"செலவெல்லாம் செலவேயில்லை..."
பொதுவாகவே நடுத்தர மக்களும் சரி மேல்தட்டு மக்களும்சரி தினசரி வரவூ செலவூ கணக்கு எழுதவே மாட்டார்கள்.பொதுவாக இந்த வரவூ செலவூ கணக்கு எழுதுவது குறித்து ஒரு 'மித்' உண்டு.
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் தினசரி செலவூகளை வரவூ செலவூ நோட்டில் குறித்து வைத்திருக்கவேண்டும் என்றும் அப்படி குறித்து வைப்பவர்கள்தான் பெரும் பணக்காரர்களாக ஆவார்கள் என்றும் மேலாண்மை நிபுணர்கள் கூட சொல்வதுண்டு.
ஆனால் இது உண்மையா என்று ஆய்வூ செய்து பார்த்தால் உண்மையில்லை என்றுதான் தெரியவருகிறது.நீங்களே கூட கவனித்துப் பாருங்கள்.உங்களது நண்பர்கள் வட்டத்தில் அல்லது உறவினர்களில் தினசரி வரவூ செலவூ கணக்குகளை(பிசினசிலோ அலுவலகத்திலோ தினசரி வரவூ செலவூ கணக்கை எழுதியேதான் ஆக வேண்டும்.அதை இங்கே கணக்கில் சேர்க்காதீர்கள்.நான் சொல்ல வருவது வீட்டில் எழுதுவது) எழுதுபவர்களை கவனித்துப் பாருங்கள்.
சிக்கனமாக இருக்கிறேன் என்று தனது தேவைகளை சுருக்கிக் கொள்பவர்கள் வாழ்க்கையில் எதையூம் எதிர்மறையாகப் பார்ப்பவர்கள் சிடுசிடுவென்றிருப்பவர்கள் சற்றே இன்ட்ரோவர்ட்டாக இருப்பவர்கள் என்று இவர்கள்தான் தினமும் ஒரு நோட்டுப்புத்தகத்தில் தினம் அன்றைய செலவூகளை கணக்கு எழுதுவார்கள்.மனைவியிடம் செலவூக்குக்கொடுத்து விட்டு சென்றிருக்கிற பணம் இருநுரறு ரூபாய் கூட இருக்காது.ஆனால் தான் என்னமோ பெரிய அட்டர்னி ஜெனரல் போல கேள்வி கேட்பார்கள்.குறுக்கு விசாரனை கூட செய்வார்கள்.
இம்மாதிரி மனிதர்கள் கடந்த ஐந்து வருடங்களில் என்ன செய்து கிழித்தார்கள் என்று பாருங்கள்.ஏதாவது ஒரு சிறிய அளவிலாவது வாழ்க்கைத் தரத்தில் இவர்கள் வளர்ந்திருக்கிறார்களா என்று பாருங்கள்.
நிச்சயம் வளர்ந்திருக்க மாட்டார்கள்.
அப்படியானால் தினசரி வரவூ செலவூ கணக்கை எழுதுவது என்பது தவறான பழக்கமா என்று கேட்டு விடாதீர்கள்.அது நல்ல பழக்கம்தான்.
என் தந்தை மிகப்பெரிய கோடீஸ்வரருக்கு மகனாகப் பிறந்தவர்.ஆனால் அவரது காலத்திலேயே அவர்களது பிசினஸ் கீழே வந்து விட்டது.என் தந்தை வீட்டில் அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை இதுதான்:"எவ்வளவூ செலவாகுதுன்னு பார்த்திட்டுதானே இருக்கே.விலைவாசியெல்லாம் எப்படி விக்குது தெரியூமா..என்ன செலவூ ஆகுது பாரு"
அவரது இந்த வார்த்தைகளை எடிட் செய்து சுருக்கினால் அவர் சொல்ல வருவது இதுதான்:
"எவ்வளவூ செலவூ ஆகுது பாரு"
இதையூம் சுருக்கினால்:
"செலவூ" என்று வரும்.
