"என்ஜினை பராமரித்துக் கொண்டேயிருங்கள்"
கார் வைத்திருக்கிறவர்களைக்கேட்டால் சொல்வார்கள்.ஒரு கார் நல்ல முறையில் கையைக் கடிக்காமல் அடிக்கடி ரிப்பேர் செலவூ வைக்காமல் இருக்க வேண்டுமென்றால் இத்தனை கிலோமீட்டருக்கு ஒரு தடவை அந்த என்ஜினுக்கு ஆயில் ஊற்றி பராமரிக்க வேண்டுமென்பார்கள்.
கார் மட்டுமல்ல.டூவீலரையூம் இதே போல்தான் பராமரிக்க வேண்டும்.அப்போதுதான் ஸ்மூத்தாக ஓடும்.நான் கூட பத்தாண்டுகள்முன்பாக பஜாஜ் சஃபையர் என்ற ஸ்கூட்டரை மிகவூம் விரும்பி வாங்கினேன்.அந்த சமயத்தில் ஸ்கூட்டர் ஆஃப் த இயர் என்று விருதெல்லாம் பெற்ற ஸ்கூட்டர் அது.மைலேஜ் அப்போதே எழுபது வரை தந்தது.வாயை அகலமாக வைத்துக் கொண்டு கொணட்டிக் கொண்டு பேசும் ஒரு நடிகர் கூட விளம்பரத்தில் அந்த ஸ்கூட்டரை சிபாரிசு செய்திருந்ததும் ஒரு காரணம் நான் அந்த ஸ்கூட்டரை வாங்கியதற்கு.
அப்புறம் வேலை பிசியில் அந்த ஸ்கூட்டருக்கு என்ஜின் ஆயிலை மட்டும்தான் மாற்ற மறந்து போனேன்.நடுவழியில் ஒரு நாள் நகைக்கடைக்கு அழைத்துச் செல்லாதால் முனகிக் கொண்டு பாத்திரங்களை எறியூம் இல்லத்தரசி மாதிரி நின்று விட்டது.
என்ன ஏது என்று பார்த்தால் ஆயில் சரிவர மாற்றாததால் உள்ளே ஜாம் ஆகி விட்டிருந்தது.பஜாஜ் கம்பெனிக்கு சென்று கேட்டால் அப்போதுதான் அங்கே குடும்ப சொத்து தகறாறு எல்லாம் முடிந்து ராகுல்பஜாஜ்(ராகுல்னு பேர் வந்தாலே சொதப்பல்தானே என்னவோ) இனிமே ஸ்கூட்டரே நாங்க தயாரிக்கப்போவதில்லைன்னு ஆத்தா மேல சத்தியமா முடிவெடுத்துட்டம்னு அறிக்கை விட்டுட்டு இருக்கார்.
சரின்னு லோக்கல் மெக்கானிக்கிடம் கொண்டு போய் காண்பித்தபோது வெளியூர் ஆட்டக்காரனை உள்ளுர் ஆட்டக்காரன் மதிக்கற நம்ம ஊர்ல நீ என்னப்பா என்னோட ஸ்கூட்டரை பார்க்க மாட்டேங்கற.அந்த காலத்துல எம்ஜிஆர் எல்லாம் படத்துல இந்த ஸ்கூட்டர்லதான் வருவாரு தெரியூமா என்று ஒரு பெரிசு நின்றிருந்தார்.
அங்கே தேமே என்று ஒரு லாம்பரெட்டா ஸ்கூட்டர் நின்றிருந்தது.அதிலும் ஏதோ ஆயில் மாற்றாத பிரச்சனை போலும்.
"வாங்க தம்பி உங்க ஸ்கூட்டர்லயூம் பிரச்சனையா.என் ஸ்கூட்டர் செகன்ட் ஹான்ட்.மைசூர் மகாராஜாவூம் ஹைதராபாத் ஹைனஸூம் வைச்சிருந்தாங்கன்னு சொல்லிட்டிருந்தா தபாருங்க அஞ்சாம் நம்பர் ஸ்பேனர் சைசுக்கு இருக்கற இந்த பஞ்சர் பார்க்கற பரதேசி அப்ப ஸ்வப்னசுந்தரியோட ஸ்கூட்டர் இது இல்லையான்னு கேட்கறான்"என்றார்.
