பணம் தரும் படிக்கட்டுகள்...
ஷேர் டிரேடிங் செய்தால் சுலபமாக நிறைய பணம் கிடைக்கும்.அதை வைத்துக் கொண்டு அதை வாங்கலாம்.இதை வாங்கலாம் என்ற ஆசையோடு சிறுமுதலீட்டாளர்கள் பங்குச்சந்தைக்கு எப்போதுமே வந்தவண்ணம் இருப்பதை கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறௌம்.ஆனால் இவர்கள் பணம் சம்பாதிக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.அதிர்ஷ்டவசமாக ஒன்றிரண்டு பங்குகளில் இவர்கள் பணம் சம்பாதித்திருந்தாலும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இவர்களது டிமேட் கணக்கு நஷ்டத்தில்தான் இருக்கும்.
இதற்கு முதல் காரணம் பேராசை.அடுத்த காரணம் சந்தையின் போக்கு பற்றி புரியாமல் ஏதோ ஏறுது அந்த பங்கின் விலை.அதனால் வாங்குவோம் என்று வாங்குதல்.அடுத்ததாக எப்போது ஒரு பங்கில் உள்ளே நுழைவது.எப்போது விற்று வெளியேறுவது என்று புரியாமல் இருப்பது.
இது போன்ற பலவீனங்களை எளிதாக மாற்றி விடலாம் என்றாலும் சந்தை உச்சத்திற்கு சென்று விட்டபிறகு அங்கேயே இருக்கலாமா?தொடர்ந்து முதலீடு செய்யலாமா?திடீரென்று சந்தை கவிழ்ந்து போய் கரடியின் பிடிக்குள் சிக்கிக்கொண்டால் என்ன செய்வது என்ற குழப்பம் எல்லோருக்கும் குறிப்பாக சிறுமுதலீட்டாளர்களுக்கு அதிகமாக இருக்கும்.
இதற்காக எனது ஒரு நாள் பயிலரங்கில் நான் சொல்லிக் கொடுக்கும் "பணம் தரும் படிக்கட்டுகள்" என்ற யூக்தியை இப்போது சொல்லிக்கொடுக்கிறேன்.
நீங்கள் எல்லோருமே வீடுகள் அலுவலகங்களில் மாடிப்படிகள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.சில படிகள் மேலேறியதும் சமதளமாக ஒரு இடம் வரும்.இதை லான்டிங்(Landing)என்று கட்டிடக்கலை வல்லுநர்கள் சொல்வார்கள்.இந்த லான்டிங் என்பது இளைப்பாறுவதற்காகத்தான் அமைக்கிறார்கள்.இதே போல இறங்கி வரும்போதும் அதே லான்டிங் (அதே இடத்தில்தான்) இருக்கும்.
இதே லான்டிங்கை நாம் பங்குச்சந்தையிலும் பயன்படுத்தலாம்.இந்த லான்டிங்கை ஒன்று பங்குச்சந்தையே தீர்மாணிக்கும்.அல்லது நீங்களே உங்களது வசதிக்கேற்றபடி தீர்மாணித்துக் கொள்ளலாம்.அதாவது கட்டிட கான்ட்ராக்டர் அமைக்கும் லான்டிங்கை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.அல்லது நீங்களே உங்களது விருப்பத்திற்கேற்றவாறு லான்டிங்கை அமைத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக சந்தையின் குறியீட்டு எண் 6000ல் இருக்கும்போது நீங்கள் சந்தைக்கு வருவதாக வைத்துக் கொள்வோம்.அப்போது சில பங்குகளில் முதலீடு செய்திருக்கிறீர்கள்.அதன்பின் 6200என்ற இடத்திற்கு(நிஃப்டி குறியீடு) வருவதற்குள் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் நிஃப்டி நின்று அதனின்று கீழே இறங்கி மறுபடி அந்த புள்ளிக்கு வந்து இது போல இரண்டு மூன்று முறைகள் நடந்து அதன்பின் மேலேறே 6200க்கும் அதன்பின் 6300க்கும் வந்திருக்கக் கூடும்.இங்கே கான்ட்ராக்டர் அமைக்கும் லான்டிங் என்பதுதான் நிஃப்டி அந்த புள்ளியில்(கற்பனையாக 6165 என்று வைத்துக் கொள்வோம்) நிற்பது.உங்கள் வசதிக்காக நீங்கள் வேண்டுமானால் 6200 என்பதை ஒரு முதல் லான்டிங்காக வைத்துக் கொள்ளுங்கள்.
