கார்கள் விற்பனை நமது நாட்டில் சூடு பிடித்திருப்பதை அறிவீர்கள்.அழகு சாதன விளம்பரங்களுக்கு அடுத்தபடியாக சேனல்களில் வரும் விளம்பரங்கள் கார்கள் சம்பந்தப்பட்ட விளம்பரங்கள்தான்.புதிய கார்களுக்கு சமமான பழைய கார்களின் விற்பனையூம் வெகு ஜோராக நடந்து வருகிறது.
நிறைய பேர்கள் புதிதாக ஒரு ஹாட்ச்பேக் என்ற சிறிய ரக கார்களை வாங்குவதை விட சமீபத்திய பழையகார்களாக ஒரு மிட்சைஸ் காரை சேடான் ரக காராக வாங்கி விட மாட்டோமா என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள்.
பழைய கார்களை வாங்குவது நல்லதா கெட்டதா என்பதை இப்போது ஜோதிடரீதியாகப் பார்ப்போம்.
வண்டி வாகன வகையைச் சேர்ந்த கார் என்பது ஒருவரது ஜாதகத்தில் நாலாம் இடம் சம்பந்தப்பட்டதாக வருகிறது.ஒருவரது ஜாதகத்தில் நாலம் இடம் வலிமை பெற்றதாகவூம் நல்ல பார்வையை பெற்றதாகவூம் இருந்தால்தான் அவரது வாழ்க்கையில் சொந்தக் கார் வாங்க முடியூம்.அந்த வலிமை என்பது சுக்கிரன் சம்பந்தப்பட்டதாக இருந்தால் புத்தம் புதிய சொகுசுக்காராகவூம் செவ்வாய் சம்பந்தப்பட்டதாக இருந்தால் செகன்ட் ஹான்ட் காராகவூம் சூரியன் சம்பந்தப்பட்டதாக இருந்தால் ஆபீஸ் காராகவூம் அமையூம்.
இப்போது பழைய கார் வாங்கும் விஷயத்திற்கு வருவோம்.நீங்கள் வாங்கக் கூடிய பழைய கார் யாரிடமிருந்து விற்பனைக்கு வந்திருக்கிறது என்று பாருங்கள்.ஒரு டாக்டர் அந்த காரை வைத்திருந்து விட்டு விற்றிருக்கிறாரானால்(செவ்வாய் வலுத்தவர்கள் சர்ஜனாக இருப்பார்கள்) அதை தாராளமாக வாங்கலாம்.செவ்வாயின் தாராள மனப்பான்மை காரணமாக அந்த காரை அவர் விற்று விட்டு வேறொரு புதிய சொகுசுக்காரை வாங்கியிருந்திருக்கலாம்.இது போன்ற காரை எந்த சாஸ்திரமும் பார்க்காமல் வாங்கி விடலாம்.
அதாவது டாக்டர்கள் விற்கும் காரை எந்த சந்தேகமும் யோசனையூம் இன்றி வாங்கி விடலாம்.அதில் யாருக்கும் எந்த சிக்கலும் வராது.காரும் சுத்தமாக அதிக கிலோமீட்டர்கள் ஓட்டப்படாமல் இருந்திருக்கும்.
வேறு ஏதோ காரணத்திற்காகவோ அல்லது அதிகமாக அளவூ ரிப்பேர் ஏற்பட்டு அந்த காரை வைத்து பராமரிக்க முடியாமல் அதை வைத்திருந்தவர் விற்றிருந்தால் அதை வாங்கவே கூடாது.காரணம் அதை விற்றவருக்கு செவ்வாயின் தாக்கம் நெகட்டிவ்வாக இருந்திருக்கிறது.அதை வாங்கி விட்டு நீங்களும் அவதிப்படக்கூடாது.
இது எப்படி சரியாகும்.அவருக்குத்தானே செவ்வாய் சரியில்லை.என் ஜாதகத்தில் சரியாகத்தானே இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.ஒரு காலி டப்பாவில் ஒரு பெருங்காயத்தைப் போட்டு வைத்திருந்து விட்டு பெருங்காயத்தை எடுத்தபிறகும் அந்த டப்பாவில் எப்படி பெருங்காய வாசனை அடிக்கிறதே அதே போல அந்த காரில் செவ்வாயின் நெகட்டிவ்வான தாக்கம் இருந்தே தீரும்.
இது போன்ற வாங்கினால் பிரச்சனை கொடுக்கக் கூடிய கார்களை செவ்வாயை வைத்துப் பார்க்காமல் சுக்கிரனை வைத்தும் பார்க்கலாம்.
