புதியபறவை பதிப்பகத்தின் அடுத்த வெளியீடாக வெளிவர இருப்பது
இருநாள் பங்குச்சந்தைப் பயிற்சி பயிலரங்கத்தில் சொல்லிக்கொடுப்பவைகளை முழுக்க முழுக்க புத்தக வடிவில் வரும் - "கையருகே பணம் கோடி கோடியாய்..." இத்துடன் வெளிவர உள்ள இன்னொரு புதுமையான புத்தகமான-
"பணம் தரும் யோகா" புத்தகத்திலிருந்து சாம்பிளுக்கு ஒரு பகுதி இதோ:
கண்ட கண்ட பங்குகளில் இதை எடுக்கலாமா அதை எடுக்கலாமா என்று ஒவ்வொரு பங்காகத் தாவித் தாவி சென்று டிரேடிங் செய்து லாபமோ நஷ்டமோ எதைத் துரத்துவது என்று இலக்கில்லாமல் ஓடிக்கொண்டிருப்பதுதான் பெரும்பாலான முதலீட்டாளர்களின் குணாதிசயமாக இருக்கிறது.
இப்படி கண்டபடி ஓடாமல் ஒரே பங்கை மட்டும் புரிந்து கொண்டு அந்த பங்கிலிருந்தே பணம் கொட்ட வைக்கும் வித்தையை யோகா வாயிலாக கற்றுக் கொண்டால் எத்தனை இனிமையாக இருக்கும்.இதை பல வருட தேடலுக்குப்பின்தான் பத்து வருடங்கள் முன்பாகக் கற்றுக் கொண்டேன்.அதை எனது உயர்நிலைப் பங்குச்சந்தைப் பயிற்சிக்கு வருபவர்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களும் அதை வெற்றிகரமாக கடைபிடித்து வருகிறார்கள்.அதாவது உங்களுக்கு தாகம் வந்தால் குழாயைத் திறந்து தண்ணீர் பிடித்துக் குடிப்பது போல உங்களுக்கு பணம் வேண்டுமென்று தோன்றினால் குறிப்பிட்ட ஒரு பங்கை எடுத்து அதில் டிரேடிங் செய்து அப்போதே பணத்தை எடுத்துக் கொள்வது போன்ற முயற்சிதான் இது.
நம்பமுடியாமல் இருக்கும் நான் சொல்வது.ஆனால் செய்து பார்த்தால்தான் இந்த டெக்னிக் அருமையாக செயல்படுவதைப் புரிந்து கொள்ள முடியூம்.
இதற்கு முதலில் தேவையான பொருள் என்ன தெரியூமா?
நம்பிக்கை.அதுதான் இந்த யோகாசனத்திற்கு மூலதனம்.
சரி விஷயத்திற்கு வருகிறேன்.
உங்களுக்கு பிடித்தமான அல்லது மிகவூம் மொமன்டம் உள்ள இன்ட்ரா டே டிரேடிங்கிற்கு ஏற்றதாக உள்ள ஒரே பங்கை மட்டும் தேர்வூ செய்து கொள்ளுங்கள்.உதாரணமாக டாடாமோட்டார்ஸ் (இது உதாரணத்திற்கு மட்டும்தான்.நீங்கள் வேறு எந்த பங்கையூம் எடுத்துக் கொள்ளலாம்) பங்கை எடுத்துக் கொள்வதாக இருந்தால் நீங்கள் தினமும் காலையிலோ மாலையிலோ அல்லது மதியம் உணவூ இடைவேளையிலோ எப்போது உங்களுக்கு அமைதியாகவூம் தனிமையாகவூம் நேரம் கிடைக்குமோ அந்த நேரத்தில் ஒரு முதலில் ஐந்து நிமிடமும் போகப்போக பத்து நிமிடமும் எடுத்துக் கொள்ளுங்கள்.
அமைதியாக அமருங்கள்.பத்மாசனம் போட்டெல்லாம் அமர வேண்டாம்.சாதாரணமாக நாற்காலியில் கூட அமரலாம்.ஆனால் அந்த அறையில் வேறு சப்தம் இருக்கக்கூடாது.அதாவது உங்களது கவனம் கலையக் கூடாது.
இதை செய்யூம் போது வயிறு முட்ட சாப்பிட்டிருக்க கூடாது.மைல்டாக உணவருந்தியிருக்கலாம்.நன்கு காரசாரமான மசாலா கலந்த உணவை அருந்தியிருக்கக் கூடாது.ஏனெனில் உங்கள் உடலில் பரபரப்பான வேதியல் மாற்றம் நிகழும் போது யோகா பலன் தராது.
