ஜாக்பாட் லாபம் என்றால் கொழுத்த லாபம்.பல ஆயிரங்களில் குறைவான நாட்களில் அல்லது சில மணிநேரங்களில் லாபம் என்று அர்த்தம்.அதாவது ஒரு மோட்டார்ரேஸில் மோட்டார்பைக்கில் பந்தயத்தில் கலந்து கொண்டு லட்சக்கணக்கில் பரிசு வெல்வதைப் போன்றது.
மோட்டார்பைக் ரேஸ் என்றாலே முதலில் புரிந்து கொள்ள வேண்டியது -
1.மோட்டார் பைக்கைத்தான் பயன்படுத்த வேண்டுமென்பது.
2.யாராவது அவர்கள் பைக்கை ஓட்டுவார்கள்.அதில் ஓசியில் லிஃப்ட் கேட்டு உட்கார்ந்து கொண்டு போகலாம்.பின்னால் உட்கார்ந்து வந்ததால் பரிசு கொடுப்பார்கள் என்று எண்ண வேண்டாம்.அதாவது 'இலவசமாக' எதையூம் எதிர்பார்க்காதீர்கள் என்பதை வேறு எப்படி நாகரீகமாக சொல்வதென்று தெரியவில்லை.
3.மோட்டார் பைக் ரேஸூக்கு டிவிஎஸ் 50 அல்லது பழைய பஜாஜ்எம்80 மோபட்டையோ கொண்டு போய் நிறுத்திக் கொண்டு வண்டி மெதுவாக ஓடுகிறதே என்று அங்கலாய்க்கக்கூடாது.
இப்போது மெயின்மேட்டருக்கு வருவோம்.
ஜாக்பாட் லாபம் அடைய வேண்டுமானால் பெரிய அளவில் முதலீடு தேவைப்படும் என்பது நிதர்சனமாக உண்மை.ஆனால் சிறிய முதலீட்டையூம் வைத்துக் கொண்டு ஒரு நடுத்தர டிரேடராலும் ஜாக்பாட் லாபம் அடைய முடியூம்.அதற்கு ஒரு பங்கையூம் அதன் விலைப்புள்ளியையூம் தேர்ந்தெடுக்கும் முறைதான் சரியாக இருக்க வேண்டும்.
ஒரு பங்கின் உதாரண விலை ரூ 370 என்று வைத்துக் கொள்வோம்.அதாவது அடிக்கடி அந்த பங்கு மேலே போனாலும் கீழே வந்தாலும் அடிக்கடி இந்த 370 என்ற விலையில் நிலை கொள்கிறது என்று வைத்துக் கொள்வோம்.அப்போது நீங்கள் டிரேடிங் செய்வதற்கு முன்னால் அந்த பங்கு 370க்கு கீழே இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.சுமாராக முப்பது ரூபாய்க்குள் வித்தியாசம் இருக்க வேண்டும்.
என்ன சொல்ல வருகிறேன் என்றால் அந்த பங்கு 340க்கு மேலே இருக்கிறபோது உள்ளே போய் அதன் கால் ஆஃப்ஷனை 370 என்ற ஸ்ட்ரைக் பிரைசில் வாங்கி விட வேண்டும்.அதன்பின் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.வாங்கிய பிறகு பங்கு 340க்கு கீழே போனால் விற்றுத் தள்ளி விட்டு வந்து விட வேண்டும்.மாறாக அந்த பங்கு 370க்குப் போனால் சுலபமாக ஜாக்பாட் லாபத்தை தந்து விட்டுத்தான் கீழே வரும்.
இதை எப்படி இப்போது செய்தோம் என்பதை பிராக்டிக்கலாகக் காட்டுகிறேன் பாருங்கள்.
