"விசிட்டிங் கார்டை வெளியே எடுங்கள்"
இந்த உலகில் எல்லாமே இரண்டு இரண்டாக இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? பைனரி(binary) என்ற சிஸ்டத்தை நாம் கம்ப்யூட்டரில் பயன்படுத்துகிறௌம் என்று நாம் பெருமையாக நினைப்பது தவறு.நம் பைனரியை பயன்படுத்துவதற்கு முன்பே உலகமே பைனரியாகத்தான் இருக்கிறது.
பைனரி என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்காக ஒரு வார்த்தை.கம்ப்யூட்டருக்கு எல்லாமே ஒன்று மட்டும் புஜ்ஜியம்தான்.ஒன்று என்றால் அங்கே மின்சாரம் பாயூம்.பூஜ்ஜியம் என்றால் பாயது.வெற்றாக இருக்கும்.ஒன்று என்றால் ஓகே.பூஜ்ஜியம் என்றால் நாட் ஓகே.இப்படித்தான் பூலியன் அல்ஜிபிராக்களில்(boolean algebra) எல்லாம் சொல்வார்கள்.
உலகத்தையூம் பாருங்கள்.
பகல்-இரவூ
பகல் என்றால் வெளிச்சம்.இரவூ என்றால் வெளிச்சம் கிடையாது.
தண்ணீர்-வரண்ட பாலைவனம்.
பசுஞ்சோலை-கருவேலை மரங்கள்.
இன்பம்-துன்பம்
நட்பு-பகை
இப்படித்தான் எல்லாமே எதிரெதிராக இருக்கின்றன.ஆகவே மனிதர்களிலும் இரண்டே இனம்தான் உண்டு.அது இதுதான்.
ஜெயிப்பவர்கள்- தோற்பவர்கள்.
சுயநம்பிக்கையூள்ளவர்கள்-அவநம்பிக்கையூள்ளவர்கள்.
இப்படி இரண்டே பிரிவூதான் உண்டு என்பதால் நீங்கள் எந்த பிரிவை சேர்ந்தவர் என்பதை உங்களது மனதை நீங்களே கேட்டுப் பாருங்கள் தெரியூம்
இப்போது ஒரு பேச்சுக்கு நீங்கள் 'தோற்கப்பிறந்தவர்கள்' அணியில் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.அங்கிருந்து ஜெயிக்கப்பிறந்தவர்கள் அணிக்கு மாறுவது சுலபமா என்றால் சுபலமில்லை.மாறவே முதலில் முடியாது.இதெல்லாம் நம் தலைவிதி என்ற பதில்தான் கிடைக்கும்.
ஆனால் ஒரே ஒரு சின்ன ஐடியாவை வைத்து அபிஷேக் பச்சன் போல மாறி விடலாம்.
அதென்ன ஐடியாஜி?
உங்களது விசிட்டிங் கார்டை எடுத்துப் பாருங்கள்.அதில்தான் எல்லா விஷயமும் இருக்கிறது.
என்னது விசிட்டிங் கார்டு இல்லையா?
பிசினஸ் ஆட்களுக்குத்தான் விசிட்டிங் கார்டு இருக்கும்.எனக்கெதற்கு அதனால் அடிக்கவில்லை என்கிறீர்களா?
அட.இருக்கிறது.நன்றாக பாருங்கள்.இந்த உலகிலுள்ள அத்தனை மனிதர்களிடமும் விசிட்டிங் கார்டு இருக்கிறது.விசிட்டிங் கார்டு இல்லாமல் ஒரு மனிதன் முதலில் பிறக்கவே முடியாது.நீங்கள் ஆஸ்பத்திரியில் பிறந்தபோதே உங்களது விசிட்டிங்கார்டு உங்களிடம் கொடுக்கப்பட்டு விட்டது.நீங்கள்தான் அதை சரியாக கவனிக்காமல் இருந்திருப்பீர்கள்.