ஒரு அசைவற்ற யோகா என்று இதனை நான் சொல்வேன்.அமைதியாக கண்களை தியானம் செய்வது போல மூடிக் கொள்ளுங்கள்.முதலில் இறைவணக்கமாக உங்களுக்குப் பிடித்த தெய்வத்தையோ அல்லது விநாயகரையோ மனதார வணங்கி விட்டு "டாடா மோட்டார்ஸ்" என்ற பெயரை மௌனமாக உள்ளுக்குள் உச்சரிக்க ஆரம்பியூங்கள்.சப்தமாக உச்சரிக்கக் கூடாது.முடிந்தால் டாடாமோட்டார்ஸ் என்ற பெயரை அதன் லோகோவை மனக்கண்ணால் காண முடியூமா என்று பாருங்கள்.
திரும்பத் திரும்ப அந்த பங்கின் பெயரை சொல்லிக் கொண்டே வாருங்கள்.இந்த யோக-தியானத்தை முடிக்கும்போது உங்களது அக்கவூன்ட் உள்ள வங்கியை கற்பனை செய்யூங்கள்.அந்த வங்கிக்கணக்கில் பணம் நிறைவது போல கற்பனை செய்யூங்கள்.அதன்பின் கண்களைச் சுருக்காமல் இதமாக இமைகளைப் பிரித்து கண்களை திறந்து சட்டைப் பையைத் தொட்டுப் பாருங்கள்.
இதனை செய்து முடித்ததும் நீங்கள் பேசுகிற முதல் வார்த்தை பாசிட்டிவ்வான வார்த்தையாக இருக்க வேண்டும்.யாராவது உங்களிடம் வந்து பேசினாலும் நீங்கள் யாரிடமாவது சென்று பேசினாலும் பாசிட்டிவ்வாக பேச்சை துவங்குங்கள்.உடனடியாக யாரிடமும் பேசவில்லை பேச யாரும் கிடைக்கவில்லை என்றால் கூட பேஸ்புக் திறந்து ஒரு பாசிட்டிவ்வான ஸ்டேட்டஸை போடுங்கள்.ஏன் இந்த டெக்னிக்கை சொல்லிக் கொடுத்த எனக்கே கூட ஒரு நன்றி தெரிவித்து ஸ்டேட்டஸ் போடுங்களேன்.
இந்த தியான-யோகாவை குறைந்தது 48 நாட்கள் வரை செய்ய வேண்டும்.ஒரே நேரத்தில்தான் செய்ய வேண்டும்.காலையில் செய்தால் காலையில் மட்டுமே செய்ய வேண்டும்.மாலையில் செய்தால் மாலையில்தான் செய்ய வேண்டும்.முடிந்தவரை ஒரே நேரத்தை நீங்கள் கடைபிடித்தால் உங்களது மனம் மட்டுமல்லாது உங்களது உடலில் இருக்கிற பயாலஜி கடிகாரமும் அதனை ஏற்றுக் கொண்டு இதனை நம்ப ஆரம்பித்து விடும்.எந்த ஒரு செயலும் உடலும் மனமும் இணைந்தால்தான் வெற்றி பெறும்.ஆக இந்த செயல் எளிதாகும்.அதன்பின் நாளாக நாளாக உங்களுக்கும் நீங்கள் பெயர் சொல்ல ஆரம்பிக்கும் பங்கிற்கும் ஒரு மானசீக தொடர்பு ஏற்பட்டு விடும்.அதன் காரணமாக அந்த பங்கின் ஏற்ற இறக்கங்கள் மட்டுமல்லாது எந்த புள்ளியில் அடிக்கடி அந்த நிலைகொள்ளும் என்பதெல்லாம் உங்களுக்கு அத்துப்படியாகி விடும்.எப்போது அந்த பங்கு விலை ஏறும்.எப்போது அந்த பங்கு விலை இறங்கும் என்பதை உங்களது உள்ளுணர்வூ இந்த மானசீக தொடர்பினால் உங்களுக்கு தெரிவித்து விடும்.அதன்பின் எப்போது அந்த பங்கை டிரேடிங் திரையில் பார்த்தாலும் அதன் போக்கு பிடிபட்டு லாங்கோ ஷார்ட்டோ சரியாக நீங்கள் ஆர்டர் போட ஆரம்பித்து விடுவீர்கள்.
இந்த கட்டுரை புதியபறவை பதிப்பகத்தின் அடுத்த வெளியீடான -
"பணம் தரும் யோகா'விலிருந்து உங்களது சாம்பிள் வாசிப்பாக தரப்பட்டுள்ளது.இது போல இன்னும் பல பயனுள்ள கட்டுரைகள் இந்த புத்தகத்தில் உள்ளன.
வாழ்த்துக்கள்!
வாழ்க பணமுடன்!
ConversionConversion EmoticonEmoticon