பங்குச்சந்தையூம் பணவேட்டையூம் - 4
"பெரிசும் சிறுசும்..."
இந்த டெக்னிக்கை நான் எனது ஆரம்பகால பங்குச்சந்தை முதலீட்டில் செய்து பார்த்து வெற்றி பெற்றிருக்கிறேன்.இதை
'ரஜினிகாந்த் டெக்னிக்" என்றும் நான் அப்போது சொல்வதுண்டு.ரஜினிகாந்த் டெக்னிக் என்றால் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு முன்னால் அவர் திரைத்துறையில் செய்து பார்த்த டெக்னிக்.இதையே நான் ஷேர் மார்க்கெட்டில் செய்து பார்த்தேன்.லாபமும் கணிசமாக வந்தது.இன்றும் வந்து கொண்டிருக்கிறது.இந்த ரஜினி டெக்னிக் என்ன என்று சொல்வதற்கு முன்னால் ஷேர் டிரேடிங் செய்வதில் நம்மை விட பெரிசுகள் என்றழைக்கப்படும் சீனியர் சிட்டிசன்கள்தான் ஆர்வமாக இருப்பார்கள்.அவர்கள் பலவிதமான ஏற்ற இறக்கங்களை சந்தையில் பார்த்தவர்களாக இருப்பார்கள்.அதனால் உங்களுக்கு தெரிந்த பெரியவர்கள் யாராவது(பேஸ்புக்கில் ஜோசிய கணிப்பு போடும் பெரிசுகளை பின்பற்ற வேண்டாம்.அவர்கள் சந்தை ஏறுவது போல தோன்றினால் இறங்கும் என்று போடுவார்கள்.இறங்குவது போல தோன்றினால் ஏறும் என்று போடுவார்கள்.அதில் ஒரு உள்குத்து வைத்திருப்பார்கள் அவர்கள்.அவர்களைப் பின்பற்றாதீர்கள்) இருந்தால் அவர்கள் திரும்பத் திரும்ப என்ன பங்கில் முதலீடு அல்லது டிரேடிங் செய்கிறார்கள் என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.அதே போல வயதில் இளைவராக இருக்கிற புதிய முதலீட்டாளர்கள் எவராவது(சுமாராக ஷேர் விஷயம் தெரிந்தவராக அவர்கள் இருக்க வேண்டும்) இருந்தால் அவர்கள் என்ன பங்கில் திரும்பத் திரும்ப டிரேடிங் செய்கிறார்கள் என்று இரண்டையூம் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த இரண்டு பங்குகளைத்தான் நீங்கள் "ரஜினிகாந்த் டெக்னிக்கில்' பயன்படுத்தப் போகிறீர்கள்.
ஒரு பெரிசு டிரேடிங் செய்யூம் பங்கு.
ஒரு சிறுசு டிரேடிங் செய்யூம் பங்கு.
இந்த இரண்டு பங்குகளிலும் சிறுகச் சிறுக முதலீடு செய்து வாருங்கள்.
சரி அதென்ன "ரஜினிகாந்த் டெக்னிக்"
இதையேதான் விக்ரமும் பின்னால் ஃபாலோ செய்து வந்தார்.ரஜினிகாந்த் தமிழ்த்திரையூலகில் சூப்பர் ஸ்டார் ஆவதற்கு முன்னால் ஸ்டைல்மன்னன் என்ற பெயரில் இருந்தார்.அதற்கும் முந்தைய கால கட்டத்தில் வில்லனிருந்து சூடோ-ஹீரோவாக அவர் மாறிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழில் சிவாஜியூடன் நடிப்பார்.பெரும்பாலும் விஜயகுமார் படங்களில் இவர் ஸ்டைல் பண்ணிக் கொண்டிருக்க விஜயகுமார் சட்டைக் காலரை கடித்தபடி எம்ஜிஆரை பாடிக்கொண்டு மார்க்கெட்டை கோட்டை விடுவார்.தெலுங்கில் கிருஷ்ணாவூடன் நடிப்பார்.கன்னடத்தில் விஷ்ணுவர்த்தனுடன் நடிப்பார்.அதாவது இன்னொரு பிரபல கதாநாயகனுடன் இணைந்து இணைஹீரோவாக நடித்து ஆடியன்ஸை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்வார்.அதில் வெற்றியூம் பெறுவார்.
அதாவது ஒரு பிரபல ஹீரோ ப்ளஸ் பிரபலமாக விரும்பும் ஹீரோ.
இதில் ரஜினிகாந்த்தான் பிரபலமாக விரும்பும் ஹீரோ.
இதே ஃபார்முலாவைத்தான் ஷேர் டிரேடிங்கில் பயன்படுத்தி சுலபமாக காசு பார்த்திருக்கிறேன்.
இப்போது இந்த ஃபார்முலாவை சற்று அருகாமையில் பார்க்கலாம்.
ஒரு குறிப்பிட்ட செக்டாரை எடுத்துக் கொண்டால் அந்த செக்டாரில் மார்க்கெட் லீடராக இருக்கிற ஒரு பெரிய பங்கு.உதாரணமாக ஐடி செக்டார் என்றால் இன்ஃபோசிஸ்.அத்துடன் அதே செக்டாரில் முன்னுக்கு வரத் துடித்துக் கொண்டிருக்கிற ஒரு சிறிய பங்கு.உதாரணமாக சொனாடா சாப்ட்வேர் போன்றவை.
