இந்த பதிவை எழுதவேண்டாம் என பலமுறை நினைத்திருந்தேன்.இல்லை எழுதி விடு என்றார்கள் எனது நண்பர்களும் நலம் விரும்புபவர்களும்.அதனால்தான் இந்த பதிவூ.
ஒரு அன்பர் நம்மிடம் தபால்வழிப் பயிற்சியில் சேருகிறார்.பயிற்சி பத்து நாட்களில் முடிவடைகிறது.நம்மிடம் ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கையூம் துவங்கியிருக்கிறார்.அதன்பின் பேஸ்புக்கில் தான் அஷோக்லைலன்ட் ஷேரில் ரூ 68000 சம்பாதித்து விட்டதாக அறிவிக்கிறார்.நாமும் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது ஆமாம் சார்.உங்களிடம் படித்ததால்தான் இந்த வெற்றி கிடைத்தது.ஆஃப்ஷனில் இந்த லாபத்தை அடைந்து விட்டேன் என்கிறார்.அப்போது நம்மிடம் உள்ள அவரது டிரேடிங் கணக்கை ஒரு நாள் எதேச்சையாக பார்வையிட்டபோது அதில் பணமே இல்லை.ஒரு நாள் கூட அவர் டிரேடிங்கே செய்யவில்லை.மறுபடியூம் அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ஆமா சார் நான் ஆர்டர் எதுவூம் போடவில்லைதான் என்று தவறை ஒப்புக் கொண்டு விட்டார்.சரி பின் எப்படி லாபம் வந்தது என்றதற்கு சும்மா பேஸ்புக்கில் போட்டதாக தெரிவித்தார்.
இதன்பின் இந்த அன்பர் வேறொரு இடத்தில் ஷேர் டிரேடிங் பயிற்சியை முடித்திருக்கிறார்.அதன்பிறகு இரண்டொரு நாட்களில் அந்த இடத்தில் பயின்ற பயிற்சியைக் குறிப்பிட்டு தாங்கள்தான் இந்த மார்க்கெட்டில் லாபம் அடைகிறௌம் என்று பேஸ்புக்கில் போட்டிருந்தார்.ஒரு நாள் அந்த பயிற்சியில் பயின்றவர்கள் மட்டும்தான் இந்த மார்க்கெட்டில் லாபம் அடைந்திருந்தாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே அவர் வேறொரு இடத்தில் பயிற்சியில் சேர்ந்திருந்தாரல்லவா அந்த பயிற்றுநர் அவரது டைம்லைனில் ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார்.அவரிடம் பயிற்சி வகுப்பிற்கு மாணவராக வந்த ஒருவர் அந்த பயிற்றுநரிடம் பயின்ற ஒவ்வொருவரிடமும் சென்று(பேஸ்புக்கில் இதுபோல ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வது எளிது) பணம் வாங்கி தான் டிரேடிங்செய்து தருகிறேன் என்று கிட்டத்தட்ட இருபத்தியிரண்டு லட்ச ரூபாயை கலக்ட் செய்து விட்டதாக வருந்தியிருந்தார்.
இது என்னடா புதுக்கதையாக இருக்கிறதே என்று நாமும் நமது தளத்தில் ஒரு அறிவிப்பு தந்திருந்தோம்.நாம் யாரிடமும் பணம் வாங்குவதில்லை. பணம் கொடுக்க வேண்டாம் என்று.அத்துடன் நம்மிடம் பயின்ற ஒருவர் டிரேடிங்கே செய்யாமல் அஷோக்லைலன்டில் 68000 லாபம் வந்திருந்ததாக பொய்யாக ஸ்டேட்டஸ் போட்டிருந்ததையூம் குறிப்பிட்டிருந்தேன்.
இது நமக்கே வெட்டப்பட்ட ஒரு டிராப் (trap) என்று தெரியாமல் நாம் நமது தளத்தில் அறிவிப்பு வெளியிட்டு விட்டோம்.இதன்பின்தான் அந்த பொய்யன்பரகள் தாம் துரம் என்று குதித்தார்கள்.
