பொதுவாக பங்குச்சந்தை விடுமுறையாக இருக்கும் நாட்களில் இது போன்ற ஜோதிடம் மற்றும் வேறு சில பொதுப்பதிவூகளை நான் நமது தளத்தில் எழுதி வருவது வழக்கம்.அதனையூம் நமது வாசகர்கள் ஆர்வமாக வாசித்து வருகிறார்கள்.
இப்போது அக்னிமூலையின் முக்கியத்துவத்தையூம் அத்துடன் செவ்வாயின் தன்மையையூம் பற்றிச் சொல்கிறேன்.ஒரு வீட்டில் அக்னி மூலை என்பது மிகவூம் முக்கியமானது.வீட்டின் மற்ற பகுதிகள் எப்படி இருக்கிறதோ அதை விட அக்னி மூலை மிகவூம் முக்கியமானது.ஏன் ஒரு வீட்டில் பூஜையறை கூட இல்லாமல் இருக்கலாம்.ஆனால் அக்னிமூலையில் சரியான விதத்தில் சமையல் அறை அமைந்திருக்க வேண்டும்.இப்போதெல்லாம் ஹோட்டல்களில் இருக்கிற மாதிரி ஓப்பன் கிச்சன் வைத்து வீடு கட்டுகிறார்கள்.அதனால் என்ன பாதிப்பு வரும் என்று பிறகொரு தனிப்பதிவாக எழுதுகிறேன்.
இந்த அக்னிமூலையில் அமையூம் சமையலறை மற்றும் செவ்வாய்க்கும் அதற்கும் உள்ள தொடர்பைப் பற்றி ஒரு அனுபவத்தை சொன்னால் எளிதாக புரிந்து கொள்ள முடியூம் என்பதால் ஒரு நடந்த கதையை சொல்கிறேன்.சொந்தக்கதைதான்.ஆனால் சுயதம்பட்டமில்லை.
எனது மூதாதையர்கள் திண்டுக்கலில் மிகப்பெரிய நிறுவனங்களை நடத்தியவர்கள்.வெளிநாடுகளுக்கு சிகார் என்னும் சுருட்டை பெட்டி பெட்டியாக ஏற்றுமதி செய்தவர்கள்(சிகார் என்பதை ஆங்கிலப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.அது நெருப்புடன் தொடர்புடைய பொருள் என்பதால் அக்னி மற்றும் செவ்வாயின் தொடர்பு அதற்கு இருக்கிறது) அது மட்டுமல்லாமல் பிரிட்டிஷார் காலத்தில் சிவில் கான்ட்ராக்ட் எல்லாம் எடுத்து நடத்தியவர்கள்.ஸ்பென்சர் காம்பவூன்ட் என்ற பகுதி இன்னும் திண்டுக்கல்லில் பஸ் ஸ்டான் அருகே இருக்கிறது.ஸ்பென்சர்ஸ் என்ற சூப்பர் மார்க்கெட்டை நீங்கள் அறிந்திருக்கலாம்.இந்தியாவில் ஸ்பென்சர்ஸ் கம்பெனி முதலில் திண்டுக்கல்லில்தான் நிறுவப்பட்டது.சென்னையில் வெய்யிலின் உக்கிரம் தாங்க முடியாமல் திண்டுக்கல்லிலு;ம் கோடைக்கானலிலும் அந்த வெள்ளைக்கார ஸ்பென்சர் துரைமார்கள் இருப்பார்கள்.
எனது தந்தையின் தந்தை வெளிநாடுகளுக்கு விமானத்தில் பறந்தபடி இருப்பார்.ஆறுமாதங்களுக்கு ஒரு முறை புதுக்கார் வாங்குவார்.ஆறுமாதமே ஆன காரை பழசு என்று(கவனிக்க:காரும் செவ்வாயின் ஆதிக்கத்திற்குஉட்பட்டதுதான்) பழசு என்று விற்று விடுவார்.அவரது தந்தை அவரை விட பெரிய பிசினஸ்மேன்.திண்டுக்கல்-பழனிக்கு முதன்முதல் தார்ரோடு போட்டவர்.கோடைக்கானல் பகுதிகளில் துரைமார்களுக்கான அலுவலகங்கள் பங்களாக்களை கட்டியவர்.திண்டுக்கல்லில் முனிசிபல் சேர்மனாக இருந்தவர்.
