பணம் பற்றிய முழுமையான ஒரு புத்தகமாக இதனை நான் உங்களுக்காகவூம் உங்களது பணவளத்திற்காகவூம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.பொதுவாக எந்த ஒரு உறவிற்கும் புரிதல் என்பது முக்கியமானது.மனிதர்களுக்கிடையே உள்ள புரிதலைப் போலவே பணத்திற்கும் உங்களுக்கும் ஒரு புரிதல் இருப்பது அவசியம்.பணம் என்றால் வெறும் காகிதம்தானே.நாம் கஷ்டப்பட்டு உழைத்தால் பணம் வந்து விடப்போகிறது.வருகிற பணத்தை சிக்கனமாக செலவூ செய்தால் நம்மிடம் இருந்து விட்டுப் போகிறது என்றுதான் நீங்கள் நினைப்பீர்கள்.பணத்தை ஒரு உயிருள்ளப் பொருளாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. எனக்குத் தெரிந்த ஒரு பத்திரிகையாளர் இருக்கிறார்.இவர் சின்ன வயதிலேயே பத்திரிகை தொழிலுக்கு வந்து விட்டவர்.ஆனால் இவர் வேலை பார்த்த பத்திரிகையில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேல் இவர் வேலை பார்த்தும் இவரால் அந்த பத்திரிகையின் ஆசிரியராக வர முடியவில்லை.கடைசி வரை இவர் அங்கே துணையாசிரியர்தான்.இவரது குடும்பம் நடத்தி வந்த பதிப்பகத்திலும் இவர் நம்பர் ஒன் கிடையாது.ஆனால் இவர் பெரும் பணத்தை தன் வாழ்நாளில் சம்பாதித்து விட்டவர்.தொழிலதிபர்களை விடவூம் அதிகமாக சம்பாதித்து விட்டவர்.புகழ் பெற்றவரும் கூட.இவரிடம் ஒரு வினோதமான பழக்கம் இருக்கும்.எப்போதும் இவர் ஒரு மணிபர்ஸ் வைத்திருப்பார்.அதில் புத்தம் புதியதாக இருக்கிற ஒரு ஆயிரம் ரூபாய், ஒரு ஐநுரறு ரூபாய், ஒரு நுரறு ரூபாய், ஒரு ஐம்பது ரூபாய், ஒரு இருபது ரூபாய், ஒரு பத்து ரூபாய், ஒரு ஐந்து ரூபாய், ஒரு இரண்டு ரூபாய்(அப்போதெல்லாம் இரண்டு ரூபாய்கள் கிடைத்து வந்தன) ஒரு ஒரு ரூபாய் என்று வைத்திருப்பார்.இதனை எப்போது அவர் வெளியில் சென்றாலும் தன்னுடன் எடுத்துச் செல்வார்.ஆனால் அதில் ஒரு நோட்டைக் கூட செலவூ செய்ய மாட்டார்.
இங்கே என்ன நுட்பம் இருக்கிறது.
அத்தனைப் பணமும் அவரிடமே இருக்க வேண்டுமென்பதுதான் ப்ளான்.அந்த அத்தனை பணமும் அந்த பர்ஸல் சும்மா கிடக்கவில்லை.அவை அங்கே சந்தோஷமாக குடியிருக்கின்றன.அந்த ரூபாய் நோட்டுக்கள் நகரில் எங்கும் இருக்கின்றன ரூபாய் நோட்டுக்களை நாங்கள் இங்கே நன்றாக இருக்கிறௌம்.நீங்களும் இங்கே வந்து விடுங்கள் என்று அழைத்துக் கொண்டிருக்கின்றன.
பணம் ஒரு ஜடப்பொருள்தானே.
இப்படி உருவகப்படுத்திக் கொள்வது சற்று ஓவராகத் தெரியவில்லையா என்று நீங்கள் நினைக்கலாம்.மேலே நான் சொன்னது சரிதான் என்பதற்கு இப்போது இன்னொரு உதாரணத்தை நான் சொன்னால் புரிந்து கொள்வீர்கள்.
கோவில்களுக்குச் செல்லும்போது கவனித்துப் பாருங்கள்.கோவில் என்றால் விமானம் இருக்கும்.கொடிமரம் இருக்கும்.உள்ளே பிரதானமாக எந்த தெய்வத்தின் கோவிலோ அந்த தெய்வத்திற்கென்று ஒரு கர்ப்பகிரகம் இருக்கும்.அத்துடன் உற்சவமூர்த்திகள் இருப்பர்.வெளியே பிரகாரத்தைச் சுற்றி வரும் சுற்றிலும் பரிவார தெய்வங்கள் சின்னச் சின்ன சந்நிதிகளில் வீற்றிருப்பர்.