அதென்ன விசிட்டிங் கார்டு என்கிறீர்களா?
இயற்கையே அடித்துக் கொடுத்திருக்கிற அந்த விசிட்டிங் கார்டுதான் உங்களது முகம்.உங்களது முகம்தான் அந்த விசிட்டிங் கார்டு.கொஞ்சம் கண்ணாடி முன்பாக வHருங்கள்.உங்களது விசிட்டிங் கார்டு எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
சுமார் மூஞ்சி குமார் மாதிரி இருக்கிறதா இல்லை ரொம்ப சுமார் மூஞ்சி குமார் மாதிரி இருக்கிறதா?Click here to get stock options & stock futures free tips
உங்களது முகமே சொல்லி விடும்.உங்களது முகம் சொல்கிறதோ இல்லையோ உங்களது கார்டில் உள்ள லோஹோதான்(logo) உங்களது கண்கள்.அந்த கண்கள் சொல்லி விடும் நீங்கள் ஜெயிக்கப் பிறந்த அணியா இல்லை தோற்கப் பிறந்த அணியா?
முகம் சரியில்லையா?கவலையாகவூம் வெறுப்பாகவூம் அவநம்பிக்கையோடும் காட்சி தருகிறதா?ஆக தோற்கப்போகிற அணியில் இருப்பதை காட்டிக் கொடுத்து விடுகிறதா?
இதை மாற்றி விடலாம்.
சின்ன பயிற்சிதான்.
தினமும் கண்ணாடி முன்பாக சில நிமிடம் அமருங்கள்.முகத்தை நன்றாக பாருங்கள்.மற்றவர்கள் கேலி செய்தாலும் பரவாயில்லை.முகத்தையூம்(கூடுதலாக தலைமுடியையூம்) பராமரிக்க அழகு சாதனங்களை பயன்படுத்தினால் தப்பில்லை.சினிமா ஆட்களும் மாடலிங் ஆட்களும்தான் அவற்றை பயன்படுத்த வேண்டுமென்பதில்லை.நீங்களும் பயன்படுத்தலாம்.முகத்தின் சருமத்தை பராமரியூங்கள்.அடுத்ததாக கண்களில் ஒரு பவர் வருகிற மாதிரி ஒரு தேஜஸ் தெரிகிற மாதிரி கொண்டு வாருங்கள்.Click here to get intraday Nifty futures trading free tips
இதை இரண்டு முறைகளில் கொண்டு வரலாம்.
ஒன்று:யோகா மற்றும் தியானம்.இது எல்லாரும் செய்வது.
இன்னொன்று:நானே கண்டுபிடித்த குறுக்குவழி முறை.உங்களது பாதங்களையூம் கால் விரல்களையூம் நன்றாக பராமரித்து அவற்றை மென்மையாக பஞ்சு போல வைத்திருங்கள்.சொரசொரப்பாகவூம் பித்தவெடிப்புடனும் யாருடை கால்கள் இருக்கிறதோ அவர்களது முகத்தில் இந்த தேஜஸையூம் ஒளியையூம் எதிர்பார்க்க முடியாது.எனவே கால்களை கவனியூங்கள்.சந்தேகமிருந்தால் உங்களது கால் கட்டை விரலில் நகத்தின் மீது ஒரு சொட்டு நல்லெண்ணைய் விட்டுப் பாருங்கள்.அதன் விளைவூ உங்களது கண்களில் தெரியூம்.
எது எப்படியோ இயற்கை தந்த விசிட்டிங் கார்டை சரிவர மாற்றிக்கொண்டு விடுங்கள்.தன்னம்பிக்கை கூடும்.அப்புறம் எதிலும் ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கையே உங்களை உயர்த்தும்.செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள் எப்படி இருக்கிறதென்று.
Click here to get intraday stock updates & free tips
ConversionConversion EmoticonEmoticon