இப்பொழுதெல்லாம் ஆன்லைன் டிரேடிங்கும் மொபைல் டிரேடிங்கும்அதிகமாகி விட்ட நிலையில் முன்பு போல யாரும் ஷேர் டிரேடிங் அலுவலகத்திற்குச் சென்று ஆர்டர் போடுவதில்லை என்பதை அறிவீர்கள்.நமது தளத்தின் வாயிலாக சிறுமுதலீட்டாளர்கள் என்னிடம் ஆஃப்ஷன் டீமில் தொடர்பில் இருப்பார்கள்.அது போல நமது மெயின்வெப்சைட்டின் வாயிலாக நடத்தப்படும் பெரிய முதலீட்டாளர்களுக்கான ஆஃப்ஷன் டீம் மற்றும் ஈக்விட்டி ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் டீம் குழுக்களின் உறுப்பினர்களிடமும் நான் சந்தை நேரம் முழுக்க சாட் இணைப்பில் இருப்பேன்.
பெரிய முதலீட்டாளர்களுக்கான ஈக்விட்டி ஸ்பெகுலேட்டிவ் டீம் குழுவினர்களுடன் தொடர்பில் இருக்கும்போது எப்போதாவது அத்திப்பூத்தாற்போல சாம்சன் லைனில் வருவார்.சிங்கப்பூரில் இருக்கிறார் சாம்சன்.
அவர் வந்தாலே அன்றைக்கு மழை வரப்போகிறது என்று அர்த்தம்.இங்கே மழை என்றால் எங்களுக்குள் பரிமாறிக்கொள்ளப்படும் சங்கேத வார்த்தை.
"மழை வர்றாப்ல தெரியூதே.மேகமூட்டமா இருக்கே விஜய்ஜீ"என்பார்.அவர் அப்படி சொல்ல ஆரம்பிக்கும்போதே சடசடவென மழை பெய்ய ஆரம்பிப்பது போல நான் நாலைந்து கருப்புக்குதிரைகள் எனப்படும் பங்குகளை எடுத்து அவற்றில் அன்றைய நிலையைப் பார்த்து வைத்து விடுவேன்.ஏனென்றால் சரியாக அவற்றில் ஒன்றைத்தான் சாம்சன் அடுத்து கேட்பார்.
"என்னாச்சு ஜெஸ்ட் புட்டுக்கிச்சா.சும்மா ஜேஎல்ஆரை வைச்சு ஓட்டறானுங்க போல" என்பார்.
அவர் ஜெஸ்ட் என்று சொல்வது அண்மையில் டாடாமோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜெஸ்ட் என்ற காரைப் பற்றியதாக இருக்கும்.அப்படியானால் டாடாமோட்டாரை அவர் குறி வைத்து விட்டார் என்று அர்த்தம்.நாமும் அவருக்கு அவ்வப்போது டாடாமோட்டார்ஸ் மற்றும் டாடாஎம்டிஆர்டிவிஆர் பங்குகளைப் பற்றி ரிப்போர்ட் கொடுத்து வந்திருக்கிறௌம்.
"மரத்தடியில ஒதுங்கலாமா.குடை எடுத்துக்கலாமா"
"இப்போதைக்கு ஒதுங்கிருங்க சாம்சன்.குடை எடுக்க தேவையில்லை"
மழை என்று சாம்சன் குறிப்பிடுவதைப் பற்றி உங்கள் எல்லோருக்கும் புரியூம்படி சொல்லிவிடுகிறேன்.
மழை பெய்வதை கவனித்திருக்கிறீர்களா?
மழை அடித்து ஊற்றுவதைப் பார்த்தால் இன்றைக்கு எப்படியூம் இரண்டு மணி நேரமாவது மழை பெய்யப்போகிறது என்று நமது மனதிற்கே தெரியூம்.ஆனால் அந்த இரண்டு மணிநேரமும் ஒரே மூச்சாக மழை என்றைக்குமே ஒரேயடியாக அடித்துக் கொண்டே இருப்பதில்லை.சிறுகச் சிறுக அதன் வேகம் குறைந்து கொண்டே வரும்.சில நிமிடங்கள் மழை விட்டு விட்டது போல தெரியூம்.வண்ணக்குடைகளை விரித்துக் கொண்டு குமுதாக்களும் பிளாஸ்டிக் பைகளை தலையில் கவிழ்த்துக் கொண்டு சுமார் மூஞ்சி குமார்களும் வெடவெடவென்று மழைக்கோட்டை மாட்டிக்கொண்டு தைரியம் வரப்பெற்றவர்களாக ரொம்ப சுமார் மூஞ்சிக் குமார்களும் வெளியே ரோட்டில் நடக்க ஆரம்பிப்பார்கள் பாருங்கள் அந்த நிமிடம் பார்த்து மறுபடியூம் மழை சடசடவென்று திரும்பவூம் பெய்ய ஆரம்பிக்கும்.வண்ணக்குடை விரித்தப் பெண்களை பார்த்தபடியே அனைவரும் திரும்பி வந்து நிற்க ஆரம்பிப்பார்கள்.அப்புறம் ஒரு அரை மணிநேரம் மழை அடித்து ஊற்றும்.அதன்பின் மறுபடியூம் ஒரு பிரேக் விடும்.அப்புறமும் மழை தொடரும்.
கவனித்திருக்கிறீர்களா?