என்ன சொல்ல வருகிறேன் என்றால் நீங்கள் நிஃப்டி 6000ல் இருக்கும்போது வாங்கிய பங்குகளில் பாதியை(ஒரு பகுதி நீண்டகால முதலீடாக இருக்கட்டுமே) விற்று விடுகிறீர்கள்.அதன்பின் அந்த லான்டிங்கிலிருந்து இரண்டொரு முறை இறங்குகிறது அல்லவா.அதாவது சில படிகள் கீழே சென்றபின் மறுபடி அதே பங்குகளை வாங்குங்கள்.அல்லது அதே செக்டாரில் உள்ள வேறு பங்குகளையூம் வாங்கிக்கொள்ளலாம்.
இது போல செய்து கொண்டே வந்தால் நீங்களே உங்களுக்காக பின்வருமாறு சில லான்டிங்குகளை வைத்துக் கொள்ளலாம்.
6000 என்பது உங்களது உதாரண ஆரம்ப இடம்.
6200
6400
6600
6800
7000
7200
7400
7600
7700 (இந்த இடத்திற்கு வரும்போது உங்களது போர்ட்ஃபோலியோவை ஒரு பரிசீலணைக்குள்ளாக்கி சில முடிவூகளை எடுக்க வேண்டி வரும்).
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு 200 புள்ளிகளிலும் ஒரு லான்டிங்கை வைத்துக் கொள்ளுங்கள்.ஒவ்வொரு 1000 புள்ளியையூம் இறுதி டார்கெட்டாக வைத்துக் கொண்டு அப்போது அத்தனை பங்குகளையூம் விற்று பணமாக்கிக் கொண்டு வெளியே வந்து விடுங்கள்.
வெளியே வந்து என்ன செய்யலாம் என்றொரு கேள்வி வரும்.அதற்கும் ஒரு பதில் வைத்திருக்கிறேன்.
விற்று வந்த பணத்தில் தங்க நகைகளாக வாங்கிக்கொள்ளுங்கள்.குறைவான சேதாரமுள்ளதாக இருக்கட்டும்.டிசைன் எல்லாம் பார்க்க வேண்டாம்.ஃப்ளாட்டான டிசைன் இல்லாத வளையல்களாக இருந்தால் மிகவூம் நல்லது.ஏன் வளையல் என்பதற்கு ஒரு சூட்சும காரணம் இருக்கிறது.அதை அப்புறம் சொல்கிறேன்.அந்த நகையை வங்கியில் அடமானம் வைத்து பணமாக்குங்கள்.அந்த பணத்தை மறுபடி சந்தை கரடியின் பிடியில் சிக்கி கீழே வரும்போதெல்லாம் ஒவ்வொரு 200 புள்ளிகள் சரியூம்போதெல்லாம் சிறிது சிறிதாக வாங்கிக் கொண்டே வாருங்கள்.இதற்கிடையே உங்களது சொந்தப் பணத்தைக் கொண்டு தங்க நகைக்கடனுக்கு வட்டியை மாதந்தோறும் கட்டிக்கொண்டே வாருங்கள்.இதை நடைமுறை செலவாகக் கருதலாம்.
மறுபடி காளையின் பிடிக்கு நிச்சயம் சந்தை வரும்.
அப்போது ஏற ஏற உங்கள் வசதிற்கேற்ப லான்டிங்கை டிசைன் செய்து அந்த லான்டிங்கிற்கு வரும்போதெல்லாம் விற்று வரும் பணத்தைக் கொண்டு தங்கநகைக்கடனை அடைத்துக் கொண்டே வாருங்கள்.
கடைசியில் மொத்தக் கடனையூம் அடைத்தபிறகும் சில பங்குகளை விற்காமல் டிமேட் கணக்கில் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.அவை உங்களது லாபமாக இருக்கும்.அதாவது அபாரமான லாபமாக இருக்கும்.எப்படியூம் குறைந்தது 60 முதல் 80 சதவீதம் வரை இந்த முறையில் லாபம் கிடைக்கிறது என்பது அனுபவ உண்மை.
எஃப்அன்ட்ஓ கமாடிட்டி ஃபாரெக்ஸ் என்று எதைத் தொட்டாலும் நஷ்டம்தான் வருகிறதா? உங்களது ஜாதகம்
மோசமானதாக இருந்தாலும் தசாபுத்திகள் ஒத்துழைக்காவிட்டாலும் உங்களை ஷேர் டிரேடிங்கில் சம்பாதிக்க
வைக்க முடியூம்.ஜாதகபலனுடன் பரிகாரங்களும்(செலவில்லாத எளிய சூட்சும பரிகாரங்கள்) பெற கட்டணம்
ரூ 1555ஐ பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு மின்னஞ்சலில்(படத்தில் விபரம் உள்ளது) ஸ்கேன்
செய்த ஜாதக நகலை அனுப்பி வையூங்கள்.
Our Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 1,555/-
ConversionConversion EmoticonEmoticon