ஆனால் அவரது வாழ்க்கை ஒருநாள்சட்டென்று தலைகீழானது.ஒரு புதிய காரை இம்போர்ட் செய்து (அப்போதெல்லாம் கார்கள் கப்பலில் வந்து இறக்குமதியாகும்) கொண்டு வந்தார்.எப்போதுமே ஸ்கோடா அல்லது செவர்லேதான் வாங்குவார்.அந்த காரை டிரையல் டிரைவ் பார்ப்பதற்காக காட்டாஸ்பத்திரி அருகே உள்ள ரவூண்டாவில் திரும்பும்போது காரிலேயே அவருக்கு பக்கவாதம் தாக்கி விட்டது.அதன்பின் சில வாரங்களிலேயே இயற்கை எய்தினார்.அவரது மைந்தனான எனது தந்தையின் தந்தை பலவித பிசினஸ்கள் செய்தாலும் அத்தனை பிசினஸ் சாம்ராஜ்ஜியமும் ஒரே நாளில் கவிழ்ந்தது.திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் வலது புறம் நீங்கள் பார்த்திருக்கலாம்.திறந்தவெளி ஜெயில் என்ற பகுதி இருக்கும்.அப்போது 1945 கால கட்டத்தில் பிரிட்டிஷ் ராணுவத்திற்கான விமான தளம் அமையவிருந்தது.அந்த கான்ட்ராக்ட்டை எடுத்த அவர் அங்கே ரன்வேயூம் கட்டிடங்களும் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே இரண்டாம் உலகப்போர் வந்து போட்ட பணத்தை பிரிட்டிஷாரிடமிருந்து திரும்ப வாங்க முடியவில்லை.அத்தனை சொத்துக்களும் போனது.
கிடுகிடுவென்று உயர்ந்த ஒரு பிசினஸ் சாம்ராஜ்ஜியம் சரசரவென சரிந்து போனதற்கு எவ்வளவோ நியாயமான காரணம் இருந்தாலும் இது ஏன் இப்படி நடந்தது.இன்றைக்கெல்லாம் அவரது சொத்துக்கள் இருந்திருந்தால் நானே ஆயிரம கோடிகளுக்கு அதிபதியாகியிருந்திருப்பேன்.
ஏன் இப்படி போனது என்ற தேடல்தான் என்னை ஜோதிடத்தின் பக்கமாகத் தள்ளியது.ஜோதிடம் முதற்கொண்டு அதர்வணம் தந்ரா என்று ஒவ்வொரு துறையாக நான் கற்று தேர்ந்து கொண்டு வந்தேன்.தஞ்சாவூரில் ஆரம்பித்த இந்த ஜோதிடம் பரிகாரம் தொடர்பான தேடுதல் கேரளா வரை கொண்டு போய் விட்டது.ஏராளமான இடங்கள்.ஏராளமான அனுபவங்கள்.ஒரு நாவல் போல எழுத அத்தனை நிகழ்வூகள் இருக்கின்றன.அவை இப்போது வேண்டாம்.இடையில் பலவருடங்களாக அந்த ஊருக்கு செல்லவேயில்லை.
ஒரு நாள் திண்டுக்கல்லில் அங்குவிலாஸின் அங்குநகரம் என்ற பகுதியில் எனது காரை நிறுத்தி விட்டு அமைதியாக அமர்ந்து ஏன் இப்படி ஆகிற்று என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான் அந்த அங்குவிலாஸ் (அது அப்போது எனது தாத்தாவின் சொத்தாக இருந்து அவர்களுக்கு கைமாறிப்போனது.அங்கே எங்களது குடும்பத்து மூதாதையரில் ஒரு பெண்மணி சிறுவயதிலேயே இறந்து போனார்.அவரது சமாதியூம் அங்கே இருக்கிறது) பகுதிக்கு எங்களது தாத்தா காலத்தில் சபாபதி சாமியார் என்ற ஒரு சித்தபுருஷர் வந்து தங்கியிருந்தார்.
அவர் அடிக்கடி சொல்வாராம்.
அடுத்தவங்களுக்கு சோறுபோடு.அது கடைசி வரைக்கும் உனக்கு சோறு கிடைக்கச் செய்யூம்.ஆனா சோறாக்கற சமையலறையை சூதானமாக வைத்துக் கொள்- என்று.
இந்த வாசகம் அன்று நாள் யோசித்துக் கொண்டிருந்தபோது பொறி தட்டின மாதிரி தோன்றியது.
