"மூன்று எதிரிகள்"
முன்னேறத் துடிக்கும் முன்னேற முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் மூன்று எதிரிகள் கட்டாயமாக இருப்பார்கள்.சாதாரணமாக இந்த எதிர்ப்பு என்பது வீட்டிலிருந்தே துவங்கும்.எதை புதிதாகச் செய்ய நினைத்தாலும் அதெல்லாம் எதுக்கு உனக்கு என்கிற ரீதியில் இதை முளையிலேயே கிள்ளி விட முடியூமா என்று பார்ப்பார்கள்.சரியாக சாப்பிட உட்காரும் நேரம் பார்த்து இதைப் பற்றி பேசி எரிச்சலுரட்டி அந்த எரிச்சலே உங்களது வேகத்துக்கு தடை போடுமாறு செய்வார்கள்.
வீட்டுக்கு வெளியே என்றால் உறவூக்கார்களில் சிலர் பொறாமை காரணமாக உங்களுக்கு முட்டுக்கட்டை போட முடியூமா என்று விரும்பி வந்து பேசி மனதைக் கலைப்பார்கள்.அப்புறம் நண்பர்களில் சிலர் இது போல கூட இருந்தே சதி செய்யலாம்.
இதெல்லாம் மற்றவர்கள் உங்களுக்கு செய்யூம் கெடுதல் துரோகம் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.ஆனால் உங்களுடனேயே இருக்கும் அந்த மூன்று எதிரிகள் யார் என்று தெரிந்து கொண்டு அவர்களை வென்று விட்டால் நிச்சயமாக நீங்கள் முன்னேறி விடலாம்.
யாரந்த மூன்று பேர்.
அவர்களின் பெயர்கள் கீழே உள்ளன.
1.பயம்
2.தயக்கம்
3.தாமதம்
இந்த மூன்று யாரிடம் கூடவே இருக்கிறதோ அவர்கள் எந்த காலத்திலும் முன்னேறவூம் முடியாது.பணம் சம்பாதிக்கவூம் முடியாது.
ஏன் அப்படி?
பயம்தான் ஒருத்தரின் உண்மையான பலவீனம்.எந்த புதிய முயற்சியையூம் செய்வதற்கு ஒருத்தர் பயந்தால் அதனை அடுத்த ஓர் அடியை எடுத்து வைக்கவே முடியாதபடி மனமே பலவீனப்பட்டுப் போய் விடும்.
ஆக பயத்தைக் கையாள்வதை இப்படித்தான் செய்ய வேண்டும்.
ஒரு லிஸ்ட் எடுங்கள்.
எந்தெந்த காரியங்களில் எல்லாம் உங்களுக்கு பயம் வருகிறதோ அந்த காரியங்களை முதலில் செய்யூம் காரியங்களாக உங்களது அஜன்டாவை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.அந்த பயப்படும் காரியத்தை திரும்பத் திரும்பச் செய்யூம்போது அதிலுள்ள சிலிர்ப்பு திகில் போயே போய் விடும்.அதனால் பயப்படும் காரியத்தை முதலில் செய்யூங்கள்.
தயக்கம் என்பதை ப்ரேக்காஸ்டினேஷன் என்பார்கள்.எந்த விஷயத்தை ஒத்திப் போடலாம் என்று தோன்றுகிறதோ அதை மறுபடி ஒரு காகிதத்தில் எழுதிப்பாருங்கள்.இரண்டு காரணங்கள் கிடைக்கும்.ஒன்று தோற்றுப்போய் விடுவோமோ அல்லது யாராவது ஏதாவது சொல்வார்களோ என்ற பயத்தில் அந்த காரியத்தை ஒத்திப்போட மனம் சொல்லும்.இரண்டாவது பயத்தின் காரணமாக அந்த காரியத்தை ஒத்திப் போடச் சொல்லும்.
இது போன்ற விஷயங்களையூம் ஒரு லிஸ்ட் போட்டு எழுதிக்கொண்டு அதிலுள்ளவற்றை ஒவ்வொன்றாக முதல் வேலையாக செய்து முடியூங்கள்.அப்புறம் ஒத்திப் போடத் தோன்றாது.
மூன்றாவது தாமதம்.
இது பல காரணங்களால் வரலாம்.நீங்கள் மட்டுமின்றி நீங்கள் இருக்கும் சூழ்நிலை உங்களோடு தொடர்புள்ளவர்கள் நீங்கள் செய்யூம் வேலையோடு தொடர்புடைய மற்றவர்களாலும் தாமதம் வரலாம்.
முடிந்த அளவிற்கு தாமதத்தை முன்கூட்டியே எதிர்பார்த்து விரைவாக குறித்த நேரத்தில் முடிக்க முடியூமா என்று முயற்சி செய்யூங்கள்.முடித்தே ஆக வேண்டுமென்று நான் சொல்லவில்லை.ஜஸ்ட் முயற்சி மட்டும் செய்து பாருங்கள்.அதன் பலன் அருமையாக இருக்கும்.
இந்த மூன்று எதிரிகளையூம் நீங்கள் மெல்ல மெல்ல வென்று பாருங்கள்.உங்கள் பக்கமாக பணம் வந்து கொண்டிருப்பது தெரியூம்.பணம் மட்டுமல்ல.வெற்றியூம் சந்தோஷமும் கூடவே வருவதும் தெரியூம்.
பத்தே நாட்களில் பாஸ்ட் டிராக் பயிற்சியில் பலவிதமான ஸ்ட்ராட்டஜிகளுடன்நச்சென்ற பாடங்கள்.அதையடுத்து சில
நடைமுறை ரகசியங்கள்...என்று எனது 32 வருட ஷேர் டிரேடிங் நிபுணத்துவத்தின் அடிப்படையில் சொந்த யூக்திகளுடன் தயாரிக்கப்பட்ட
ஷேர் டிரேடிங்கிற்கான தபாலவழிப் பயிற்சியில் சேர்ந்தால் நீங்கள்இதுநாள் வரை நஷ்டத்தில் இருந்தாலும் இனி
ஒவ்வொரு நாளும் டிரேடிங்கில் லாபத்தை அடையலாம்.இதற்கான அட்மிஷன் பற்றிய விபரங்களுக்கு படத்திலுள்ள
நமது தளத்திற்கு வாருங்கள்.சிறுமுதலீட்டாளர்கள் மற்றும் சிறிய டிரேடர்களுக்கான ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான
பயிற்சிக் கட்டணம்:ரூ 5555/- மட்டுமே.
பின்வரும் வங்கிக் கணக்கில் பயிற்சிக் கட்டணத்தை செலுத்தி விட்டு மின்னஞ்சலில் பணம் செலுத்திய
விபரத்துடன் பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.
வங்கிக் கணக்கு விபரம்:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
Amount:Rs 5555/- only.
பெரிய முதலீட்டாளர்களுக்கான உயர்நிலைப் பயிற்சியூம் உண்டு.விபரங்களுக்கு தளத்திற்கு வாருங்கள்.
ConversionConversion EmoticonEmoticon