அவர் மனதில் பதிந்திருப்பதெல்லாம் செலவூ என்ற வார்த்தைதான்.இந்த செலவூ என்ற வார்த்தை அவரது மனதில் வரவூ என்ற வார்த்தையை விட அதிகமாக பதிந்து போய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.அதனால்தான் அவரால் ஒரு கோடீஸ்வர வாழ்க்கை கடைசி வரை அனுபவிக்க முடியவில்லை.
சாதாரணமாக நீங்களே கூட வீட்டில் பார்த்திருக்கலாம்.வீட்டிலுள்ள பெரியவர்கள் (மனதால் அல்ல.வயதால் மட்டுமே பெரியவர்களாக இருப்பவர்கள்) கடைக்கு போய் பை நிறைய மளிகை சாமான்களோ வேறு ஏதாவதோ வாங்கிக் கொண்டு வந்து விட்டு என்ன சொல்வார்கள்?
அஞ்சாயிரம் ரூபாய் நிமிஷத்துல போயிருச்சி.என்ன விலை விக்குது.கடங்காரன் சாமானா தர்றான்.இதுல ஆஃபர்னு ஏமாத்துவேலை.ஊர்ல ஒரு பயலும் ஒழுங்கா இல்லே.இந்த கஷ்டகாலத்துல எப்படி பொழக்கறது.ஒரு தம்பிடி தேறாது போல..
இங்கே கீவேர்ட்ஸ் என்னும் குறிச்சொற்களை கவனியூங்கள்.
கடங்காரன்.
ஏமாத்து வேலை.
ஒழுங்கா இல்லை.
கஷ்டகாலம்.
அதிக விலை.
பிழைப்பது கடினம்.
ஒரு வாக்கியத்தில் ஆறு நெகட்டிவ்வான வார்த்தைகள்.ஆனால் இவர் ஐந்தாயிரம் ரூபாய் செலவூ செய்ததையேதான் இவரது மனம் நினைத்துக் கொண்டிருக்கிறது.ஐந்தாயிரம் ரூபாய்க்கு பொருட்களை அள்ளி வந்திருக்கிறௌம் அதுவூம் ஆஃபரில் என்ற உண்மை இவரது உள் மனதில்பதியவே இல்லை.
ஐம்பது ரூபாய் கொடுத்து ஒரு கிலோ தரமான அரிசி வாங்கி வந்தால் ஐம்பது ரூபாய் செலவூ என்று சொல்கிறௌமே தவிர ஒரு கிலோ அரிச வீட்டிற்கு வந்திருக்கிறது என்று யாரும் சொல்வது கிடையாது.
ஆக செலவூ செய்யூங்கள்.அந்த செலவிற்கு சமமாக ஒரு வரவூ வந்திருக்கிறதல்லவா? அதன்மீது கவனம் ஏன் போகவில்லை என்று பாருங்கள்.
கால்பந்து விளையாட்டுக்களில் இரண்டு விதமாக விளையாடுவார்கள்.சிலர் ஜெயிப்பதற்காக விளையாடுவார்கள்.சிலர் தோற்காமல் இருக்க வேண்டுமே என்று எச்சரிக்கையாகவே ஆட்டம் முழுதும் விளையாடுவார்கள்.இரண்டாவது ரகத்தில் உள்ளவர்களுக்கு தோற்றுவிடப்போகிறௌமோ என்ற அச்ச உணர்வூ இருக்கும்.அதனால் தோற்றும் விடுவார்கள்.இங்கே செலவைப் பற்றியே நினைப்பவர்கள் எல்லாரும்இந்த இரண்டாவது ரக கால்பந்து ஆட்டக்காரர்கள் மாதிரிதான்.
எனவே எப்போது செலவூ செய்தாலும் அது செலவேயில்லை.வரவூதான் அதாவது பொருள் வரவூதான் என்பதை உணருங்கள்.
இன்றைக்கு இன்னின்ன பொருட்கள் வரவாக வீட்டிற்கு வந்துள்ளன என்று அந்த பொருட்களை அன்போடு முகமலர்ச்சியோடு வரவேற்க முயற்சி செய்து பாருங்கள்.
மனநிலை மாறி விடுவதோடு வீடும் சுபிட்சமாகி விடும்.
ConversionConversion EmoticonEmoticon