வண்டியை விட்டு ஆயில் மாற்றிப் பார்த்தாலும் அதன்பின் அந்த ஸ்கூட்டரை எப்போது வெளியே எடுத்தாலும் கிராஃபிக்ஸ் எஃபக்ட்டில் வெள்ளை வெள்ளையாய் புகை வருவது மாதிரி சைலன்ஸர் வழியாகப் புகை வரும்.
தபாரு...கொசு மருந்து அடிக்கறாங்க பாரு..ம்சீக்கிரம் சாப்பிடு.இல்லேன்னா பிடிச்சிக்கொடுத்துடுவேன்று வழியல்தென்படும் பெண்கள் குழந்தைகளுக்கு என் ஸ்கூட்டரைக் காண்பித்து சோறு ஊட்டிக்கொண்டிருப்பார்கள்.
இப்போது அந்த பஜாஜ் சஃபையர் ஸ்கூட்டரை நன்றாக துடைத்து போர்டிகோவில் ஞாபகார்த்தமாக வைத்திருக்கிறேன்.யமஹாவூம் டிவிஎஸ்ஸூம் ஸ்கூட்டர் தயாரிப்பில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்க நம்ம பஜாஜ் கம்பெனி ராகுல் பஜாஜ் "ஆத்தா மேல சத்தியமா நாங்க ஸ்கூட்டர் தயாரிக்க மாட்டோம்.பல்ஸர் மேல சத்தியமா சொல்றம்"னு இன்னமும் சொல்லிக்கிட்டிருக்கார்.
இது போகட்டும்.
என்ன சொல்ல வந்தேன்.
என்ஜின் பராமரிப்பு எப்படி எண்ணைய் அவசியமோ அதே போல கார்களுக்கு என்ஜினை டாப்அப் செய்ய கூலன்ட் பயன்படுத்துவார்கள்.உங்களுக்கும் இது போல ஒரு கூலன்ட் அவசியம்.
நமக்கும் கூலன்ட்டா?
ஆம்.
கூலன்ட்.உங்களது மனதை தோல்விகள் போட்டி பொறாமைகைள் எதிர்பாராத சங்கடங்கள் இவற்றிலெல்லாம் மாட்டிக்கொண்டு திறன் குறைந்து போகாமல் அதே விறுவிறுப்புடன் அதாவது அதே ஸ்மார்ட்னஸ் உடன் வைத்திருக்க ஒரு கூலன்ட் தேவை.
அது என்ன கூலன்ட்.
இதுநாள் வரை உங்கள் வாழ்க்கையில் நடந்திருந்த நல்ல விஷயங்களை ரீவைன்ட் செய்து எடுங்கள்.அதனை மனதில் ஓட்டிப் பாருங்கள்.முன்பெல்லாம் வீடுகளில் புகைப்படங்களை சுவற்றில் வரிசையாக மாற்றி வைத்திருப்பார்கள்.இப்போது அந்த பழக்கம் வழக்கொழிந்து போய் விட்டது.
எனினும் உங்களது சந்தோஷமான கடந்த கால சம்பவங்களை அவ்வபோது ரீவைன்ட் செய்து நினைத்துப் பாருங்கள்.அதுதான் உங்களுக்கான கூலன்ட்.அப்படி செய்து கொண்டே இருந்தால் கசப்பான சம்பவங்களை தேவையில்லாமல் மனம் நினைத்துப் பார்ப்பது நின்று விடும்.
எனவே உங்களது செயலில் தெம்பும் தைரியமும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.வெற்றியூம் கிடைக்கும்.செய்து பாருங்கள்.
ConversionConversion EmoticonEmoticon