சாம்சன் எதிர்பார்ப்பதும் இதைத்தான்.பெய்ய ஆரம்பிக்கிற மழை எப்படி ஒரு இடைவெளி விட்டு மறுபடி மழையை தொடர்கிறதோ அது போல அன்றைய தினம் சரசரவென்று ஏற ஆரம்பிக்கிற குறிப்பிட்ட பங்கு ஒரு பிரேக் எடுத்துக் கொண்ட மாதிரி சிறிது நேரம் கழித்து கீழே வரும்.அந்த கீழே வரும் நிமிடத்தில் ஒரே விலையிலேயே திரும்பத் திரும்ப நின்று கொண்டிருக்கும்.அப்புறம் மறுபடி ஏறத் தொடங்கி விடும்.மறுபடியூம் பிரேக் எடுத்துக் கொண்டு அதன்பின் மறுபடியூம் இதே போல செயல்படும்.
இறங்க ஆரம்பிக்கிற பங்குகளும் இதே போல்தான்.இறங்கிக் கொண்டே வரும்போது சிறிது இடைவெளியில் மேலே சிறிது ஏறிப்போய் நின்று கொண்டே இருந்து விட்டு அப்புறம் மறுபடி இறங்கத் தொடங்கும்.இது போல நான்கைந்து முறை நடைபெறும்.
இதைத்தான் நானும் சாம்சனும் "மழை வருது..மழை வருது...குடை கொண்டு வராதே" என்று பாடுவோம்.
எங்களது கோடுவேர்ட்ஸில் குடை என்றால் ஸ்டாப்லாஸ்.இது போன்ற சமயங்களில் குடையை எடுத்தால் அதாவது ஸ்டாப்லாஸ் போட்டால் கண்டிப்பாக ஸ்டாப் லாஸ் ட்ரிக்கர் ஆகத்தான் செய்யூம்.அதனால் நிச்சயமாக இன்றைக்கு மழை பெய்யூம்.அதாவது விலை ஏறும்- உடனே அது ஏறிக்கொண்டே சென்று விட்டு சிறிது இறங்கி தயங்கியதும் லாங் போ என்போம்.அல்லது விலை-இறங்கும் என்று நிச்சயமாகத் தெரிந்தால் இறங்கிக்கொண்டே செல்லும் விலை சிறிது ஏறித் தயங்கி நிற்கும் சமயத்தில் உள்ளே போய் ஷார்ட் அடி என்போம்.
எப்போதெல்லாம் குறிப்பிட்ட பங்குகளில் மழை வருகிறதோ அப்போதெல்லாம் சாம்சன் வந்து விடுவார்.நானும் அவருக்கு பங்குகளை பரிந்துரை செய்து விடுவேன்.
செமத்தியான லாபத்துடன்தான் ஒவ்வொரு முறையூம் திரும்பிச் செல்வார் அவர்.
மழை எப்போது பெய்தாலும் அதாவது விலை ஏறினாலும் இறங்கினாலும் பங்குகளை விரட்டிப் பிடிக்காமல் அவை நின்று தயங்கும்போது ஓடிப்போய் பிடிப்பதுதான் எங்களது "மழை வருது" டெக்னிக்.
செய்து பாருங்கள் மழை வருகிறபோதெல்லாம்.பழகி விட்டால் அப்புறம் மழை வரும் நேரங்களில் குடையை எடுக்க மாட்டீர்கள்.
நீங்கள் ஷேர் டிரேடிங்கில் இதுநாள் வரை நல்ல லாபம் பார்க்காமல் நஷ்டமடைந்துதான் வருகிறீர்களா?
எஃப்அன்ட்ஓ கமாடிட்டி ஃபாரெக்ஸ் என்று எதைத் தொட்டாலும் நஷ்டம்தான் வருகிறதா? உங்களது ஜாதகம்
மோசமானதாக இருந்தாலும் தசாபுத்திகள் ஒத்துழைக்காவிட்டாலும் உங்களை ஷேர் டிரேடிங்கில் சம்பாதிக்க
வைக்க முடியூம்.ஜாதகபலனுடன் பரிகாரங்களும்(செலவில்லாத எளிய சூட்சும பரிகாரங்கள்) பெற கட்டணம்
ரூ 3555ஐ பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு மின்னஞ்சலில்(படத்தில் விபரம் உள்ளது) ஸ்கேன்
செய்த ஜாதக நகலை அனுப்பி வையூங்கள்.
Our Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 3,555/-
திருமணம் / உத்யோகம் இவற்றிற்கான ஜாதகபலனும் பரிகாரங்களும்
இதை செய்ய வேண்டாமென்றுதான் இத்தனை நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன்.ஷேர் டிரேடிங்கான ஜாதகபலனும்
பரிகாரங்களும் மட்டும் செய்தால் போதுமென்று நினைத்திருந்த வேளையில் ஷேர் டிரேடிங் செய்பவர்களிடமிருந்தே
இவற்றிற்கான வேண்டுகோள்கள் வந்து குவிந்து விட்டன.அதனால் திருமணத் தடை, திருமணவாழ்வில் உள்ள பிரச்சனைகள்
மற்றும் படித்திருந்தும் வேலை கிடைப்பதில் உள்ள தடைகள் வேலை கிடைத்தபின்பும் உத்யோகத்திலுள்ள பிரச்சனைகளுக்கான
ஜாதகபலன் மற்றும் சூட்சுமப்பரிகாரங்களைப் பெற இதற்கான எளிய கட்டணமாக ரூ 5555/-ஐ பின்வரும் வங்கிக் கணக்கில்
செலுத்தி விட்டு பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் மற்றும் தற்போது வசிக்கின்ற ஊர் போன்ற விபரங்கள் அல்லது
ஸ்கேன் செய்த ஜாதக நகலுடன் மின்னஞ்சல் செய்து விட்டால் போதும்.ஜாதகபலனுடன் பரிகாரங்களை தெரிவித்து
மின்னஞ்சலில் அனுப்பி விடுகிறௌம்.
Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 5,555/-
ConversionConversion EmoticonEmoticon