"புதிதாய் ஏதும் தோன்றுவதில்லை"
இன்றைய கால கட்டத்தில் அதிகமான பயன்பாட்டில் இருக்கிற விஷயங்களையோ அல்லது பொருட்களையோ ஒரு லிஸ்ட் எடுத்துப் பாருங்கள்.உதாரணமாக பின்வருபவற்றை குறிப்பிடலாம்.
கூகுள் - தகவல்களைத் தேடுவதற்கு
செல்ஃபோன்-உடனடியாகப் பேசுவதற்கு
பேஸ்புக்-நண்பர்களுடன் தொடர்பு கொள்ள
வாட்ஸ்அப்-உடனடி தகவல் பரிமாற்றத்திற்கு
இவையெல்லாம் எப்போது வந்தன.ஏன் வந்தன.தானாகவே வந்தவனாக?யாராவது இது போன்று எனக்கு வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களா? இவை எப்படி வந்தாலும் இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு பலனை அனுபவிப்பது நீங்கள்தான்.
மேற்கண்ட லிஸ்ட்டை இன்னும் சுருக்கினால் லிஸ்ட்டில் உள்ளவற்றின் பொதுத்தன்மை பிடிபடும்.அந்த பொதுத்தன்மை என்னவென்றால் 'தகவல் தொடர்பு.அல்லது தகவல் பயன்பாடு' என்று இருக்கும்.அதையூம் இன்னும் சுருக்கினால் 'தகவல்' என்று வரும்.
ஆக தகவல் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது.பணம் என்பது கூட பின்னால்தான் வருகிறது.நீங்கள் ஒரு பணக்காரராக வேண்டுமென்று நினைக்கலாம்.அப்படி பணக்காரராக யாருமே விரும்புவார்கள்தான்.ஆனால் எந்த அளவிற்கு பணக்காரராக விரும்புகிறீர்கள் என்று கேட்டால்தான் யாரும் பதில் சொல்ல திணறுவார்கள்.இத்தனை ரூபாய் பணம் உங்களது வாழ்நாளிற்குள் வேண்டும் என்று முடிவூ செய்ய உங்களால் முடியூமா? அப்படி முடிந்தால் அது மிகவூம் நல்ல விஷயம்.ஏனென்றால் எவ்வளவூ பணம் உங்களுக்கு வேண்டும் என்று தெரிந்திருக்கிறது.பணம் சம்பாதிப்பதில் முதல்படி என்பது எவ்வளவூ "வேண்டும்" என்று மிகச் சரியாகத் தெரிந்திருப்பது.இதை தெரியாமல் இருப்பதால்தான் ஏதாவது வந்தால் பரவாயில்லை என்று அங்கும் இங்கும் அலைபவர்கள் தோற்றுப் போகிறார்கள்.
ஆக உங்களிடம் எவ்வளவூ பணம் வரவேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.சரி உதாரணமாக உங்களுக்கு நீங்கள் ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.அதாவது முடிவூ செய்கிறீர்கள்.இப்போது யோசித்துப் பாருங்கள்.நீங்கள் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்பதற்காக யாராவது உட்கார்ந்து உங்களுக்காக அந்த ரூபாய் நோட்டுக்களை அச்சிடப் போகிறார்களா என்ன? உங்களது பெயர் அந்த ரூபாய் நோட்டுக்களில் எழுதப்பட்டிருக்கப் போகிறதா என்ன?
சரி அந்த ஒரு கோடி ரூபாய் நோட்டுக்கள் இப்போது எங்கே இருக்கின்றன.மொத்தமாக ஒரு கோடி ரூபாய் நோட்டுக்களாக எங்காவது வைத்திருக்கப்பட்டிருக்கிறதா? அல்லது பிரித்து வெவ்வேறு இடங்களில் வைத்திருக்கப்போகிறதா என்ன?
எப்படியோ உங்களுக்கான ஒரு கோடி ரூபாய் எங்கோ இருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா? ஆக புதிதாக உங்களுக்காக ஒரு கோடி ரூபாயை யாரும் தயாரிக்கப் போவதில்லை.அந்த ரூபாய் நோட்டுக்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு பலபேரிடம் கைமாறி பல இடங்களில் பயணம் செய்து மொத்தமாக அல்லாமல் சில்லரை சில்லரையாக எங்கெங்கே இருக்கின்றன.அத்தனையையூம் திரட்டிக் கொண்டு வருவதுதான் உங்களது திறமை.
எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் இந்த உலகில் எதுவூமே புதிதாக வருவதில்லை.எல்லாமே ஏற்கனவே வெவ்வேறு வடிவில் இருக்கத்தான் செய்கின்றன.
தகவல்கள் வேண்டும்.உடனடியாக வேண்டும் என்று ஒவ்வொருவரது மனதிலும் அழுத்தமாக தோன்றிய பிறகுதான் எங்கோ கூகுள் பிறந்தது.அதேபோல்தான் செல்போன் பயன்பாடும் பேஸ்புக் டிவிட்டர் வாட்ஸ்அப் பயன்பாடும் வந்தது.
தேவை என்பது அழுத்தமாக இருக்க வேண்டும்.விருப்பமாக இருக்க வேண்டும்.விடாப்பிடியாக இருக்க வேண்டும்.
நீங்கள் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வேண்டுமென்று பிடிவாதமாக நினைக்க ஆரம்பித்து விட்டால் உங்களது ஆழ்மனம் அதை நோக்கியோ சிந்தனையை செலுத்திக் கொண்டிருக்கும்.அப்போது அந்த பணத்தை சம்பாதிப்பது தொடர்பான விஷயங்களாக உங்களது கண்ணில் பட ஆரம்பிக்கும்.அப்படி சம்பாதிப்பது தொடர்பான பொருட்கள் உங்களிடம் வர ஆரம்பிக்கும்.ஆனால் உங்களது வெளி மனது அதை உணராமல் புறக்கணித்து விடலாம்.உங்களது ஆழ்மனம் மட்டுமே அதை உணர முடியூம்.அது போல அப்படி உங்களை ஒரு கோடி ரூபாயை நோக்கி செலுத்தக் கூடியதாக சம்பவங்களும் விரைவில் அமையக் கூடும்.சம்பவங்கள் என்றால் அவை பாசிட்டிவ்வாகவூம் நெகட்டிவ்வாகவூம் கூட அமையக் கூடும்.உதாரணமான நீங்கள் அடுத்த மாதம் பிரமோஷனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும்போது உங்களை காரணமின்றி வேலையிலிருந்து துரக்கி விடலாம்.அப்போது கவலையோடு உட்கார்ந்து விடாமல் சற்று சிந்தனை போகும் பாதையிலேயே பயணித்தால் ஒரு சின்ன தொழில் நிறுவனத்தைக் கூட நீங்கள் துவக்கி சில வருடங்களில் மேலே வந்து விடலாம்.
ஒரு கோடி ரூபாய்தான் உங்களது லட்சியம் என்று இருக்க வேண்டுமென்பதில்லை.ஒரு ரோல்ஸ்ராய் காரை வாங்குவது கூட உங்களது லட்சியமாக இருக்கலாம்.அப்போது கார்களைப் பற்றி உங்கள் அடிமனது கனவூ காண ஆரம்பிக்கலாம்.யார் கண்டது நீங்களே கூட கார்களுக்காக ஒரு இணையதளம் துவங்கலாம்.அது வெற்றிகரமாக ஹிட்ஸ்களை அள்ள விளம்பரப் பணம் தானாக வந்து கதவைத் தட்ட என்றௌ ஒரு நாள் உங்களது வீட்டு காரேஜில் ஒரு ரோல்ஸ்ராய் கார் வந்து நின்று விடலாம்.
எதுவூமே புதிதாக தோன்றுவதில்லை என்று உணருங்கள்.பணம் சம்பாதிப்பது தொடர்பான எண்ணங்கள் கூட உங்களுடனே உங்களது மனதிலேயே பயணித்துக் கொண்டுதான் இருக்கின்றன நீங்கள்தான் அதை அறியவில்லை.கொஞ்சள் உள்ளே எட்டிப் பாருங்கள்.அப்படி சில லட்சிய எண்ணங்கள் உங்களிடம் கவனிப்பின்றி கிடப்பதை உணர்வீர்கள்.அவற்றை மேலே மட்டும் எடுங்கள் போதும்.அப்புறம் உங்களது வளர்ச்சியை அந்த எண்ணங்கள் பார்த்துக் கொள்ளும்.
ConversionConversion EmoticonEmoticon