சிக்கனம்...
பொதுவாக நம் ஆட்களுக்கு சிக்கனமாக இருக்கத் தெரியாது.இதற்கு காரணம் நமது பழக்கவழக்கம்தான்.நாம் சாப்பிடும் சாப்பாட்டிலேயே இதனைக் காணலாம்.முழுதாக தலைவாழை இலை போட்டு வரிசைக்கிரமமாக சுதந்திர தின அணி வகுப்பு போல கறிகாய்களை அணிவகுக்க வைத்து விட்டு சாதத்திலிருந்து துவங்கும் நமது சாப்பாடு பாயாசத்தில் போய் பலவித அயிட்டங்களுடன் முடிவடைகிறது.இதையேதான் திரைப்படத்திலும் நாம் எதிர்பார்க்கிறௌம்.ஒரே கதையில் பாடல்கள் சண்டைகள் ரொமான்ஸ் சோகக்காட்சிகள் நகைச்சுவை என்று கலந்து கட்டி அடிப்பதுதான் நமது தன்மை என்றாகி விட்டது.ஆனால் இதெல்லாம் ஆயாசம் தரும் விஷயங்கள்.நறுக்கு தெறித்தாற்போல நமக்கெல்லாம் பேசவோ பழகவோ வராது.வேண்டாம் என்ற விஷயத்தைக் கூட நம் ஆட்களுக்கு அழகாக இனிமையாகச் சொல்லத் தெரியாது.வேண்டும் எனற் விஷயத்தைக் கூட வளவளகொழகொழவென்று குழப்பி விடும் ஆசாமிகளாகத்தான் இருந்து வந்திருக்கிறௌம்.Click here to get FREE intraday stock futures tips
சிக்கனமாக இருப்பது பற்றித்தான் இந்த கட்டுரை என்று சொல்லி விட்டால் நம் ஆட்கள் உடனே ஆஹா என்று கஞ்சத்தனமாக இருப்பதற்கு ரெடியாகி விடுவார்கள்.இரண்டும் வேறு வேறு என்று நன்றாகவே தெரிந்திருந்தாலும் சிக்கனம் என்று சொல்லி விட்டால் உடனே அதற்கு கோடு ஆஃப் எத்திக்ஸ் ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ் என்று தயார் பண்ணி திணிக்கக ஆரம்பித்து விடுவார்கள்.
சிக்கனம் என்பது சின்னதாக இருப்பதல்ல.ஒரே புள்ளியில் மனதையூம் செயலையூம் குவித்து வைப்பதுதான் சிக்கனம் என்றால் புரியாத மாதிரி இருக்கும்.சில வெற்றிச் சிக்கனங்களைச் சொன்னால் புரியூம்.வார்த்தைகளில் வந்த சிக்கனம்தான் திருக்குறள்.எழுத்துக்களில் வந்த சிக்கனம்தான் டிவிட்டர்.வசனங்களில் வந்த சிக்கனம்தான் மணிரத்னம்.
வளவளவென்று பரபரவென்று எதையூம் செய்ய ஆரம்பித்தோமானால் அதை கட்டுப்படுத்த இயலாமல் அது பாட்டுக்கு ஒரு திசைக்கு நம்மை இழுத்துக் கொண்டு போகும்.எதை விரும்புகிறௌமோ அதைப் பற்றி நினைக்க முயற்சிக்கும் போதெல்லாம் மனது வேறு பக்கம் அலைபாய ஆரம்பித்து விடுகிறது.Click here to get free Nifty levels & trading tips
மனதை அங்கும் இங்கும் அலைய விடாமல் இருப்பதற்கு ஒரு பயிற்சியாக சிந்தனைச் சிக்கனத்தைப் பழகலாம்.அதாவது ஒரு நாளைக்கு ஒன்றிரண்டு விஷயங்களைப்பற்றி மட்டும்தான் சிந்திப்பது என்று ஒரு கட்டுப்பாடு விதித்துக் கொள்வது என்று பொருள்.இப்படி ஒரு நாளைக்கு நான்கு விஷயங்களைப்பற்றி மட்டுமே சிந்திப்பது என்று முடிவூ செய்து விட்டால் நான்காவது விஷயத்தைப் பற்றி சிந்தித்து முடித்தபின் என்ன செய்வது என்று தெரியாமல் மனது ஏற்கனவே சிந்தித்து விட்ட முதல் விஷயத்திற்கு வந்து விடும்.அதன்பின் இரண்டாவது விஷயத்திற்கு இடம் பெயரும்.இது இப்படியே தொடரும்.
அதன்பின் நான்கு விஷயங்கள் என்பதை மூன்றாகக் குறைத்து அதன்பின் இரண்டு விஷயங்களுக்கு என்று வைத்து விட்டால் நமது சிந்தனை கூர் தீட்டப்பட்டு விடும்.
அப்படி சிந்திக்கிறபோது நாம் போடும் திட்டங்களும் எவ்வித ஓட்டை உடைசல்களும் இல்லாமல் பக்காவாக வெற்றித் திட்டமாக அமையூம்.அந்த திட்டத்தை உங்களது வேலையிலோ வணிகத்திலோ பயன்படுத்திப் பாருங்கள்.வெற்றிகளுடன் பணமும் கிடைக்கும்.
Click here to get FREE intraday updates & stock pics
பத்தே நாட்களில் பாஸ்ட் டிராக் பயிற்சியில் பலவிதமான ஸ்ட்ராட்டஜிகளுடன்நச்சென்ற பாடங்கள்.அதையடுத்து சில
நடைமுறை ரகசியங்கள்...என்று எனது 32 வருட ஷேர் டிரேடிங் நிபுணத்துவத்தின் அடிப்படையில் சொந்த யூக்திகளுடன் தயாரிக்கப்பட்ட
ஷேர் டிரேடிங்கிற்கான தபாலவழிப் பயிற்சியில் சேர்ந்தால் நீங்கள்இதுநாள் வரை நஷ்டத்தில் இருந்தாலும் இனி
ஒவ்வொரு நாளும் டிரேடிங்கில் லாபத்தை அடையலாம்.இதற்கான அட்மிஷன் பற்றிய விபரங்களுக்கு படத்திலுள்ள
நமது தளத்திற்கு வாருங்கள்.சிறுமுதலீட்டாளர்கள் மற்றும் சிறிய டிரேடர்களுக்கான ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான
பயிற்சிக் கட்டணம்:ரூ 5555/- மட்டுமே.
பின்வரும் வங்கிக் கணக்கில் பயிற்சிக் கட்டணத்தை செலுத்தி விட்டு மின்னஞ்சலில் பணம் செலுத்திய
விபரத்துடன் பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.
வங்கிக் கணக்கு விபரம்:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
Amount:Rs 5555/- only.
பெரிய முதலீட்டாளர்களுக்கான உயர்நிலைப் பயிற்சியூம் உண்டு.விபரங்களுக்கு தளத்திற்கு வாருங்கள்.Click here to get FREE stock tips
ConversionConversion EmoticonEmoticon