எப்போது ஈக்விட்டியில் டெலிவரியாக முதலீடு செய்தாலும் இந்த ரஜினி ஃபார்முலாவைப் பயன்படுத்தி ஒரு பெரிய பங்கு ப்ளஸ் ஒரு சிறிய பங்கு என்று வாங்கிக் குவிப்பது என் வழக்கம்.பெரிய பங்கு ஏறினால் அதை விற்று வரும் பணத்தில் சிறிய பங்கை வாங்குவதும் வாங்கிய சிறிய பங்கு ஏறினால் அதை விற்று பெரிய பங்கை(இது குறைவான எண்ணிக்கையில்தான் கிடைக்கும் என்றாலும் பரவாயில்லை) வாங்குவதுமாக எனது முதலீடு சென்று கொண்டிருக்கும்.ஏதாவது இன்ட்ரா டே செய்தோ ஆஃப்ஷனில் ஜெயித்தோ உபரியாக பணம் வந்தால் அந்த பணத்திலும் இந்த பெரிசு ப்ளஸ் சிறுசு- ஜோடிப் பங்குகளை வாங்கி வைப்பது என்று இந்த முதலீடு தொடர்ந்து கொண்டிருக்கும்.
செய்து பாருங்கள்.உங்களுக்கும் இந்த பெரிசு ப்ளஸ் சிறுசு என்ற "ரஜினிகாந்த் டெக்னிக்" நல்ல பலனைக் கொடுக்கும்.இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கான டெக்னிக்.
முதலீட்டாளர்களை டிரேடர்களாக மாற்றும் இடைநிலை பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்...
பங்குச்சந்தையில் ஈக்விட்டி செக்மன்ட்டில் வெறும் முதலீட்டாளர்களாக ஈடுபட்டு அவ்வப்போது பங்குகளை வாங்குவதும் விற்பதுமாக இருப்பதும் தினவர்த்தகத்தில் அவ்வளவாக லாபம் சம்பாதிக்காமல் ஏதோ நானும் டே டிரேடிங் செய்தேன் என்று இருப்பவர்களுக்கும் -
அதே போல ஆஃப்ஷன் டிரேடிங்கில் தினமும் ஒன்றிரண்டு லாட் மட்டும் எடுத்து டிரேடிங் செய்து பெரிதாக லாபம் சம்பாதிக்காமல் அவ்வப்போது மட்டும் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் முதலீட்டாளர்களுக்கும்
நமது தளத்தின் வாயிலாக இடைநிலை தபால்வழிப் பயிற்சியை வரும் அறிமுகப்படுத்துகிறௌம்.இந்த பயிற்சி முதலீட்டாளர்களை பணம் பண்ணும் ஆபரேட்டர்களாகவூம் ஆஃப்ஷன் சிறுடிரேடர்களை பெரிய டிரேடர்களாக்கும் விதத்திலும் இருக்கும்.
டிரேடிங்கில் திடீரென்று உயரப்போகும் ஷேர்களை எப்படி முன்கூட்டியே கண்டுபிடிப்பது எவ்வித ஷேர்களை எவ்விதம் வாங்கினால் முதலீடு விரைவில் பல மடங்காகும் என்பதை ஈக்விட்டி வகுப்பிலும் ஆஃப்ஷன் டிரேடிங்கில் ஏதோ படித்தோம்.ஏதோ வாங்கினோம் என்றில்லாமல் பெரிய டிரேடர்கள் எப்படி திடீர் திடீரென ஆர்டர் போட்டு பங்குகளை ஆஃப்ஷனில் பிடித்து பெரிய ஆளாகிறார்கள் அது போல நீங்களும் டிரேடிங் செய்ய என்னென்ன குறுக்குவழிகள் இருக்கின்றன என்பதை இந்த இடைநிலைப் பயிற்சி (intermediate course in trading in equity / options)வகுப்பில் சொல்லித் தர இருக்கிறேன்.
வழக்கம் போல தபால்வழிப் பயிற்சிக்கான பாடங்கள் மின்னஞ்சலில் வந்து சேரும்.
ஈக்விட்டி இடைநிலைப் பயிற்சிக் கட்டணம்: ரூ 15555 மட்டுமே
ஆஃப்ஷன் இடைநிலைப் பயிற்சிக் கட்டணம்: ரூ 15555 மட்டுமே.
ஏற்கனவே நமது தபால்வழிப் பயிற்சியில் சேர்ந்தவர்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்கலாம்.புதிதாக இந்த பயிற்சியில் சேர விரும்புவோர்கள் கவனத்திற்கு: உங்களுக்கு இந்த பயிற்சியில் சொல்லித் தரப்படும் உத்திகளைப் புரிந்து கொள்வதற்கு ஈக்விட்டி செக்மன்ட் என்றால் அது தொடர்பான விஷயங்களும் ஆஃப்ஷன் என்றால் அது தொடர்பான ஸ்ட்ராட்டஜிகளும் ஓரளவிற்கு தெரிந்திருந்தால்தான் இந்த பயிற்சியை சுலபமாக புரிந்து கொள்ள முடியூம் என்பதால் புதியவர்கள் நேரடியாக இந்த பயிற்சிக்கு வராமல் நாம் எப்போதும் நடத்தும் தபால்வழிப்பயிற்சியில்(அதற்கான கட்டணம் ரூ 5555 மட்டுமே) சேர்ந்து பத்து நாட்களில் தேர்ச்சி பெற்று விட்டு இந்த பயிற்சிக்கு வருதல் நலம்.
பயிற்சியில் சேர விரும்புவோர்கள் பின்வரும் வங்கிக் கணக்கில் கட்டணத்தை செலுத்தி விட்டு கட்டணம் செலுத்திய விபரத்துடன் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து விட்டு பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.
வங்கிக் கணக்கு விபரம்:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
Amount:Rs 15555/- only
ConversionConversion EmoticonEmoticon