"ஏழாம் எண்ணும்
பணம் பண்ணும் தந்திரமும்"
பங்குச்சந்தையைப் பற்றித்தான் எழுத உட்கார்ந்தேன்.ஆனால் என்ன மாயமோ தெரியலை என்ன மந்திரமோ தெரியலை மனசு கொஞ்சம் ரிவர்ஸ் கியர்ஸ் போட்டு விட்டது.
பங்குச்சந்தை என்ற ஒன்று இருக்கிறது என்ற விஷயமே நான் திருச்சியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதுதான் தெரியவந்தது.அப்போது ஆர்சி உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் ஒரு ஆசிரியர் இருந்தார்.அவரது பெயர் தாராசிங்.நிஜப்பெயரே அதுதானா என்று தெரியாது.அப்போது தாராசிங் என்ற பெயரில் ஹிந்திப்படங்களில் எல்லாம் ஒரு மோட்டா நடிகர் வருவார்.அந்த தாராசிங் வாத்தியாரை எல்லாரும் செல்லமாக 'கசங்கட்டை' என்றுதான் அழைப்பார்கள்.
தாராசிங் கறுப்பாக சராசரிக்கு மேம்பட்ட உயரத்தில் இருப்பார்.ஆனால் கறுப்பு நிறத்தில் துவைத்தே இராத கோட் அணிந்திருப்பார்.கைகளை வீசி நடந்து வரும்போதே எவனாவது எங்கிருந்தாவது அண்டா கா கசம்.அபூ கா கசம்.கசங்கட்டை வருதுடோய் என்று கிரண்டு அருகில் கத்தி விட்டு ஓடியிருப்பான்.வழக்கம் போல யாராவது அப்பாவி மாணவன் அவரிடம் மாட்டிக்கொண்டு அடி வாங்கி முட்டிப்போடுவது வழக்கம்.
அப்படி ஒரு முறை நான் கசத்திடம் மாட்டிக்கொண்டபோது அவர் சொன்னது நினைவிருக்கிறது.
"அய்யா பெரிய மார்க்கெட்ல பண்றாரு பணம்..ஷேர் மார்க்கெட்ல மினுக்கறாரு பணம்.."என்றார்.
எனக்கு சென்னையில் மூர் மார்க்கெட் இருக்கிறதென்று தெரியூம்.ஆனால் ஷேர் மார்க்கெட் என்றால் ஏதோ சேட்டு வீட்டு பேர் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.தாராசிங்கையூம் நாங்கள் ஒரு கறுப்பு சேட் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம்.
இன்டர்வெல்லில் ரீசஸ் போய் விட்டு வரும்போது பசங்களிடம் கேட்டேன்.
"அதென்னடா சேரு மார்க்கெட்டுங்கறாரு கசம்"
"யாரு அண்டா கா கசமா?அந்தாள் ரீல் ஓட்டறாருடா.உன் கால்ல செம்மண் ஒட்டியிருக்கில்லே.அதான் மார்க்கெட்டு சேத்துல நடந்து வந்திருக்கியான்னு கில்ட்டு பண்ணியிருப்பாரு"
அன்றய நாள் முழுக்க ஷேர் மார்க்கெட் என்றால் என்ன என்று தெரியவில்லை.யாரிடம் கேட்டாலும் துரத்தினார்கள்.அப்போதெல்லாம் கூகுளோ யாகூஹோ கூட கிடையாது.பக்கத்து வீட்டு அக்காக்கள் அப்போதெல்லாம் தலையை படிய வாரி நீலிபிருங்காதி தைலம் போட்டுக் கொண்டு டிரான்ஸிஸ்டரில் பி.சுசிலா பாட்டு கேட்டுக் கொண்டு சாண்டில்யனை புரட்;டிக் கொண்டிருப்பார்கள்.அவர்களிடம் எல்லாம் ஷேர் மார்க்கெட் பற்றி தெரிந்து கொள்ள முடியாது.
அப்புறம் ஒன்பதாம் வகுப்பில்தான் சிங்கராயர் சார் வந்து ஒரு நாள் அறிவியல் கிளாசை பாதியில் கத்தரித்து விட்டு பங்குச்சந்தை என்பதுதான் ஷேர் மார்க்கெட் என்று சொல்ல ஆரம்பித்தார்.
