"தண்ணீராகப் பரவூங்கள்"
வாய்ப்புகள் ஒருமுறைதான் வந்து வாசல் கதவைத் தட்டும்.வரும் வாய்ப்பை நழுவவிட்டு விட்டால் அப்புறம் கிடைக்காது.முயற்சி திருவினையாக்கும்.தெய்வத்தால் முடியாதென்றாலும் முயற்சி நமக்கு வெற்றியை தரும்.
மேற்கண்ட வாக்கியங்களைப் பாருங்கள்.எல்லாமே டெம்ப்ளேட்டாக சொல்லி வைத்த மாதிரி இல்லை?
யார் சொன்னது வாய்ப்பு ஒரு முறைதான் வந்து கதவைத் தட்டும் என்று.ஒவ்வொரு முறை கதவூ தட்டப்படும்போதெல்லாம் எதிரே ஒரு வாய்ப்புதான் நின்று கொண்டிருக்கிறது.நாம்தான் மேற்படி பழமொழிகளை கேட்டுக் கேட்டு ஒரு ரொட்டீன் வாழ்க்கைக்கு தயாராகி விட்டோம்.
சற்று கிறுக்குத்தனமாக ஒரு கேள்வி.
கோபிக்காதீர்கள்.அதுதான் கிறுக்குத்தனமான கேள்வி என்று சொல்லி விட்டேனே.கேள்வி இதுதான்.நாம் எப்படி நடக்கிறௌம்.நேராக முன்னோக்கி கை வீசிக்கொண்டு நடக்கிறௌம்.இது தெரியாதா என்பீர்கள்.
ஏன் நாம் பின்னோக்கி நடப்பதில்லை?
ஏன் நாம் நண்டு போல சைடுவாக்கில் நடப்பதில்லை?
கேள்வியே கேனத்தனமாக இருக்கிறதுதானே.
கார்களை பின்னோக்கி நகர்த்த முடிகிறது.போரில் பயன்படுத்தப்படும் ராணுவ டாங்க்களை பக்கவாட்டில் நகர்த்த முடிகிறது.
ஆனால் நாம் ஏன் அது போல நடப்பதில்லை?
இங்கே நடப்பது என்பதை ஒரு 'பிசிக்கலான' விஷயமாக நான் பொருள்கொள்ளவில்லை.அட்லீஸ்ட் நமது சிந்தனை கூட பின்னோக்கிச் செல்கிறது.ஆனால் பக்கவாட்டில் செல்வதில்லை.
இது வரை வாசித்தது உங்களுக்கு சற்று குழப்பமாக இருக்கலாம்.
தண்ணீரை சிறிதளவூ எடுத்து கீழே சமமான ஒரு தரையில் கொட்டிப் பாருங்கள்.அது எல்லா திசையிலும் சீராகப் பரவூம்.அந்த தரை சமதளமான இல்லையென்றால் எந்த திசை அதிக சாய்மானமாக இருக்கிறதோ அந்த திசை நோக்கிப் பரவூம்.அது போல நாமும் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டுமென்று சொல்கிறேன்.இதையே இன்னும் சற்று எளிமையாகச் சொல்வதென்றால் எந்தப் பக்கம் வாய்ப்பு வந்தாலும் அதைப் பற்றிக் கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.
ஒரு உதாரணம் சொன்னால் புரியூம்.
ஐடி வேலைக்கான ஒரு இன்ஜினியரிங் முடித்த மாணவர் வங்கித் தேர்வூக்கும் தயார் செய்யலாம்.விஏஓவிற்கும் தயார் செய்யலாம்.ஏன் ஐடியிலேயே ஜாவாவில் நிபுணத்துவம் பெற்றிருந்தால் சாப் பற்றி யோசிக்கலாம்.மொபைல் டெக்னாஜியில் (அதிலும் ஐஓஎஸ் ஆன்டிராய் என்று பன்முகமாக) நிபுணத்துவத்தைப் பெற முயற்றிக்கலாம்.அதாவது ஒரு மல்டிடொமைன் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்க முயற்சி செய்யூங்கள் என்கிறேன்.
ஸ்பெஷலிஸ்ட் என்றால் ஒரே ஒது துறையில் மட்டும்தானே நிபுணத்துவம் பெற்றிருப்பார்கள்.ஆனால் வெவ்வேறு துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தால் எந்த துறையில் வேண்டுமானாலும் பிழைத்துக் கொள்ளலாம்.
