கதவைத் திற காசு வரட்டும் - 54
தொல்லை தரும் மனிதர்களும் அவர்களது கவனக்குறைவால் அவர்களது தவறால் நமக்கு இடா;பாடுகளை ஏற்படுத்தி விட்டு அவர்கள் மேல் தவறே இல்லை என்றும் நம்மீதுதான் எல்லா தவறும் இருக்கிறது என்றும் சீன் கிரியேட் பண்ணும் மனிதர்கள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்வார்கள்.
இது போன்ற சூழ்நிலையில் உடனடியாக உங்களுக்கு கோபமோ வெறுப்போ வரலாம்.அவர்கள் செய்யூம் அநாகரிகமான செயலுக்கு உடனே எதிர்வினையாற்ற வேண்டுமென்றும் கூட தோன்றலாம்.
ஆனால் அது போல எதிர்வினையாற்றினால் அது பதிலுக்கு பதில் என்று வளர்ந்து கொண்டே போகும்.அந்த மாதிரி வளர்ந்து கொண்டே போனால் அதன் வடு மனதில் ஆழமாக பதிந்து போவதோடு அடுத்து எதிர்ப்படும் எல்லா மனிதர்களிடமும் அன்பைக் காட்ட இயலாமல் நீங்கள் விலகி நின்றே ஒரு எச்சரிக்கையோடு எதிலும் செயல்பட ஆரம்பித்து விடுவீர்கள்.
அப்படி எதிலும் விலகி நின்று எச்சரிக்கையோடு எதையூம் செய்ய ஆரம்பித்தால் அதில் ஒரு ஆத்மார்த்தமான ஈடுபாடு இருக்காது.ஒரு பரஸ்பர புரிதலை ஏற்படுத்தக்கூடிய தன்மை இருக்காது.உங்களது செயலே ஒரு வணிக நோக்கில் அமைந்து விடக் கூடும்.
அதனால் இது போன்ற தொல்லை தரும் மனிதர்களை என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்த்தால் அவர்களது இன்னொரு பக்கத்தை மானசீகமாக நீங்கள் அனலைஸ்செய்து பார்க்கலாம்.இது போன்ற மனிதர்கள் பெரும்பாலும் பயத்திலும் தனிமையிலும் எப்போது என்ன ஆகுமோ என்ற தவிப்பில் இருப்பவர்களாக இருப்பார்கள்.அந்த பயத்தின் காரணமாகத்தான் அடுத்தவர்களுக்கு தொல்லை தந்து இன்பம் காண்கிறவர்களாக மாறுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அவர்களை அனுதாபத்தோடு ஒரு பார்வை பாருங்கள் போதும்.அது பத்து மரண அடிகளுக்கு சமம்.ஒரு போதும் அவர்களை கேலியாகவோ கோபமாகவோ பார்த்து விடாதீர்கள்.
அண்மையில் கூட ஒரு வங்கியில் எனது டெபாசிட் பணத்தை மறுபடியூம் எனது வங்கி சேமிப்புக் கணக்கில் உரிய நாளில் சேர்ப்பிக்க மறந்து விட்டு தான் வெளியே சென்று விட்டதால் அப்படி நேர்ந்து விட்டது என்பதை தான் தவறே செய்யவில்லை என்று சாதித்த ஒரு வங்கி அலுவலரும் அவரது மேலாளரும் எனது டெபாசிட் பணத்தின் ஒரு பகுதியை பிடித்துக் கொண்டு எனது கணக்கில் சேர்ப்பித்து விட்டு அதிகாரமாக பேசினார்கள்.எதிர்த்து பேசாதே.சொல்வதை; கேள்.நாங்கள் அதிகாரிகள் என்றார்கள்.தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போதே ரிசீவரை ஓங்கி எறிந்தார் அந்த முதுநிலை மேலாளர்.
இதற்காக கவலைப்பட வேண்டுமா?கோபப்பட வேண்டுமா? அவர்கள் மீது அனுதாபப்படத்தான் தோன்றியது.அவர்களது வங்கியில் பெரிய சைசில் ஒரு பலகையில் அறிவிப்பு வேறு வைத்திருக்கிறார்கள்.வாடிக்கையாளர்கள் யாராவது எதிர்த்துப் பேசினால் அவர்களை ஜாமீனில்வர முடியாதபடி இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் அபராதத்தை விதித்து உள்ளே தள்ளி விடுவோம் என்று.
சற்று யோசித்துப் பாருங்கள்.
ஒரு வங்கி என்பது சேவை சார்ந்த தொழில் நடைபெறும் நிறுவனம்.வாடிக்கையாளர்கள்தான் அவர்களது முதுகெலும்பு.வாடிக்கையாளர்களை உள்ளே தள்ளுவோம் என்று ஒரு வங்கி அறிவிப்பு பலகையை அதுவூம் கவூன்டரில் பணம் கட்டும் இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்றால் அந்த வங்கி என்ன மாதிரியான கலாச்சாரத்தில் ஊறிப்போயிருக்கிறது.இத்தனைக்கும் நேசத்தைக் கடந்த உறவூகள் என்று விளம்பரங்களில் பீற்றிக் கொள்ளும் அந்த வங்கியில் இது போல ஒரு பலகையை வைத்திருக்கிறார்கள் என்றால் அந்த வங்கியூம் அதில் பணியாற்றுபவர்களும் அந்த மேலாளரும் உண்மையிலேயே மிகவூம் அனுதாபத்திற்குரியவர்கள் என்றே கருத வேண்டும்.ஏனென்றால் தினம் தினம் அவர்கள் பயந்து போயிருக்கிறார்கள்.
சரி சொந்த விஷயத்தை இந்த கட்டுரையில் எழுதாமல் தவிர்த்திருக்கலாம்.ஏனோ இது போன்ற மனிதர்களை நீங்களும் எங்காவது சந்தித்துக் கொண்டே இருக்கலாம்.அவர்கள் மீது கோபப்படாமல் அனுதாபம் காட்டுங்கள் என்று சொல்ல வேண்டுமென்பதற்காகத்தான் எழுத வேண்டியதாயிற்று.
இது போன்ற மனிதர்களுக்கு நீங்களே அவர்கள் அனுதாபத்திற்கு உரியவர்கள் என்றொரு தீர்ப்பை எழுதி விட்டு உங்களது பாதையில் நீங்கள் மேலே மேலே என்று முன்னேறிச் செல்லுங்கள்.கால ஓட்டத்தில் இது போன்ற மனிதர்கள் வந்து போனது எல்லாம் ஒரு நாள் ஃப்ளாஷப்பேக்காகப் பார்க்கும்போது சிரிப்பாக இருக்கும்.அப்போது அந்த மனிதர்கள் தொலைந்து போயிருப்பார்கள்.
ConversionConversion EmoticonEmoticon