"ரெண்டு மணி நண்டு"
இதுவூம் முன்பு நடந்த கதைதான்.ஆனால் இன்றைய சூழலுக்கும் பொருத்தமாக இருப்பதால் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என எழுதுகிறேன்.
நண்டு என்ற மனிதர் அவர்.அவரை நண்டு என்று அழைப்பது பாவம்தான்.ரொம்பவூம் அப்பிராணியான மனிதர்.அவர் பேசுவது அவருக்கே கேட்குமா என்று சந்தேகம்.அத்தனை மெல்லிசாகப் பேசுவார்.பெண்கள் என்றால் மைண்ட் வாய்ஸில்தான் பேசுவார்.அத்தனை தன்மையான மனிதர்.பின் ஏன் அவரை நண்டு என்று சொல்கிறௌம் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்.ஒன்று அவர் நண்டு போல சற்று சைடுவாக்கில் இழுத்த மாதிரி நடப்பார்.இன்னொன்று அவரது பெயர்.நடனசிகாமணி என்ற பெயரை அவரது டவூசர் காலத்திலேயே நண்டு என்று நண்பர்கள் சுருக்கி விட்டார்கள்.
சின்ன வயசிலேயே அவருக்கு இந்த சுபாவம் உண்டாம்.மற்ற பசங்க எல்லாம் பேந்தாஸ் என்று கோலி குண்டு வைத்து ஆடும்போது இவர் சும்மா பார்த்துக் கொண்டே இருப்பாராம்.மற்ற பசங்க எல்லாம் ஆட ஆரம்பித்து இரண்டு மணிநேரம் கழித்தபிறகுதான் உள்ளே போவாராம்.கிரிக்கெட் ஆடினால் கூட லோக்கல் தெரு மாட்ச்சில் கூட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகத்தான் போவாராம் நம்ம நண்டு.
வெடவெடவென்று இருப்பார்.சட்டை பாண்ட்டை தைத்துதான் போட்டிருப்பார்.பெரும்பாலும் பூப்போட்ட ஸ்லாக் சட்டை.இரண்டு பாக்கெட் சட்டையில் வைத்திருப்பார்.இரண்டு பாக்கெட்டும் எப்போதும் காலியாகத்தான் இருக்கும்.காலில் தோல் செருப்பு.டிவிஎஸ் 50ல்தான் வருவார்.வந்ததும் நிழல் இருக்கும் இடமாகப் பார்த்து நிறுத்தி விட்டு வண்டியை செயின் வைத்து செவன் லீவர் கோத்ரேஜ் பூட்டால் பூட்டி விட்டு இரண்டு தரம் இழுத்துப் பார்த்து விட்டுத்தான் வருவார்.
டிரேடிங் ஹாலில் மற்றவர்கள் எல்லாரும் அவரை மிகவூம் இளக்காரமாகத்தான் பார்ப்பார்கள்.ஆள் பார்க்க பஞ்சை பராரி போலத்தான் இருப்பார்.மற்ற ஆட்கள் எல்லாம் பந்தாவாக டிஷர்ட் ஜீன்ஸ் ரெபோக் என்று வந்தாலும் அத்தனை பேரும் கடனில்தான் இருப்பார்கள்.குறைந்த பட்சம் கிரெடிட்கார்டிலாவது கடன் வாங்கியிருப்பார்கள்.ஆனால் நம்ம நண்டு இதுவரைக்கும் கடன் வாங்கினதே கிடையாது.
டிரேடிங் ஹாலில் டீலரிடம் நெருக்கியடித்துப் போய் உட்கார்ந்து கொண்டு கணினி திரையை கவனித்து டெப்த் போடுங்க.அவன் என்ன ஆனான்னு பாருங்க.இவன் ஏன் இப்படி சறுக்கறான்.அவன் எதுக்காக அப்படி அரைக்கறான் என்று அளப்பரை கொடுக்க மாட்டார்கள்.ஏதோ பாலிகிளினிக்கில் டோக்கன் வாங்கிக்கொண்டு டாக்டரைப் பார்க்க உட்கார்ந்திருப்பது போலவே உட்கார்ந்திருப்பார்.
மதியம் ஆனதும் மெல்ல சில ஆட்கள் கழன்று கொள்வார்கள்.வெளியே போய் சாப்பிட்டு வருவார்கள்.சில பெருசுகள் மஞ்சளாக லெமன் ரைசும் வெள்ளையாக தயிர்சாதமும் கொண்டு வந்து வடை வாங்கி கொறித்துக் கொண்டு திரும்பித் திரும்பி மூச்சிரைக்க என்ன சார் ஆச்சு இன்ஃபோசிஸ்.பாவி கழுத்தை அறுக்கறான்.எம்அன்ட்எம் பரவாயில்லை என்று பரபர என்று இருப்பார்கள்.
