"கொடுங்கள் கொடுக்கப்படும்..."
ரயில் பயணத்திலும் எங்காவது பொதுவான இடங்களில் அமர்ந்திருக்கும்போதும் சிலர் பேசும் விஷயங்களில் உள்ள சுவாரஸ்யமான அம்சங்களை கவனிப்பதுண்டு.அப்படி கேட்டுக் கொண்டிருந்தபோது ரயிலில் பயணம் செய்த ஒரு பெரியவர்.கஸ்டம்ஸில் அதிகாரியாக மிடுக்குடன் வளைய வந்தவர்.தற்போது ஓய்வூ பெற்று மனைவியூடன் வசிக்கிறார்.அவரது பெரிய பையன் மும்பையில் மனைவியூடன் இருக்கிறான்.செல்பேசியில் கூட ஒரு ஹலோ சொல்வதில்லையாம்.சிறிய பையன் சென்னையில் இருக்கிறான்.அவன் மனைவிக்கு இவர்களை கொஞ்சம் கூட பிடிக்காதாம்.பேரப்பிள்ளைகளையூம் ஊருக்கு அனுப்ப மாட்டாளாம்.மகனுக்கு வைரஸ் காய்ச்சல் என்றதும் பிள்ளையைப் பார்க்க இந்த தம்பதிகள் கிளம்பியிருக்கிறார்கள்.கதவை திறந்த மருகள் கேட்ட ஒரே கேள்வி" வந்திட்டிங்களா" என்பதுதான்.இந்த 'வந்திட்டிங்களா" என்பதை பல்வேறு மாடுலேஷன்களில் பல்வேறு பாவங்களுடன் கேட்கலாம்.அந்த பெண்மணி எந்த முகபாவத்துடன் கேட்டிருப்பாள் என்பதை நீங்கயே யூகித்துக் கொள்ளுங்கள்.Click here to know money making techniques in share market
இன்னொரு முதிய மனிதர் ஒரு முதியோர் இல்லத்தில் இருக்கிறார்.ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இல்லத்தை மாற்றி விடுவார்.ஒரே இடத்தில் அடைந்து கிடப்பது தன் மேல் ஏதோ கழிவிரக்கத்தை ஏற்படுத்துவதாக நினைத்துக் கொண்டு இப்படி தன்னை அடிக்கடி டிரான்ஸ்பர் செய்து கொள்கிறார்.இன்சூரன்ஸ் கம்பெனியில் தானைத்தலைவராக..மன்னிக்கவூம்.யூனியன் தலைவராக பந்தாவாக இருந்தவராம்.மனைவி இருந்தவரை மனைவியை ஒரு டொமஸ்டிக் அடிமையாகவே நடத்தியிருக்கிறார்.எந்த விசேஷத்திற்கும் மனைவியை அனுப்ப மாட்டார்.அந்த அம்மாள் ஐந்து வருடங்களுக்கு முன்பு போய் சேர்ந்து விட்டதும் முதியோர் இல்லாத்திற்கு ஜாகையை மாற்றிக் கொண்டு விட்டார்.சென்ற வாரம் இவருக்கு எண்பதாவது பிறந்தநாள் வந்தது.அதை அவரது இரண்டு மகன்களும் விமரிசையாக கொண்டாட வேண்டுமென்று எதிர்பார்ப்பு.மகன்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.பெரிய மகன் தன் மனைவியின் துரத்து சொந்தக்காரர் மகனின் திருமண வேலையாக பிசியாக இருப்பதால் வரவில்லை.இரண்டாவது மகன் வெறும்கையூடன் வந்து இவர் தங்கியிருக்கிற முதியோர் இல்லத்திலேயே நன்றாக கூச்சமில்லாமல் கேட்டு வாங்கி மதிய சாப்பாட்டை வாங்கிக் கொண்டதும் மட்டுமில்லாமல் தன் மனைவியை விட்டு அர்ச்சனை(புரிந்து கொண்டிருந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்) செய்ய வைத்து விட்டு சென்றிருக்கிறான்.ஒரு இனிப்பு.ஒரு பழம்.ஒரு புத்தாடை என்று எதுவூம் கொண்டு வரவில்லை.கைவிடப்பட்டவர்கள் இருக்கிற(பணம் கொடுத்துதான் இருக்கிறார்கள் என்றாலும் ஆதரவில்லையே) முதியோர் இல்லத்தில் நன்றாக மூக்குப் பிடிக்க சாப்பிட்டு விட்டு சென்றிருக்கிறான்.
மேற்கண்ட இரண்டு பேரில் வாழ்க்கையிலிருந்து நன்றாக தெரிவது ஒன்றுதான்.இந்த இரண்டு ஆட்களும் தான் நன்றாக வாழ்ந்த காலத்தில் உத்யோகம் வேலை பந்தா அந்தஸ்து என்று வெளியூலகில் ஜாம்பவான்களாக தன்னைக் காட்டிக்கொண்டு வளைய வந்திருக்கிறார்களே தவிர வீட்டிலுள்ள மனைவி குழந்தைகளை கவனிக்கவில்லை.தான்தான் பெரிய ஆள் என்ற கர்வம் வேறு கிரீடமாக அவர்களது தலையில் அமர்ந்திருக்கிறது.இப்போது உடல் தளர்ந்ததும்ஓடுரா மகன்களைப் பார்க்க என்று பாசம் விரட்டுகிறது.