இன்னும் எளிமையாகச் சொல்வதென்றால் காலையில் வீடு வீடா பேப்பர் போடும் பையன் ஒரு பாலீதீன் பையில் ஒரு பிரான்டட்(அவரே ஒரு சொந்த பிரான்ட் பெயர் போட்டு) வீடு வீடாக(எல்லா வீட்டிலும் வாங்க மாட்டார்கள் என்றாலும்) கீரை போடலாம்.அதே போல காளான் பாக்கெட் போடலாம்.குழந்தைகளை பள்ளிகளுக்கு தயார் செய்து அனுப்பும் நேரம் என்பதால் ஐந்து ரூபாய் மதிப்புள்ள பிஸ்கெட் பாக்கெட் போடலாம்.யார் கேட்டாலும் உடனே எடுத்து விற்பதற்கு ஐந்து ரூபாய் ரீபில் அல்லது ஜெல் பேனா வைத்திருந்து விற்கலாம்.இது போல சிந்தித்துப் பார்த்தால் ஒரு பேப்பர் போடும் பையன் காலையில் அதே நேரத்தில் அதே வீடுகளுக்கு அதே பெட்ரோல் செலவில்(இப்போதெல்லாம் பேப்பர் போடுபவர்கள் ஹோன்டா ஷைனில்தான் வருகிறார்கள்) பத்து விதமான பொருட்களை தினமும் விற்கலாம்.
ஒரு பொருளுக்கு ஐம்பது பைசா லாபம் என்று கணக்கிட்டால் பத்து பொருட்களுக்கு ஐந்து ரூபாய் வருகிறது.ஒரு பேப்பர் போடும் பையன் கவர் செய்யூம் ஏரியாவில் ஐநுரறு வீடுகள் குறைந்தது இருக்கும் என்றால் அதில் பத்து சதவீத வீடுகளில் அதாவது ஐம்பது வீடுகளிலிருந்து தோரயமாக(ஒவ்வொரு வீட்டிலும் பத்து பொருட்களை வாங்க மாட்டார்கள் என்பதால் வெவ்வேறு வீடுகளில் வாங்கப்படும் பொருட்களை நார்மலைஸ் செய்தால் ஐம்பது என்ற எண்ணிக்கை சுமாராக வரும் என்பதால்) ஒரு நாளைய லாபம் மட்டும் ரூ 250 வருகிறது.ஞாயிற்றுக் கிழமைகளில் பாக்கெட்டில் சிக்கன் லெக் பீஸ் போட ஒரு பாக்கெட் 300 கிராம் என்று அதிலும் லாபம் வைத்துப் போடலாம்.ஐம்பது ரூபாய் பாக்கெட் என்று அசார்ட்டட் ஆக காய்கறிகளும் போடலாம்.இதே லாப சதவீதத்தில் ஏனென்றால் அன்றைக்கு பள்ளிகளில் விடுமுறை.
அதனால் ஒரு மாதத்திற்கு கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு நாளைய ரூ 250 என்பது ரூ 7500 ஆகிறது.
இதையே நீங்கள் பிசினஸ் ஆக செய்ய விரும்பினால் கல்லுரி செல்லும் பையன்களை பார்ட் டைமாக வைத்து பத்து ஏரியாக்ளை கவர் செய்தால் கிடைப்பது ஒரு மாதத்திற்கு ரூ 75000 வரும்.சற்று மாற்றி யோசித்து இன்னும் சில பொருட்களைச் சேர்த்தால் மாதம் ஒரு லட்சத்தை சாதாரண பேப்பர் போடும் வேலையிலேயே செய்து விடலாம்.
ஆனால் ஏன் யாரும் செய்யவில்லை?
அதனால்தான் சொல்கிறேன்.நாம் எல்லோரும் முன்னால் மட்டும்தான் நடக்கிறௌம்.பக்கவாட்டிலும் பின்னாலும் கூட நம்மால் நடக்க முடியூமென்று நமக்கே தெரியவில்லை என்று.
ஒரு பேப்பர் போடும் பையனே மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்க முடியூம்போது மாதாமாதம் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் நீங்கள் ஏன் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் சம்பாதிக்கவில்லை என்று யோசித்துப் பாருங்கள்.
விடை கிடைக்கும்.
தண்ணீராக பரவூங்கள்.எல்லா திசைகளும் நமக்கே.எல்லா திசைகளிலிருந்தும் வாய்ப்புகள் வரும்.ஒவ்வொரு முறை யார் கதவைத் தட்டினாலும் வந்திருப்பது வாய்ப்பு என்று உணருங்கள்.
வாழ்த்துக்கள்!
ConversionConversion EmoticonEmoticon