"வாய்ப்புகள் வந்தே தீரும்..."
எந்த வாய்ப்புமே இல்லை.எந்த முன்னேற்றமுமே இல்லை.சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.அதிர்ஷ்டத்திற்கு என் வீட்டு புதிய எண் தெரியவில்லையோ என்னவோ அது இன்னமும் வந்து கதவைத் தட்டவே இல்லை.என்னுடன் பள்ளியில் படித்த சுமார் மார்க் பசங்க எல்லாம் ஹோண்டா சிட்டி காரில் பறக்கிறார்கள்.
இப்படி அங்கலாய்ப்பவர்கள் அத்தனை பேருக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.
வாய்ப்புகள் என்பதை வருவதற்காகவே உருவாக்கப்பட்டவை என்பதால் அவை வந்தே தீரும்.இந்த சொற்றொடரில் கூட நெகட்டிவ்வாக நாம் சிலவற்றைப் பார்க்கலாம்.வாய்ப்புகள் வந்தே "தீரும்" என்றால் வந்தவூடன் அந்த வாய்ப்புகள் தீர்ந்து விடும்.அதன்பிறகு புது வாய்ப்புகள் வராதோ என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம்.
அலைகள் ஓய்வதில்லை படம் 1980ல் வெளி வந்தது.மிகவூம் பிரபலமான "புத்தம் புது காலை" பாடல் அந்த படத்தில் இடம் பெறவே இல்லை.அப்போதைய விவித்பாரதிகளையூம் ரேடியோ சிலோனையூம் கட்டிப்போட்டிருந்த அந்த பாடல் இப்போது 2014ல் மேகா திரைப்படத்தில்தான் இடம் பெற்றது.
இது போல வாய்ப்புகள் உங்களுக்கும் கிடைக்கும் என்று சொன்னால் உடனே அடுத்த கேள்வி -.உடனே வாய்ப்பு கிடைக்காதா என்று.
உடனே செய்யக்கூடிய சமையல் நுரடுல்ஸை அடுத்து உப்புமாதான்.உடனே கிடைக்கிற வாய்ப்பும் உப்புமாவாகத்தான் இருக்கும்.சற்று பொறுத்திருந்தாலும் அப்புறம் கிடைக்கிற வாய்ப்புகள் உங்களை படிக்கட்டில் ஏற்றிச் செல்லாமல் எஸ்கலேட்டரில் வைத்து மேலே கொண்டு போய் விடும் வாய்ப்புகளாகவே அமைந்து விடும்.
அதனால் காத்திருக்கலாம்.
சரி எப்படி காத்திருப்பது?
சும்மா கையைக் கட்டிக்கொண்டு காத்திருப்பதெல்லாம் வேலைக்கு ஆகாது.தொடர்ந்து முட்டி மோதிக்கொண்டிருக்க வேண்டும்.ஏதாவது செய்து கொண்டே இருக்கவேண்டும்.செய்திகளில் நீங்கள் இடம் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.செய்திகளில் என்றால் செய்தித்தாள்களில் அல்ல.நம்மைச்சுற்றியூள்ள இடங்களில் வீட்டைச்சுற்றி அக்கம்பக்கத்தில் அப்புறம் அலுவலகங்களில் உங்களைப் பற்றி மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.நீங்கள் எத்தனை திறமையானவராக இருக்கிறீர்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளும்படி அறிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.ஆனால் எதற்கும் சம்பந்தமில்லாமல் படபடப்பில்லாமல் அமைதியாக அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டே உங்களை அடுத்தடுத்த லெவலுக்கு அப்டேட் செய்து கொண்டே இருப்பதோடு நீங்கள் அப்டேட் ஆகிவிட்டீர்கள் என்பதையூம் அவர்கள் அறியச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
இதைத்தான் எஃப்எம்சிஜி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை "இன்னும் புதிய பேக்கிங்கில்" "இன்னும் கூடுதல் சுவையூடன்" "இன்னும் மேம்பட்ட சுவையூடன்" என்று விளம்பரங்கள் வாயிலாக அறிவித்துக் கொண்டே இருக்கின்றன.
சூர்யாவோ இல்லை அவர் தம்பியோ தினம் தினம் வந்து காபி குடிப்பது பற்றி டமுக்கடித்துக் கொண்டிருக்கிறார்களே எத்தனை பேர் உடனே அந்த விளம்பரங்களைப் பார்த்து சட்டையை மாற்றிக்கொண்டு தெருமுனை முக்குக்கடையில் போய் அந்த காபி பவூடரை வாங்கிக் கொண்டு வந்து காபி போட்டுக் குடிக்கப் போகிறார்கள்.ஒருவரும் அது போல உடனே அந்த காபி பவூடரை வாங்க மாட்டார்கள் என்று அந்த நிறுவனத்திற்கு நன்றாகவே தெரியூம்.பின்எதற்கு சூர்யாவூம் கார்த்தியூம்?
அவர்கள் உங்களை மனதளவில் தயார் செய்கிறார்கள்.தொடர்ந்து மெஸ்மரிசம் செய்வது போல உங்களது மனதை அவர்கள் பக்கம் சாய்ப்பதற்கு தயார் செய்கிறார்கள்.என்றௌ ஒரு நாள் மளிகை சாமான் லிஸ்ட் போடும்போதோ சூப்பர் மார்க்கெட்டில் அடுத்த வரிசை ரேக்கில் ஒரு அழகானப் பெண்ணைப் பார்த்து ஸ்தம்பித்துப்போய் நீங்கள் நிற்கும்போதோ உங்களது மனம் தானாக அந்த காபி பிரான்ட்டை வாங்கும்படி சொல்லும் என்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள் விளம்பரங்களில்.அது போல நீங்களும் உங்களைப் பற்றி மற்றவர்களுக்கும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் குறிப்பாக உங்களைப் பிடிக்கவே பிடிக்காதவர்களுக்கும் தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
எதற்காக உங்களப் பிடிக்காதவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அவர்கள்தான் உங்கள் மீது காட்டமாக இருப்பார்கள்.அந்த வெறுப்பில் அவர்களே அவர்களையூம் அறியாமல் உங்களது பிரான்ட் அம்பாசிடர் மாதிரி உங்களைப் பற்றிய "பரப்புரை"யை ஆரம்பித்து விடுவார்கள்.
அப்புறமென்ன.
காத்திருங்கள்.வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும்.காசுடன்!
ConversionConversion EmoticonEmoticon