ஷேர் டிரேடர்களில் இரண்டு வகை உண்டு.துணிச்சலாக என்ன ஆகப்போகிறது.ஒரு கை பார்த்து விடலாம் என்று துணிந்து உள்ளே இறங்கி விடுவது.இன்னொன்று இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணலாம்.இப்போது போனால் ஏதாவது நஷ்டமாகி விடும்.இன்னும் கொஞ்சம்..இன்னும் கொஞ்சம் என்றே காலங்கடத்திக் கொண்டே போய் கடைசியில் எதையூம் சம்பாதிக்காமல் அப்புறம் திடீரென்று ஒரு 'பையிங் இம்பல்ஸ்' மார்க்கெட்டில் வரும்போது சரியான விலையில் உள்ளே போவதாக நினைத்துக் கொண்டு தவறாக விலையில் உள்ளே போய் தவறான விலையிலேயே வெளியே வந்து நஷ்டப்பட்டபின் கையைப் பிசைந்து கொண்டிருப்பது.
ஒரு நாள் பயிற்சி வகுப்பிற்கு செல்லலாம் என்றௌ தனிப்பட்ட முறையில் உங்கள் ஒருவருக்கு மட்டும் மார்க்கெட்டில் உட்கார வைத்து பயிற்சி அளிப்பார்கள்.அங்கே செல்லலாம்.அல்லது மிகவூம் சீப்பாக ஃபீஸ் வாங்குகிறார்கள்.அங்கே போகலாம்.பேஸ்புக்கிலோ டிவிட்டரிலோ யாரோ அவர் சென்று வந்த பயிற்சி பற்றி சிலாகித்து பாராட்டிப் போட்டிருக்கிறார்.அந்த பயிற்சிக்குப் போகலாம் என்று எண்ணாதீர்கள்.
முதலில் ஒரு நாள் பங்குச்சந்தைப் பயிற்சி பற்றி.நாமும் இது போன்ற ஒரு நாள் பங்குச் சந்தை பயிலரங்கத்தை ஒவ்வொரு ஊரிலும் முன்பெல்லாம் நடத்தியிருக்கிறௌம்.காலையில் 9.30 மணிக்கு துவங்கும் பயிற்சியில் மெயின் டாபிக்கிற்கு வரும்போது 11.00 மணியாகி விடும்.உடனே டீ பிரேக் வந்து விடும்.அதன்பின் சில விளக்கங்கள்.சில செய்முறைகள்.சில லைவ் மார்க்கெட் உதாரணங்கள் என்று போக ஆரம்பித்தால் லன்ச் பிரேக் வந்து விடும்.அப்போதே உங்கள் உடலும் மனதும் டயர்டாகிப் போய் பயிலரங்கம் நடத்துவோர் என்ன பேசினாலும் அதை ஆமாம் போடும் மனநிலைக்கு உங்களது மனது வந்து விடும்.மதிய உணவிற்குப்பின் பயிற்சி மந்தமாகும்.அப்புறம் ஒரு டீ பிரேக்.அதன்பின் அவசர கதியில் பயிற்சி 4.30 மணிக்கெல்லாம் முடிந்து போய் கலந்துரையாடலாக மாறிப்போய் சிரிப்பும் கும்மாளமாக முடிந்து வீட்டிற்குப் போய் அமைதியாக உட்கார்ந்து அன்றைய ஒரு நாள் பயிற்சியில் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று யோசித்தால் ஒன்றுமே இல்லை என்றுதான் உங்கள் மனம் நிஜத்தை உணர்த்தும்.
இதுதான் ஆங்காங்கே நடத்தப்படும் ஒரு நாள் பங்குச்சந்தை பயிற்சியின் நிஜமான உண்மை.
அதனால்தான் நமது ஒருநாள் பங்குச்சந்தைப் பயிலரங்கத்தில் என்ன கற்றுக் கொடுப்போமோ அதை அப்படியே ஒரு புத்தக வடிவில் தரப்போகிறௌம்.புத்தகத்தின் பெயர்:"கையருகே பணம்-கோடி கோடியாய்" விலை ரூ 555/- மட்டுமே.விரைவில் இந்த புத்தகம் வெளியாகும்.ஒருநாள் பயிற்சிக்கு பணத்தைக் கொட்டிக் கொடுக்காமல் நமது இந்த ஒரு புத்தகத்தைப் படித்தே நீங்கள் ஒருநாள் பயிற்சியில் பெறப்போகிற விஷயங்களை விட அதிகமாக தெரிந்து கொள்ள முடியூம்.
இன்னொரு கூத்து நடைபெறுகிறது.
தனியாகப் போய் பயிற்சி பெறலாம்.ஒரு தனிப்பட்ட ஒரு ஆளுக்கு மட்டும் ஒருவர் பயிற்சி தருகிறார்.அங்கே போகலாம்.இது பற்றி ஒருவர் பிரமாதமாக இருக்கிறது என்று பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார் என்று போய் பொறியில் மாட்டிக் கொள்வது.
