"ஒவ்வொரு நிமிடமும் பணம்" இந்த ஆகஸ்டு மாதம் வெளியானது.வெளியான ஒரே வாரத்திலேயே அத்தனை பிரதிகளும் விற்பனையாகி முதல்பதிப்பு முழுவதும் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்துள்ளது.இதற்கு காரணம் நமது தளத்தின் வாசகர்களாகிய நீங்கள்தான்.
இதற்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறௌம்.இப்போது இந்த புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு ரெடியாகிக்கொண்டிருக்கிறது.
"ஒவ்வொரு நிமிடமும் பணம்' ஆஃப்ஷன் புத்தகத்தின் இரண்டாவது பதிப்பு செப்டம்பர் 4ம் தேதி எவ்வித தாமதமும்இன்றி வெளியாகிறது.புத்தகம் வேண்டுவோர் பின்வரும் வங்கிக் கணக்கில் புத்தகத்தின் விலையான ரூ 555ஐ செலுத்தி விட்டு பணம் செலுத்திய விபரத்துடன் மின்னஞ்சல் (bullsstreettamil@gmail.com) அல்லது குறுஞ்செய்தியில் தகவல் தெரிவித்தால் புத்தகத்தை கொரியரில் அனுப்பி வைக்கிறௌம்.தமிழ்நாட்டிற்குள் கொரியார் செலவை நாங்களே ஏற்றுக்கொள்கிறௌம்.மற்ற மாநிலங்களுக்கு என்றால் புத்தக விலையூடன் ரூ 75ஐ சேர்த்து செலுத்துங்கள்.சிங்கப்புர் மலேஷியா சிலோன் போன்ற அருகாமையில் உள்ள வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டுமென்றால் புத்தக விலையூடன் ரூ 200ஐ சேர்த்து செலுத்துங்கள்.
புத்தகத்தை கொரியர் வாயிலாகத்தான் வாங்கிக் கொள்ள இயலும்.நேரில் வந்து அணுக வேண்டாம்.
வங்கிக் கணக்கு விபரம்:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
Amount:Rs 555/- only
குறிப்பு: சென்ற வாரம் ஒரு அன்பர் சென்னை நங்கநல்லுரரிலிருந்து தொடர்பு கொண்டு இரண்டு வெவ்வேறு தலைப்பிலுள்ள புத்தகங்களைக் குறிப்பிட்டு இரண்டு புத்தகங்களையூம் வாங்கிக் கொள்ள பணம் அனுப்புகிறேன் என்றார்.அதன்பின் மறுபடி தொடர்பு கொண்டு ஒரு புத்தகத்திற்கு மட்டும் பணம் அனுப்புகிறேன் என்றார்.பின் அவர் பணம் அனுப்பினாரா என்று தெரியவில்லை.புத்தகத்தை ஒரு நம்பிக்கையின் பேரில் அனுப்பி வைத்து விட்டோம்.இரண்டு நாள் கழித்து தொடர்பு கொண்டு இந்த புத்தகத்தை நான் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன்.ஆனால் இந்த புத்தகத்தை விட எனக்கு அந்த புத்தகம்தான் வேண்டும்.அதனால் இந்த புத்தகத்தை அனுப்பி விடுகிறேன்.கொரியர் சார்ஜை தந்து விடுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
என்ன ஒரு அரைவேக்காட்டுத்தனமான புத்திசாலித்தனம் பாருங்கள்.
இரண்டு புத்தகங்கள் வேண்டுமென்பாராம்.ஆனால் ஒரு புத்தகத்திற்கு பணம் செலுத்துவாராம்.அந்த புத்தகத்தை ஓசியில் படித்து விட்டது போல படித்து விட்டு அதே பணத்திற்கு அடுத்த புத்தகத்தை கேட்பாராம்.
ஒரு புத்தகம் உருவாவது அத்தனை சுலபமான செயல் அல்ல.ஒருத்தர் தன் அறிவையூம் அனுபவத்தையூம் கலந்து அத்துடன் தனது எழுத்தாற்றலின் பேரில் எழுதித் தருவதை கணிணியில் சிலர் அச்சு கோர்ப்பு செய்கிறார்கள்.அதை அச்சகத்தில் சிலர் அச்சாக்கம் செய்டகிறார்கள்.அட்டைப்படத்திற்கு ஒரு வரைகலை ஓவியர் கணினி வாயிலாக வரைகிறார்.இதிலும் அவரது கற்பனைத்திறன் படைப்புத் திறன் அடங்கியிருக்கிறது.அதன்பின் அந்த புத்தகத்தின் தாள்களை பசை கொண்டு ஒட்டுகிறார்களே அவர்களது விரல்களிலும் ஒரு படைப்புத்திறன் இருக்கிறது.இறுதியாக அந்த தாள்களை அடுக்கி அட்டையூடன் பைன்ட் செய்கிறாரே பைன்டர் அவரைக் கூட நாம் சாதாரணமாக எண்ணி விட முடியாது.ஒரு பைன்டரும் ஒரு கலைஞன்தான்.அவர் இல்லாமல் ஒரு சிந்தனை செயல் புத்தக வடிவம்பெறவே முடியாது.
கடைசியில் புத்தகத்தை எடுத்துச் சென்று டெலிவரி செய்யூம் கொரியர் பையன் கூட ஒரு படைப்பாளிதான்.புத்தகத்தை வாசகரின் கையில் கொண்டு போய் தரும் அவனும் ஒரு கலைஞன்தான்.
இந்த இத்தனை பேரையூம் ஏமாற்றலாம் என்று அந்த நங்கநல்லுரர் நாதாரி(இந்த கடினமான வார்த்தையை பொறுத்துக் கொள்ளுங்கள்) நினைத்தால் இதற்கு பதிலடியாக ஒரே ஒரு சாபத்தைத்தான் என்னால் கொடுக்க முடிகிறது.
மதிப்பிற்குரிய அந்த நங்கநல்லுரர் நாதாரி இனி எந்த காலத்திலும் எழுந்தரிக்க முடியாமல் ஷேர் டிரேடிங்கில் நஷ்டமாகி நாசமாகிப் போகட்டும்.எழுத்தாற்றல் மிக்கவனின் சாபம் பலிக்கும்.இன்றைக்கு புத்தகத்தின் இரண்டாவது பதிப்பு விஷயமாக போயிருந்தபோது பைன்டரிடம் இந்த விஷயத்தை சொன்னபோது அவரும் அதேதான் சொன்னார்.அவர் விட்ட சாபத்தை இங்கே எழுத்தில் வடிக்க முடியாது.கைகளும் விரல்களும் காய்ந்து போயிருந்த அந்த பைன்டர் சொன்னதும் பலிக்கட்டும்.
ConversionConversion EmoticonEmoticon