இந்த பதிவூ தாராசிங்கையோ பள்ளிக் கூட அனுபவத்தையோ பற்றியதல்ல.எனக்கு முதல்முதல் ஷேர் மார்க்கெட் என்ற வார்த்தை கிடைத்தது எனது ஏழாவது வகுப்பில்தான்.
அதனால் ஏழு என்ற எண் மீது ஒரு மரியாiதை.
இந்த ஏழு என்ற எண்ணைக் கவனித்துப் பாருங்கள்.நிறைய இடங்களில் ஏழு இருக்கும்.
வானவில் ஏழு நிறம்.
நாள் கிழமைகள் ஏழு விதம்
திருப்பதி வெங்கடாஜலபதி ஏழுமலைகளை உடைய ஏழுமலையான்.
இசையில் ஏழு ஸ்வரங்கள்
அலையில் ஏழு வரும்.எப்போதும் குட்டிக் குட்டி அலைகளைத் தொடர்ந்து ஏழாவது அலைதான் ராட்சசத்தனமாக வரும்(அப்படி ஒரு ஏழாவது அலைதான் ஒரு பௌர்ணமி இரவில் எனது மாணவர்களை கோவாவில் கடலுக்குள் கொண்டு போய் சாகடித்தது.அதைப் பற்றி தனிப்பதிவாக பிறகு எழுதுகிறேன்)
ஷேர் டிரேடிங்கிலும் ஜோதிட ரீதியாகவூம் ஏழு என்பதை வைத்துக் கொண்டு தொடர்ச்சியாக நஷ்டம் வந்தால் அவற்றை லாபமாக மாற்றிக் கொண்டு விடலாம்.
எப்படி என்கிறீர்களா?
ராசிக்கட்டத்தில் ஏழாவது ராசியாக வருவது துலாம்.அதன் அதிபதி சுக்கிரன்.சுக்கிரன்தான் சுகபோகத்திற்கு அதிபதி.இதை பற்றி பிறகொரு ஜோதிடப்பதிவில் விரிவாக எழுதுகிறேன்.
இப்போது ஏழு என்பதைப் பயன்படுத்தி எப்படி லாபம் சம்பாதிக்கலாம் என்று பார்ப்போம்.
சாதாரணமாக ஒரு உட்கார்ந்து கொள்ளுங்கள்.யோகா தியானம் கடவூள் வழிபாடு போன்ற எந்த பிரயத்தனங்களும் வேண்டாம்.ஒரு தாளை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் உங்களது நினைவூக்கு வருகிற நிறுவனங்களின் பெயர்களை ஒன்றன்பின் ஒன்றாக எழுதிக் கொண்டே வாருங்கள்.
ஏழாவதாக என்ன பெயரை எழுதியிருக்கிறீர்களோ அதுதான் உங்களுக்கு ராசியான ஷேர்.அந்த ஷேரில்தான் நீங்கள் டிரேடிங் செய்ய வேண்டும்.
அந்த பங்கு விலை இறங்கும்போது வாங்க வேண்டும்.விலை ஏறும்போது விற்க வேண்டும்.இதுவே ஆஃப்ஷன் டிரேடிங் என்றால் அந்த பங்கு விலை இறங்கியிருக்கும்போது ஒரு கால் ஆஃப்ஷன் வாங்கி அது விலை ஏறினதும் விற்க வேண்டும்.அப்படி இல்லாமல் அந்த பங்கின் விலை ஏறியிருந்தால் ஓரு புட் ஆஃப்ஷன் வாங்கி அந்த பங்கின் விலை குறைந்ததும் இந்த புட் ஆஃப்ஷனை(இதன் விலை நிச்சயம் ஏறியிருக்கும்) விற்க வேண்டும்.
என்ன 7 பற்றி தெரிந்து கொண்டீர்களா?
நமது தளத்தைப் பற்றி உங்களது ஏழு நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.எஸ்எம்எஸ் அல்லது மெயில் அல்லது தொலைபேசி அல்லது பேஸ்புக் என்று எப்படியாவது ஏழு பேருக்கு நமது தளம் பற்றி தெரிவித்து விட்டுப் பாருங்கள்.உங்களது ஷேர் டிரேடிங் வாழ்வூ பிரகாசமாகி விடும்(!)
ConversionConversion EmoticonEmoticon