நாம் ஏதோ பொறாமைப்படுவதாகவூம் அந்த அரசாங்க பணியில் இருக்கிற அதாவது நம்மிடம் பயின்று விட்டு பொய்த்தகவல் கொடுத்த திருச்சியை சேர்ந்த அந்த அன்பரை நாம் திட்டமிட்டு அவறுதுரறு பரப்புகிறௌம் என்றும் குதித்தார்கள்.நமது அந்த முந்தையப் பதிவை நீங்கள் வாசித்துப் பார்த்திருந்தீர்களானால் உங்களுக்கு உண்மை புரியூம்.நாம் யாரையூம் அவதுறாகக் குறிப்பிடவில்லை.
அந்த பயிற்றுநர் என்னை அவரது டைம்லைனில் போட்டுக்கொண்டுள்ள பதிவில் பலமுறை "முட்டாள்" என்றும் என்னை "ஆ சிரியன்" என்றும் குறிப்பிட்டு கேலி செய்துள்ளார்.நம்மிடம் பயின்று விட்டு சென்ற அந்த திருச்சியைச் சேர்ந்த அந்த அரசாங்கத்தில் பணிபுரியூம் அன்பரும் என்னை தனது பதிவூகளில் 'தட் மேன்' (that man) என்று எழுதி நாம் வழக்கமாக அன்போடும் கருணையோடும் குறிப்பிடும் "வாழ்க பணமுடன்" என்ற வார்த்தைகளை கேலி செய்துள்ளார்.அதாவது பணத்தை கேலி செய்துள்ளார்.
ஒரு உயர்ந்த கல்வி நிலையத்தில் அறிவார்ந்த பேராசிரியர்களிடம் இன்ஜினியரிங்கில் பட்டமேற்படிப்பு படித்து விட்டு முப்பத்தி மூன்று வருடங்களாக பங்குச்சந்தையில் இருக்கிற நமக்கு இது போல எல்லாம் திரித்து எழுதி சீன் கிரியேட் பண்ணத் தெரிவதில்லை.
சரி இதற்கு தாம்துரம் என்று குதிக்கிறார்களே.அவர்கள் பதிவில் எழுதியது உண்மையானால் அந்த பயிற்றுநரிடம் பயின்று அவரது மாணவர்களிடம் முறைகேடாக பணம் கலெக்ட் செய்த ஆசாமி யார் என்ற விஷயத்தை ஏன் அவர்கள் பகிரங்கமாக வெளியிடவில்லை.வெளியிடமாட்டார்கள்.இந்த திருச்சி அன்பரை வைத்து அவர்கள் மார்க்கெட்டைப் பிடிப்பதற்காக நடத்திய நாடகம் என்பது இப்போது புரிந்து போனது.
நம்முடையது கார்ப்பரேட் நிறுவனம்.தேசியபங்குச்சந்தையால் முறையாக தேர்வூகள் எழுதி சர்ட்டிஃபைடு டிரைனர் என்றும் என்எஸ்சி சர்ட்டிஃபைடு மார்க்கெட் புரொபஷனல் என்று இருக்கிற நாம் எங்கே, மூன்று வருடங்கள் முன்பாக முளைத்து வந்த இவர்கள் எங்கே என்று நம்மாலும் எழுத முடியூம்.ஆனால் எழுத மாட்டோம்.
மிகுந்த ஒழுக்கத்திலும் பக்தியிலும் ஆன்மிகத்திலும் இருக்கிற நமக்கு ஒருபோதும் அது போன்ற கயமைத்தனமான எண்ணங்கள் வராது.
நாம் உண்டு.நமது வேலை உண்டு என்று என்று நம்போக்கில் சென்று கொண்டிருந்த நம்மை "முட்டாள்" என்றும் "ஆ சிரியன்" என்றும் சொல்ல வைத்த அந்த திருச்சியைச்சேர்ந்த அரசாங்கத்தில் பணிபுரியூம் அந்த அன்பரையூம் அந்த பயிற்றுநரையூம் நான் அன்றாடம் மனமுருகி வணங்கும் ஸ்ரீபிரத்யங்கராதேவியூம், பாண்டிமுனீஸ்வரரும் பார்த்துக் கொள்வார்கள்.அவர்களுக்கு தக்க தண்டனையை வழங்கி பாடம் புகட்டுவார்கள்.
நமது தளத்திற்கு வருகை தரும் அன்பர்கள் உண்மை நிலையை புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே வேறுவழியியில்லாமல் இதனை எழுதியூள்ளேன்.
ConversionConversion EmoticonEmoticon