அதெப்படி இங்கே சுக்கிரன் வருகிறார் என்று கேட்கலாம்.ஒரு சூட்சுமமமான பரிசோதனையை நீங்களே செய்யலாம்.செகனட் ஹான்ட் கார் விற்கும் இடத்திற்கு போகும் இடத்தில் காரை அறிமுகம் செய்து வைக்கும் நபர் நெற்றியில் குங்குமம்வைத்திருந்து வெற்றிலையோ சுபாரியோ பான்பராக்கோ போட்டுக் கொண்டு எச்சில் துப்பிக்கொண்டிருப்பவராக இருந்தால் வேண்டவே வேண்டாம்.அங்கே செவ்வாய் வக்கிரமாக உட்கார்ந்திருக்கிறது.அவர் காட்டும் காரை வாங்கவே வேண்டாம்.
அப்போ சுக்கிரன்?
அதற்குத்தான் வருகிறேன்.
நீங்கள் வாங்கப் போகும் காரின் என்ஜினை எல்லாம் முதலில் பார்க்க வேண்டாம்.காரை ஆன் செய்து ஏசியை போடச் சொல்லுங்கள்.எந்த விதமான மோசமான சப்தமும் இல்லாமல் ஏசி சரியான இயங்கினால் அந்த கார் தரமானது.சுக்கிரனின் அனுக்கிரகம் உள்ள கார்.ஏசிக்கு காரணகர்த்தா அங்கே சுக்கிரன்தான்.அத்துடன் சீட் கவர்களைப் பாருங்கள்.நுரல் பிரிந்து போய் கிடக்காமல் சுத்தமாக இருந்தாலும் சுக்கிரனின் ஆசி அங்கே அந்த காரில் உள்ளது.எனவே அது பழைய காராக இருந்தாலும் அதனை வாங்கி விடலாம்.
என்ஜினை கூட பார்க்காமல் வெறும் ஏசியைப் பார்த்து பழைய காரை வாங்குவதா என்று நினைக்க வேண்டாம்.பழைய காரை சூட்சுமமாக பரிசோதிப்பதில் இதுவூம் ஒரு முறை.பயன்படுத்திப் பாருங்கள்.
பழைய கார்களை பொதுவாக செவ்வாய் பாதகமான நிலையில் இருப்பவர்களும் செவ்வாய் வக்கிரமான நிலையில் இருப்பவார்களும் வாங்காதீர்கள்.அவர்கள் புதிய கார்களையே வாங்குவது நல்லது.
இதுவரை சொந்தமாக கார் வாங்க ஆசைப்பட்டும் ஆசை நிறைவேறாதவர்கள் முருகனையூம் தத்தாத்ரேயரையூம் வணங்கி வாருங்கள்.கார் வாங்கும் சந்தர்ப்பம் கூடி வரும்.அப்படி வரும்போது ஒரு தடவை உங்களது ஜாதகத்தைப் பார்த்து விட்டு அதற்கேற்ற காராக வாங்கிக் கொள்ளுதல் நலம்.
திருமணம் / உத்யோகம் இவற்றிற்கான ஜாதகபலனும் பரிகாரங்களும்
இதை செய்ய வேண்டாமென்றுதான் இத்தனை நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன்.ஷேர் டிரேடிங்கான ஜாதகபலனும்
பரிகாரங்களும் மட்டும் செய்தால் போதுமென்று நினைத்திருந்த வேளையில் ஷேர் டிரேடிங் செய்பவர்களிடமிருந்தே
இவற்றிற்கான வேண்டுகோள்கள் வந்து குவிந்து விட்டன.அதனால் திருமணத் தடை, திருமணவாழ்வில் உள்ள பிரச்சனைகள்
மற்றும் படித்திருந்தும் வேலை கிடைப்பதில் உள்ள தடைகள் வேலை கிடைத்தபின்பும் உத்யோகத்திலுள்ள பிரச்சனைகளுக்கான
ஜாதகபலன் மற்றும் சூட்சுமப்பரிகாரங்களைப் பெற இதற்கான எளிய கட்டணமாக ரூ 2555/-ஐ பின்வரும் வங்கிக் கணக்கில்
செலுத்தி விட்டு பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் மற்றும் தற்போது வசிக்கின்ற ஊர் போன்ற விபரங்கள் அல்லது
ஸ்கேன் செய்த ஜாதக நகலுடன் மின்னஞ்சல் செய்து விட்டால் போதும்.ஜாதகபலனுடன் பரிகாரங்களை தெரிவித்து
மின்னஞ்சலில் அனுப்பி விடுகிறௌம்.
Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 2,555/-
ConversionConversion EmoticonEmoticon