அப்போதுதான் நம்ம நண்டு சைடுவாக்கில் நகர்ந்து கணினித் திரை பக்கம் வருவார்.நண்டு நகர்ந்தார் என்றால் அப்போது மணி இரண்டு என்று அர்த்தம்.
"சொல்லுங்க சார்" என்பார் டீலர்.
"ஹிந்தால்கோவை நாலு லாட் துரக்குங்க.இல்லே துரக்குங்கன்னா லாங் இல்லே ஷார்ட்அடிக்கனும்னு அர்த்தம்.நிஃப்டி இப்ப கீழே வந்துருவான்.அஞ்சு லாட் நிஃப்டியில ஷார்ட் அடிங்க.அதோ வர்றான் பாருங்க டிஎல்ஃப்.அவனை ரெண்டு லாட் அடிங்க சொல்றேன்"
அவர் சொன்னது அத்தனையூம் எஃப்அன்ட்ஓவில் ஷார்ட் செல்லிங்காகத்தான் இருக்கும்.அத்தனை ஆர்டரும் அம்சமாகப் பொருந்தி வருவதோடு சில நிமிடங்களில் டார்கெட்டை அச்சீவ் செய்து லாபத்தைப் பார்த்து விடுவார்.
"நண்டு சார் அப்புறம்.."
"கிளம்பறேன்.கார்த்தால மோருஞ்சாதமும் வடுமாங்காயூம் சாப்டதுதான்.லேசா பசிக்கிறது.கிளம்பறேன்"என்று லாபத்துடன் கிளம்பி விடுவார்.மற்ற ஆட்கள் எல்லாம் வந்து நண்டு இன்றைக்கு என்ன ஆர்டர் போட்டிருக்கிறார் என்று பார்த்து அவர் அடைந்த லாபத்தைப் பார்த்து பெருமூச்சு விடுவார்கள்.
நண்டு தினம் தினம் ரெண்டு மணிக்குத்தான் வலையை விட்டு வருவார்.
ஏன் சார் இப்படி என்றால் அதற்கொரு காரணம் சொல்வார்.
இரண்டு மணி என்பது சந்தை உறங்கும் நேரம்.சந்தை கோழித்துரக்கம் போட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நிச்சயமாக ஷார்ட் அடிக்கலாம்.எந்த பங்காக இருந்தாலும் இந்த நேரத்தில் சிறிது இறங்கித்தான் ஏறும்.நமக்கு இந்த இறங்கும் நிமிடங்கள் போதும்.
நண்டு சொன்னது தப்பவே இல்லை.இன்றைக்கும் நண்டு ஸ்ட்ராட்டஜி பலித்துக் கொண்டுதான் இருக்கிறது.நண்டு இப்போதெல்லாம் நேரில் வருவதில்லை.மொபைல் டிரேடிங் பழகிக்கொண்டு விட்டார்.ஐபோனில்தான் அத்தனை ரகளையூம் அதே இரண்டு மணிக்கு பண்ணுகிறார்.நமது ஆஃப்ஷன் டீமிலும் இப்போது இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
பத்தே நாட்களில் பாஸ்ட் டிராக் பயிற்சியில் பலவிதமான ஸ்ட்ராட்டஜிகளுடன்நச்சென்ற பாடங்கள்.அதையடுத்து சில
நடைமுறை ரகசியங்கள்...என்று எனது 32 வருட ஷேர் டிரேடிங் நிபுணத்துவத்தின் அடிப்படையில் சொந்த யூக்திகளுடன் தயாரிக்கப்பட்ட
ஷேர் டிரேடிங்கிற்கான தபாலவழிப் பயிற்சியில் சேர்ந்தால் நீங்கள்இதுநாள் வரை நஷ்டத்தில் இருந்தாலும் இனி
ஒவ்வொரு நாளும் டிரேடிங்கில் லாபத்தை அடையலாம்.இதற்கான அட்மிஷன் பற்றிய விபரங்களுக்கு படத்திலுள்ள
நமது தளத்திற்கு வாருங்கள்.சிறுமுதலீட்டாளர்கள் மற்றும் சிறிய டிரேடர்களுக்கான ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான
பயிற்சிக் கட்டணம்:ரூ 5555/- மட்டுமே.
பின்வரும் வங்கிக் கணக்கில் பயிற்சிக் கட்டணத்தை செலுத்தி விட்டு மின்னஞ்சலில் பணம் செலுத்திய
விபரத்துடன் பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.
வங்கிக் கணக்கு விபரம்:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
Amount:Rs 5555/- only.
பெரிய முதலீட்டாளர்களுக்கான உயர்நிலைப் பயிற்சியூம் உண்டு.விபரங்களுக்கு தளத்திற்கு வாருங்கள்.
ConversionConversion EmoticonEmoticon