட்டி டிப்ஸை ரூ 1555க்கு வாங்கிக் கொண்டு இவர் புத்திசாலித்தனமாக ஸ்டாக் ப்யூச்சரில்(டெரிவேட்டிவ்வில்) டிரேடிங் செய்வாராம்.அதில் பத்து லாட் கூட எடுப்பாராம்(இதை அவர் சொல்லவில்லை.நாமாக யூகிக்கிறௌம்) அப்படி செம லாட் எடுத்து செம லாபம் பார்ப்பாராம்.நமக்கு ரூ 1555ஐ துரக்கி எறிவாராம்.நாமென்ன ரோட்டிலா கடை போட்டு வியாபாரம் செய்கிறௌம்?
அதனால் சிறுமுதலீட்டளார்களுக்கான ஈக்விட்டி டிரேடிங் டிப்ஸ் பேக்கேஜ்களை இன்றிலிருந்தே நீக்கி விடுகிறௌம்.இனி இந்த டிப்ஸ்கள் கிடையாது.
இன்னொன்றும் இன்றிலிருந்தே அமல்படுத்தினோம்.நமது மெயின்வெப்சைட்டில் பங்குகளில் பெயர்களை வெளிப்படையாக (ஆஃப்ஷன் எஃப்அன்ட்ஓ ஈக்விட்டி என்று) குறிப்பிட்டு சிபாரிசு செய்திருப்பதையூம் நிறுத்தி விட்டோம்.
இனி நமது தளத்தைப் பொறுத்தவரை சிறுமுதலீட்டாளர்கள் பெரிய முதலீட்டாளர்கள் என்று யாரையூம் பிரித்துப் பார்க்கப்போவதில்லை.எல்லாரையூம் பொதுவாக 'முதலீட்டாளர்கள்" என்றே குறிப்பிடப்போகிறௌம்.
நாம் சொல்வதை சரியாகப் புரிந்து கொண்டு நம்முடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் முதலீட்டாளர்களை முன்னேற்ற நாம் தயாராகவே இருக்கிறௌம்.நம்மையூம் நமது தளத்தையூம் சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர்கள் என்றுமே முன்னேறத்தான் செய்கிறார்கள்.நீங்களும் அவர்களில் ஒருவராக இருக்க வேண்டுமென்று விரும்புகிறௌம்.
ஆஃபர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.கடைசி தேதியை கண்டிப்பாக நீட்டிக்க மாட்டோம்.
ConversionConversion EmoticonEmoticon