ஒரு விஷயத்தை கற்பனை செய்து பாருங்கள்.Click here to know how to multiply Rs 163/- in to Rs 1 Crore in 1 year
ஒரு வங்கிக்கு ஒரு முதியவர் செல்கிறார்.அங்கே அவருக்கு சேமிப்பு கணக்கு இருக்கிறது.வங்கிக்கு வருகிறவர்கள் எல்லாம் சலான் எழுதிக்கொடுத்து டோக்கன் வாங்கி அவரவர் அக்கவூன்ட்டிலிருந்து பணம் எடுத்துச் செல்கிறார்கள்.இவர் கோபமாக மேனேஜரிடம்போய் முறையிடுகிறார்.
எல்லாருக்கும் பணம் கிடைக்கிறது.எனக்கு யாரும் பணம் தரலையே.
"உங்க அக்கவூன்ட்ல நீங்க பணம் போட்டிருக்கிங்களா"என்று மேனேஜர் கேட்கிறார்.தலைகுனிகிறார் முதியவர்.
இவர் என்றைக்கு பணம் போட்டிருக்கிறார்.பணத்தை வாங்கித்தானே பழக்கம்.
அன்பையூம் பாசத்தையூம் கூட இப்படித்தான்.போட்டால்தான் பதிலுக்கு கிடைக்கும்.கொடுத்தால்தான் எதுவூமே திரும்ப கிடைக்கும்.எதுவூமே கொடுக்காமல் எனக்கு எதுவூம் யாரும் கொடுக்கவில்லை என்றால் அது முட்டாள்தனமான முறையீடாகத்தான் இருக்கும்.அதை கடவூளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.
எனவே கொடுங்கள்.அப்போதுதான் கொடுக்கப்படும்.
அன்பு பாசம் பணம் எல்லாமே அப்போதுதான் கிடைக்கும்.
எனது 32 ஆண்டு அனுபவத்தில் பின்வரும் ஷேர் டிரேடிங் தொடர்பான புத்தகங்களை எழுதியூள்ளேன்.இந்த புத்தகங்கள் நிச்சயமாக உங்களுக்கு சரியான ஷேர் டிரேடிங் முறைகளை புரிய வைத்து லாபமடைய வைக்கும் நோக்கில் எழுதப்பட்ட புத்தகங்களின் பட்டியல் இதோ:
1."பணம் விரும்புதே உன்னை" -தினமலர்-வாரமலர் இதழில் தொடராக வெளிவந்த 11ம் பதிப்பு.பெரிய சைஸ் ஷேர் டிரேடிங் புத்தகம்.விலை ரூ 555 மட்டுமே.
2."மனம் போல் பணம்"-பாக்யா வாரஇதழில் ஒன்றரை ஆண்டுகள் தொடராக வெளிவந்த 10ம் பதிப்பு.பெரிய சைஸ் ஷேர் டிரேடிங் புத்தகம்.விலை ரூ 555 மட்டுமே.
3."பணம்விழும் மலர்வனம்"-எனது ஒருநாள் பயிலரங்கத்திலும் பல்வேறு நிலைகளில் எழுதிய கட்டுரைகளின் ஷேர் டிரேடிங் முறைகள் பற்றிய தொகுப்பு.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555 மட்டுமே.
4."ஒவ்வொரு நாளும் பணம்"இன்ட்ரா டே டிரேடிங் குறித்த நறுக்கு தெறித்த மாதிரியான சுருக்கமான அருமையான டெக்னிக்குகள் அடங்கியது.விலை ரூ 555 மட்டுமே.
5."ஒவ்வொரு நிமிடமும் பணம்" ஆஃப்ஷன் டிரேடர்களுக்கான புத்தகம் இது.ஆஃப்ஷன் டிரேடிங் ஸ்ட்ராட்டஜிகள்அடங்கிய பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555 மட்டுமே.
ஒரு புத்தகம் மட்டும் வேண்டுவோர் ரூ 555 மட்டும் செலுத்தினால் போதும்.
மேற்கண்ட புத்தகங்களை கொரியரில் பெற பின்வரும் வங்கிக் கண்க்கில் புத்தகத்தின் விலையை(ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களாக இருந்தால் மொத்த தொகையை கட்டவூம்) செலுத்தி விட்டு பணம் செலுத்திய விபரம் புத்தகத்தின் தலைப்புடன்உங்களது முழுமுகவரி மற்றும் செல்போனுடன் மின்னஞ்சலில் தகவல் கொடுக்கவூம்.
வங்கிக் கணக்கு விபரம்:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
amount:Rs 2,775/-for all five books
ConversionConversion EmoticonEmoticon