இதனால்தான் அவர்களது பிசினஸ் சாம்ராஜ்ஜியம் விழுந்து சரிந்தது என்று சட்டென்று புரிந்தது.
காரணம் இதுதான்.
அவர்கள் ஓஹோ என்று இருந்த காலத்தில் அவர்களது பெரிய வீட்டில்(இன்றும் அந்த வீடு கம்பீரமாக இருக்கிறது) சமையலறையைப் பயன்படுத்த மாட்டார்கள்.அந்த சமையலறை சும்மா வெற்றாக காலியாகத்தான் இருக்குமாம்.ஆனால் அந்த பெரிய வீட்டிற்கு எதிரே (அங்கேதான் என் தாத்தா தனது காரை நிறுத்தி வைப்பார்) ஒரு வீடு இருக்கும்.அந்த முழு வீட்டையூமே சமையல் செய்வதற்கு பயன்படுத்துவார்களாம்.அந்த வீட்டின் பெயரே 'சோறாக்குற வீடு" என்று மாறி விட்டது.
கவனித்துப் பாருங்கள்.
அவர்கள் வசிக்கும் வீட்டில் சமையலறையைப் பயன்படுத்தாமல் அதாவது அக்னிமூலையை அலட்சியப்படுத்தி அக்னியையூம் அது தொடர்பான செவ்வாயையூம் வெளியே அனுப்பி விட்டார்கள்.அந்த வீட்டின் எதிரே ஒரு முழுவீட்டையூமே அக்னியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.அந்த வீட்டில் செவ்வாய் தொடர்பான கார்கள் வரிசையாக நின்றுகொண்டிருக்கும்.
ஏன் இது போல ஒரு வீட்டையே சமையலறையாக்கினார்கள் என்றால் அவர்களது சிவில் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் பணியாற்றும் தொழிலாளர்கள் பணியாளர்கள் அத்தனை பேருக்கும் அங்கேதான் சமையல் நடக்கும்.சமையல் என்றால் சாதாரண சமையல் கிடையது.ஆடுகளை அறுத்து அறுத்து மட்டன் சமையல்.மீண்டும் கவனியூங்கள்.ஆடு என்பது செவ்வாயின் (மேஷ ராசியின் சின்னம் ஆடுதான்)சின்னம் இங்கேயூம் செவ்வாயை பாதிப்படைய வைத்திருக்கிறார்கள்.
வீட்டிலிருந்த அக்னியை அக்னி மூலையிலிருந்து வெளியே விரட்டி விட்டார்கள்.அவர்கள் செய்யூம் தொழில் செவ்வாய் சம்பந்தப்பட்டது(ரியல்எஸ்டேன் கன்ஸ்ட்ரக்ஷன் என்பது செவ்வாய் தொடர்புடையது) கார்களையூம்மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.பழுது ஏற்படாத காரை வேண்டுமென்றே விற்பதும் செவ்வாயை அலட்சியப்படுத்துவது மாதிரிதான்.ஒரு வீட்டையே அக்னிமூலையாகப் பயன்படுத்தியதில் அந்த உக்கிரமான அக்னியின் பார்வை அவர்கள் குடியிருந்த வீட்டின் மீது பட அத்தனை பிசினஸூம் சரிந்து விட்டது.
எனவே உங்களது வீட்டில் எந்த பகுதி எப்படி இருந்தாலும் அக்னிமூலையில் அமைந்துள்ள சமையலறையை சுத்தமாக வைத்திருங்கள்.குப்பை தேங்க விடாதீர்கள்.சிலர் தரையை பெருக்கிக் கொண்டே வந்து சமையலறைக் கதவின் கீழே சேர்த்திருப்பார்கள்.அதுவூம் தவறு. இரவூ நேரங்களில் வீட்டில் சமைக்காமல் ஹோட்டலில் பார்சல் வாங்கி வந்து சாப்பிடுவது இப்போதெல்லாம் பாஷனாகி விட்டாலும் அந்த பார்சலை சிறிது நேரம் சமையலறையில் வைத்திருந்து சமையலறையில் உள்ள தட்டுகளைப் பயன்படுத்தி அட்லீஸ்ட் அதில் வைத்து சாப்பிடுங்கள்.
செவ்வாய் பற்றி இன்னும் எழுதவேண்டும்.இப்போதே இந்த பதிவூ பெரிதாகி விட்டது.இன்னொரு பதிவில் செவ்வாய் பற்றி முழுமையாக எழுதுகிறேன்.
ConversionConversion EmoticonEmoticon