ஒரு கோவிலில் ஒரு கர்ப்பகிரகம் அதில் ஒரு மூலவர் அத்துடன் அவரது உற்சவர் மட்டும் இருந்தால் போதுமே.எதற்காக இத்தனை பரிவார தெய்வங்கள்.அங்கே உள்ள மெயின் கடவூளாக இருப்பவர்தான் உங்களுக்கு எல்லாம் தரக்கூடியவர்.ஆன்டனா போல செயல்படும் கொடிமரம் வழியாகவூம் கோபுரத்தில் உள்ள கலசம் வழியாகவூம் சக்தி உள்ளே கொண்டு வரப்பட்டு அது கற்பூர தீபத்தின்போது உங்கள் வசம் திருப்பியனுப்பப்படுகிறது.அத்துடன் வெளியே பிரகாரத்தில் உள்ள பரிவார தெய்வங்களும் அங்கே உள்ள சக்தி வெளியே போய் விடாமல் பாதுகாப்பதுடன் அப்படி வெளியே சிதறும் அல்லது வெளியே தாண்டிக் கொண்டு வரும் சக்தியை உங்களுக்கே திருப்பி அனுப்புகின்றன.ஆக பிரதானமாக உள்ள தெய்வத்தின் சக்தியூடன் இந்த தெய்வங்களும் இணைந்து உங்களுக்கு சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கின்றன.உங்களது பிரார்த்தனைகளும் அது போலவே மூலவர் வழியாக மேலே கோபுரத்தில் உள்ள கலசம் வழியாக மேலே பிரபஞ்ச சக்திக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக்கப்படுகின்றன.இது இருக்கட்டும்.இப்போது இதனை வேறு மாதிரி உருவகப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களது மணிபர்ஸ்தான் அந்த கர்ப்பகிரகம்.உங்களது மணிபர்ஸில் உள்ள அதிகபட்ச தொகையான ஆயிரம் ரூபாய்தான் மூலவர்.அதனையடுத்துள்ள ஐநுரறு ரூபாய்தான் உற்சவர்.அதனையடுத்துள்ள நுரறு ஐம்பது இருபது பத்து ஐந்து இரண்டு மற்றும் ஒரு ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் அந்த பிரகாரத்தில் உள்ள பரிவார தெய்வங்கள் போன்றவை.
இந்த நோட்டுக்கள் அனைத்தும் உங்களைச் சுற்றியூள்ள இடத்தில் உள்ள பணத்தை செல்வத்தை செல்வவளத்தை உங்களை நோக்க காந்த சக்தி போல இழுத்த வண்ணம் இருக்கும்.
அப்படியானால் வீட்டிலும் பிசினஸ் செய்கிற இடததிலுள்ள சாமி படத்துடன் இது போல ஒரு செட் ரூபாய் நோட்டுக்களை வைத்து வழிபடலாமா என்றார் எனது பணம் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கிற்கு திருப்பூரிலிருந்து வந்திருந்த அன்பர் ஒருவர்.
திருப்பூர்காரர்கள் மிகவூம் வித்தியாசமாக சிந்திப்பவர்கள்.எதையூம் துணிச்சலாக இறங்கி சாதிப்பவர்கள்.செய்யூங்கள் என்றேன்.இந்த இடத்தில் இன்னொரு வேடிக்கையான ஆனால் பலன் தரும் பரிகாரம் ஒன்றை சொல்ல வேண்டும்.ஒரு முறை பிசினஸில் லாபம் வரவேண்டுமென்ற நோக்கத்துடன் பரிகாரம் கேட்டு ஒரு திருப்பூர் அன்பர் சில ஆண்டுகள் முன்பு வந்திருந்தார்.அவரது தொழில் நிறுவனத்திற்கும் ஒரு ஜாதகம் கணித்துப் பார்த்து விட்டு அதன் ஆறாம் இடத்தில் உள்ள பலவீனம் காரணமாக அந்த தொழில்நிறுவனத்தின் பெயரில் தன்வந்திரிக்கு ஒரு மண்டலம் அர்ச்சனை செய்து வரச் சொன்னேன்.இந்த இடத்தில் நீங்கள் புருவத்தை உயர்த்தலாம்.மனிதர்கள் நோய்வாய்ப்பட்டால்தானே தன்வந்திரியை நாடுவோம்.நலிந்த தொழில் நிறுவனங்களைப் பற்றி குறிப்பிடும்போது சிக் யூனிட்(sick unit)என்றுதான் பொதுவாக குறிப்பிடுவார்கள் என்பதை இங்கே நினைவூகூற விரும்புகிறேன்.வெறும் ஜடப்பொருட்களான இயந்திரங்களை உள்ளடக்கிய தொழில்நிறுவனத்திற்கும் உடல்நலமில்லாமல் போகுமா?அதற்கு கூடவா தன்வந்திரி தேவைப்படுகிறார்..நலிந்த தொழில் நிறுவனங்களைப் பற்றி குறிப்பிடும்போது சிக் யூனிட்(sick unit)என்றுதான் பொதுவாக குறிப்பிடுவார்கள் என்பதை இங்கே நினைவூகூற விரும்புகிறேன்.
இந்த பிரபஞ்சத்தில் எதுவூமே ஜடப்பொருள் அல்ல.மனிதன்தான் அடுத்தவர்களைப் புரிந்து கொள்ளாமல் ஜடமாக வாழ்ந்து வருகிறான்.அதன்பின் அந்த திருப்பூர் அன்பரின் தொழில்நிறுவனம் பெரிதாக வளர்ந்து விட்டது.எதற்குச் சொல்கிறேன் என்றால் ஒரு முறை ஒரு கோவிலுக்கு சென்றிருந்தபோது அதிர்ந்து போக நேரிட்டது.சில அன்பர்கள் தன்வந்திரி சந்நிதியில் தங்களது நிறுவனத்தின் விசிட்டிங் கார்டு கொடுத்து தங்களது கம்பெனியின் பெயரில் அர்ச்சனை செய்யச்சொல்லிக் கொண்டிருந்தார்கள்.நிச்சயம் அவர்கள் திருப்பூர்காரர்களாகத்தான் இருக்குமென்ற புன்னகையூடன் அவர்கள் என்னை பார்ப்பதற்குமுன்னர் அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.
எதற்குச் சொல்கிறேன் என்றால் பணம் என்பது ஜடப்பொருள் அல்ல.வெறும் காகிதம் அல்ல.வெறும் பிளாஸ்டிக் அட்டை(ஏடிம் கார்டு) அல்ல.அது உங்களால் நேசிக்கப்பட வேண்டிய பொருள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். (தொடரும்)
ConversionConversion EmoticonEmoticon