பங்கின் பெயர்:டாடாஸ்டீல்
ஆஃப்ஷனின் பெயர்:டாடாஸ்டீல் 370கால் ஆஃப்ஷன்
வாங்கிய விலை:ரூ 1.50
வாங்கிய தேதி: 17.04.2015
இதை வாங்கச் சொன்னபோது டாடாஸ்டீல் 340என்ற விலைக்கு அருகாமையில் ஆனால் 340க்கு மேலே டிரேடாகிக்கொண்டிருந்தது.வாங்கிய அன்றே இது ரூ 3.00க்கு இந்த ஆஃப்ஷன் சென்றது.இந்த ஆஃப்ஷனை பிராய்லர் கோழியாக நினைத்தவர்கள் வெட்டி மசாலா தடவி விட்டார்கள்.ஆனாலும் அதில் டபுள் மணி லாபம்தான்.இது ஒரு பொன் முட்டை இடும் வாத்து ஆக இருக்குமென்று நம்பியவர்கள் அப்படியே வைத்து அடைகாத்தார்கள்.
இன்று டாடாஸ்டீல் 370ஐ தாண்டி விடும் போல ஆசை காட்டி 368வரை சென்றது.விற்று விடுங்கள் என்று நமது ஆஃப்ஷன் ஜாக்பாட் தபால்வழிப் பயிற்சியில் சேர்ந்திருந்த அன்பர்களிடம் தெரிவித்திருந்தோம்.
விற்று விட்டார்கள்.
ரூ 1.50க்கு வாங்கிய ஆஃப்ஷனை ரூ 6.50க்கு விற்க முடிந்தது அதுவூம் ஐந்தே நாட்களில்.
இப்போது இதற்கு என்ன முதலீடு ஆனது என்பதைப் பார்ப்போம்.
பத்து லாட்கள் டாடாஸ்டீல் 370 ஆஃப்ஷனை ரூ 1.50 என்ற விலையில் (இதன் லாட் அளவூ: 500தான்) எடுப்பதற்கு ஆன முதலீட்டுத் தொகை:
ரூ 7500தான் ஆனது.இதன் விற்றுவரவூ எவ்வளவூ என்று பாருங்கள்.
இந்த ஏழாயிரத்தி ஐநுரறு இப்போது ரூ 32500ஆக உயர்ந்து விட்டது.
இப்படித்தான் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த முதலீட்டாளர்கள் கூட ஒரு பங்கை சரியாகப் பிடித்துப் போட்டு குறைவான முதலீட்டில் ஜாக்பாட் லாபத்தை அடைய வேண்டும்.
தினம் தினம் டிரேடிங் செய்ய சின்னச் சின்ன இன்ட்ரா டே லாபத்தை வைத்துக் கொள்ளுங்கள்.இது போல ஒரு டிரேடிங்கில் குறைவான முதலீட்டில் இருபத்தைந்தாயிரம் ரூபாய் லாபத்தை அடையூம் வாய்ப்பு ஒரு மாதத்தில் இருபது பங்குகளில் கிடைக்கும்.அத்தனை வாய்ப்பையூம் பயன்படுத்த முடியாவிட்டாலும் ஒரு மாதத்திற்கு இது போல நான்கு முறை நீங்கள் டிரேடிங் செய்து வந்தால் கூட மாதம் ஒரு லட்சத்தை அடையூம் வாய்ப்பை அடையலாம் என்பதைத்தான் சொல்வதோடு அவ்வப்போது நிரூபித்தும் வருகிறௌம்.
ஆனால் இதை செய்வதற்கு மூன்று விஷயங்கள் வேண்டும்.
1.நம்பிக்கை
2.குருபக்தி
3.அர்ப்பணிப்பு.அதாவது அலட்சியப்போக்கு அவசரம் இல்லாத பொறுமையான டிரேடிங்.
இவை இருந்தால் நீங்களும் மாதாமாதம் லட்சங்களைப் பார்க்கலாம்.
இன்றைக்கு கூட பேஸ்புக்கில் 'செந்தில்செல்வா' என்ற பெயரில் ஒரு அன்பர் அவர் ஐம்பதாயிரம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் எவ்வளவூ லாபம் கிடைக்குமென்று கேட்டிருந்தார்.இந்த பதிவைக் கூட அதற்கான பதிலாக உருவகப்படுத்திக் கொள்ளலாம்
ConversionConversion EmoticonEmoticon