இது போல தனிப்பட்ட ஒரு ஆள் பயிற்சி எல்லாம் வருகிற ஆட்களை லாப்டாப் முன்னார் உட்கார வைத்து.பாருங்கள் மார்க்கெட் எப்படி போகிறது.இப்படி மார்க்கெட் போனால் இப்படி செய்ய வேண்டும்.அப்படி மார்க்கெட் போனால் அப்படி செய்ய வேண்டும் என்று சொல்லச் சொல்ல நீங்கள் தiலையாட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.அன்றைக்கு மார்க்கெட் நன்றாக இருந்து ஒத்துழைத்தால் பார்த்தீர்களா?இதுதான் சூத்திரம்.இதை அவர் சொல்லச் சொல்ல இவர் இங்கேயே உங்கள் கண் முன்னாலேயே இடித்து சூரணம் தயார் செய்வார்..ச்சே..இதுதான் சூத்திரம் என்று உங்களைப் புகழ்ந்து உங்களை உசுப்பேற்றி விட்டு அனுப்பி விடுவார்கள்.அதன்பின் நீங்களும் நாமளும் ரவூடிதான் என்று நீங்கள் ஃபார்ம் ஆகி விட்டதாக நினைத்துக் கொண்டிருப்பீர்கள்.அதன்பின் என்றாவது வரும் ஒரே ஒரு ஒரு டிரேடிங் போதும்.உங்களது அத்தனை சேமிப்பையூம் அடித்துக் கொண்டு போய் விட.
அப்புறம் யாரோ அங்கே நன்றாக இருக்கிறதாம்.இங்கே நன்றாக இருக்கிறதாம்.இலவசமாக சிடி தருகிறார்களாம்.ஒரு மாதம் இலவச டிப்ஸ் கிடைக்குதாம் என்று ஆட் ஃபிலிம் சூட்டிங்கிற்கு சச்சின் தெந்துல்கரும் சச்சிதானாந்தா சாமியூம் வந்திருக்கிறார்கள் ரேஞ்சுக்கு புளகாங்கிதம் அடைந்து போய் ஏமாந்து போய் விடுவீர்கள்.
அதற்காகத்தான் உங்களது வசதிப்பட்ட நேரத்தில் நீங்கள் தமிழில் இருந்த இடத்திலேயே படித்துக் கொள்வதற்காகத்தான் நமது தபால்வழிப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.தேசிய பங்குச்சந்தையால் (National Stock Exchange of India certified trainer) 'சர்ட்டிஃபைடு டிரைனர்" என்றும் "சர்ட்டிபைடு மார்க்கெட் புரொபஷனல்"(NSE certified market professional) என்றும் சான்றளிக்கப்பட்டிருக்கும் நான் எனது 33 வருட ஷேர் டிரேடிங் அனுபவத்தில் கிடைத்த யூக்திகளைக் கொண்டுதான் எதைச் செய்ய வேண்டும்.எப்படி செய்ய வேண்டுமென்று பயிற்சி வகுப்பிற்கான பாடங்களை டிசைன் செய்திருக்கிறேன்.அதில் வெற்றி தரும் ஸ்ட்ராட்டஜிகளையூம் குறிப்பிட்டிருக்கிறேன்.அதிலும் முதல்நிலை தபால்வழிப் பயிற்சி என்பது ஆஃப்ஷன் பற்றி எதுவூம் தெரியாதவர்கள் கூட சிறிய முதலீட்டில் ஆஃப்ஷன் டிரேடிங் செய்து தாங்களே சம்பாதித்துக் கொள்வதற்காக ஏற்பட்டது.இந்த பயிற்சியில் வெற்றி பெறும் முயற்சிகளைத் தரக்கூடிய ஸ்ட்ராட்டஜிகளை மட்டும்தான் கொடுத்திருக்கிறௌம்.இதனை சரியாகப் பயன்படுத்தினால் நீங்கள் நிச்சயம் சிறுகச் சிறுக உங்களது லாபத்தை அதிகரித்துக் கொண்டு அதன்பின் அந்த லாபத்தை மறுமுதலீடு செய்து உயரலாம்.அதிகமும் சம்பாதிக்கலாம்.
முதல்நிலைப் பயிற்சிக்கான பயிற்சிக்கட்டணம்: ரூ 5555 /-மட்டுமே.இந்த பயிற்சி உங்களை உயர்த்தும் ஒரு முயற்சியாக இருக்கும்.பயிற்சியில் சேரவிரும்புவோர் பின்வரும் வங்கிக் கணக்கில் கட்டணத்தை செலுத்தி விட்டு கட்டணம் செலுத்திய விபரத்துடன் bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு தெரிவித்து விட்டு பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்
T.A.Vijey
Saving a/c No: 3054101003602
Canara Bank Branch name:P&T Nagar
IFSC/RTGS code: CNRB 000 3054
ConversionConversion EmoticonEmoticon