"உத்தரவின்றி வெளியே வா..."
சரித்திரத்தில் படித்திருப்போம்.அலக்ஸான்டர் பற்றி.கரிகாற்சோழன் பற்றி.இன்னும் சில மன்னர்களைப் பற்றி.ஏன் மற்ற மன்னர்களைப் பற்றியெல்லாம் அவ்வளவூ விரிவாகப் படிக்கவில்லை என்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கிறதா?இதற்கான விடையை நீங்களே கடைசியில் சொல்லப்போகிறீர்கள்.
இப்பொது உங்களது விஷயத்திற்கு வருவோம்.ஒரு பத்திரமான 9 டு 5 வேலை கையில் இருக்கிறது.மாதமானால் சம்பளத்தை ஏடிஎம்மில் எடுத்துக் கொள்ளலாம்.வீடு மனைவி குழந்தைகள் எல்லாம் இருக்கிறது.கொஞ்சம் நிம்மதியாகக் கூட இருக்கிறது.இப்படியே வாழ்க்கையை ஓட்டி விடலாம்போல என்று கூட தோன்றுகிறது.
ஆனால் இது போதுமா?
போதும் என்ற மனமே பொன்செய்யூம் மருந்து என்றெல்லாம் உங்களை ஸ்கூல் படிக்கிற வயசிலேயே மெஸ்மரிசம் பண்ணி வைத்திருக்கிறது இந்த சமூகம்.
வளர்ச்சி என்பது சீராகவூம் வேகமாகவூம் இருக்க வேண்டுமென்றால் இந்த 'போதுமென்ற மனம்' போன்ற டெம்ப்ளேட் தத்துவங்கள் உதவாது.
போதாது என்றுதான் நினைக்க வேண்டும்.அப்போதுதான் இன்னும் மேலே வர முடியூம்.
அதற்காகத்தான் 'வெளியே வாருங்கள்' என்கிறேன்.
எச்ஆர் உலகில் ஒரு வார்த்தை மிகவூம் பிரபலமாக இருக்கும்.
'திங்க் அவூட் ஆஃப் தி பாக்ஸ்"
இதை அப்படியே தமிழ்ப்"படுத்தினால்" பெட்டியை விட்டு வெளியே வாருங்கள் என்ற அர்த்தத்தில் வரும்.
எல்லாரும் பெட்டிக்குள்தான் இருக்கிறௌமோ?
ஆமாம்.பெட்டிக்குள்தான் இருக்கிறௌம்.இதைத்தான் அந்த காலத்தில் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது என்பார்கள்.இதற்கு வேறொரு நேரான அர்த்தமும் உண்டு.
புதுமையாக சிந்திப்பது.தனது எல்லையைத் தாண்டி சிந்திப்பது இதைத்தான் பெட்டியை விட்டு வெளியே வருவது என்கிறார்கள்.
ஒரு உதாரணமாக சொன்னால் தெரியூம்.
அறை எண் 305ல் கடவூள் படத்தில் வரும் ஜாவா சுந்தரேசன் வெறும் ஜாவா படித்திருப்பதினாலேயே மேலே மேலே சம்பளத்திலும் வேலையிலும் உயர்ந்திருக்க மாட்டார்.அவர் ஜாவாவில் ஆப்லட்டில் இருந்தாரா செர்வலட்டில் இருந்தாரா? கூடவே மொபைல் அப்ளிகேஷனும் கற்றிருந்தாரா?ஜாவாவூக்கும் ஆன்டிராய்டுக்கும் பாலமாக ஏதாவது இருந்தால் அதையெல்லாம் கற்றிருந்தாரா என்ற விபரங்களை அந்த படத்தில் சிம்புதேவன் காண்பிக்கவில்லை.ஒரே டொமைனில் ஒரே வேலையை தட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு ஐடியில் பிங்க் ஸ்லிப்தான் கொடுத்து அனுப்புவார்கள்.தனது வேலை என்ன என்பதையூம் தாண்டி எதையாவது புதிதாக கற்றுக் கொண்டே இருந்தால்தான் வேலையில் உயர முடியூம்.இது ஐடியில் மட்டுமல்ல.மற்ற வேலைகளுக்கும் பொருந்தும்.
கரிகால்சோழன் என்றொரு மன்னன் இருந்தான்.ரொம்ப அமைதியானவன்.சாதுவானவன்.அவன்பாட்டுக்கு தேமே என்று ஆட்சி செய்து கொண்டிருந்தான் என்றால் சரித்திரத்தில் இடம் பிடிக்க முடியூமா?
ஆட்சிக்கும்அப்பாற்பட்டு கல்லணை கட்டியிருக்கிறான்.பல நாடுகளை வென்றிருக்கிறான்.சுருக்கமாகச் சொன்னால் தனது எல்லையை 'விரிவூபடுத்திக்கொண்டே" இருந்திருக்கிறான்.அதனால்தான் சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறான்.
சிலபேர் இருக்கிறார்கள்.இருக்கிற இடமே தெரியாது என்பார்கள்.இருக்கிற இடமே தெரியாது என்றால் ஜடம் என்றுதானே அர்த்தம்.அப்படிப்பட்ட ஆட்களால் மற்றவர்களுக்குத்தான் என்ன பிரயோஜனம்.இன்னும் சிலபேர் இருக்கிறார்கள்.ரொம்ப அமைதியானவர்களாம்.வர்றதும் தெரியாது.போறதும் தெரியாது என்பார்கள்.வர்றதும் தெரியாது.போறதும் தெரியாது என்றால் அது செத்துப் போய் அலையூம் ஆவியாகத்தானே இருக்கும்.இன்னும் சிலபேர் இருக்கிறார்கள்.யப்பா.பேய் செத்துப்போய் மனுஷனா அலையறாப்ல அலையறான்.இதைப் பண்றான்.அதைப் பண்றான்.மனுஷனா அவன் என்பார்கள்.கிட்டத்தட்ட தங்கச்சிகாக படாதபாடு படும் சின்னவயசு டி.ராஜேந்தர் போன்ற ஆட்கள் அவர்கள்.அவர்களால்தான் தங்களது எல்லைகளை விரிவூபடுத்திக் கொண்டே போக முடியூம்.
இந்த வருடம் என்ன சம்பாதிக்கிறீர்களோ அதை விட அதிகமாக நீங்கள் சம்பாதித்தே ஆக வேண்டும்.இந்த வருடம் என்ன கார் வைத்திருக்கிறீர்களோ அடுத்த வருடம் அதை விட உயர்ந்த காரை வைத்து பராமரிக்கக் கூடிய தகுதியூம் வசதியூம் இருந்தே ஆக வேண்டும்.
அதனால்தான் பெட்டிக்குள்ளிருந்து வெளியே வாருங்கள் என்கிறேன்.
இப்போது சொல்லுங்கள்.அலக்ஸான்டர் கரிகாற்சோழன் போன்ற மன்னர்கள் எல்லாம் 'திங்க் அவூட் ஆஃப் தி பாக்ஸ்" ஆக இருந்ததால்தானே சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
நாளை நீங்களும் இடம் பிடிக்கலாம்.
முடியூம்.எழுந்திருங்கள்.
ConversionConversion EmoticonEmoticon