'ஃபைவ் ஸ்டார் பசங்க..."
யூசுப் பாய் கடைக்குள் நுழையூம் ரமேஷ் மற்றும் சுரேஷ் அப்பாவின் பேன்ட்டை பாதிப் பாதியாக வெட்டச் சொல்லும் விளம்பரத்தை பார்த்திருப்பீர்கள்தானே அதேபோலவே என்னிடம் ஒரு ஃபைவ் ஸ்டார் பசங்க டிரேடிங்செய்ய வந்தை கதையை இப்போது சொல்ல வேண்டுமென்று தோன்றியதற்கு காரணம் யூஎஸ்ஸிலிருந்து இன்றைக்கு கைலாஷ் அழைத்திருந்தான்.கைலாஷ் எனது பழைய வாடிக்கையாளர்.'ன்' என்று அழைப்பதற்கு காரணம் அப்போது கைலாஷ் சின்னப் பையன்.டிரேடிங் ஹாலுக்குள் வந்து மற்றவர்கள் டிரேடிங் செய்வதை என்னமோ கிரிக்கெட் மாட்ச் பார்ப்பது போல வேடிக்கைப் பார்ப்பான்.அப்படியே சிஎன்பிசியில் தெரியூம் மிதாலி முகர்ஜீயையூம்!
அப்போது ப்ளஸ்டு படித்துக் கொண்டிருந்த கைலாஷ் அப்புறம் தன் நண்பன் என்று யூனுஸையூம் அழைத்துக் கொண்டு வருவான்.இரண்டு பேருக்கும் அப்போதே ஷேர் டிரேடிங் செய்ய ஆசை.ஸ்டடி ஹாலிடேசில் வெளியே உட்கார்ந்து ப்ளஸ்டு பரிட்சைக்கு படிக்க உட்காருவார்கள்.அவ்வப்போது எட்டி எட்டிப் பார்ப்பார்கள்.அப்புறம் கல்லுரியில் சேர்ந்த போது யூனுஸூடன் வந்து நின்ற கைலாஷ் டிமேட் கணக்கு ஆரம்பிக்க வேண்டுமென்றான்.
அவர்களை உள்ளே இழுத்து விட வேண்டுமென்று நானும் ஆர்வமாகத்தான் இருந்தேன்.காரணம் நானும் எனது ப்ளஸ்டு படிக்கும் தருணத்தில்தான் ஷேர் டிரேடிங்கில் நுழைந்தேன்.அது வேறு கதை.அப்புறம் சொல்கிறேன்.
யூனுஸ் கைலாஷ் இரண்டு பேருக்கும் எளிதாக அக்கவூன்ட் துவங்கியாயிற்று.ஏதாவது ஈசியான மெத்தடா செஞ்சு பார்க்கனும் என்று கைலாஷ் அடிக்கடி சொல்வான்.அப்புறம் அவர்களே தங்களுக்குள் கூடிப்பேசிக்கொண்டு ஒரு நாள் வந்தார்கள்.
"என்னாங்கடா.அந்த காலத்து இளமைஊஞ்சலாடுகிறது கமலஹாசன் ரஜனிகாந்த் (அப்போது ர'ஜ'னிகாந்த்தான்.அப்புறம்தான் ரஜினிகாந்த் ஆனார் அவர்) மாதிரி விறைப்பா வர்றிங்க.ரெண்டு பேரும் ஒரே பொண்ணை டாவடிக்கறிங்களா"
"அதில்லை விஜய் சார்.நான் எடுப்பேன்.இவன் அடிப்பான்"என்றான் யூனுஸ்.
"அப்படின்னா"
"ஒரே பங்கு.ரிலையன்ஸூன்னு வைச்சிக்கங்க.ஒரே நேரத்துல என் அக்கவூன்ட்ல நான் வாங்குவேன்.அதாவது வாங்கிட்டு அப்புறம் அரை மணிநேரத்துல வித்துருவேன்.ஆனால இவன் அதே நேரத்துல வித்துருவான்.அப்புறம் அரை மணி நேரத்துல வித்ததை இவன் வாங்கிருவான்.இதான் சார் திட்டம்"
"என்னங்கடா.இது சட்டப்படி தப்பு தெரியூமா.ஒன் அக்கவூன்ட்ல லாங்.அவன் அக்கவூன்ட்ல ஷார்ட் செல்லிங்கா.."
அப்போது சங்கர்ஷர்மா பற்றிய கேஸ் எல்லாம் வந்திருக்கவில்லை.கைலாஷ் மற்றும் யூனுஸ் இரண்டு பேரும் ஒரே பங்கை ஒரே நேரத்தில் ஒரு அக்கவூன்ட்டில் லாங் இன்னொரு அக்கவூன்ட்டில் ஷார்ட் அடிப்பது என்று முனைந்தால் ஏதாவது ஒரு அக்கவூன்ட்டில் நஷ்டமும் இன்னொன்றில் லாபமும் வரும்.அதாவது இரண்டையூம் அண்ணாமலை ராதாரவியாகப் பார்த்தால் (கூட்டிக்கழித்து) நஷ்டம் அடிபட்டுப் போய் பாதி லாபம் நிச்சயமாகக் கிடைத்து விடும்.
ஸோ அதன்பின் அவர்களை அவர்கள் போக்கில் விட்டு விடுவேன்.எப்போதாவது வருவார்கள்.ஒருவன் லாங் ஒருவன் ஷார்ட் என்று கூட்டு வைத்துக் கொண்டு விளையாடுவார்கள்.அப்புறம் தொடர்பு விட்டுப் போனது.
நேற்று கைலாஷ் அழைத்ததும்தான் எந்த கைலாஷ் என்று யோசித்தபோதுதான் சொன்னான்.
"ஃபைவ் ஸ்டார் பசங்கன்னு ஒரு தரம் ஏர்போர்ட்ல பார்த்தபோது அழைச்சிங்களே சார் அதே கைலாஷ்தான்"
"அட என்னப்பா பண்றே.பார்த்து ரொம்ப வருஷம் இருக்குமே.உன் ஃப்ரன்ட் என்ன பண்றான்"
"நான் யூஎஸ் போயிட்டேன் சார்.இன்ஸ்ட்டுமென்டேஷன் இன்ஜினியரா இருக்கேன்.அவன் ஆஸ்திரேலியா.ஒரு விஷயம் தெரியூமா.."
"சொல்லு"
"கல்யாணமாகி குழந்தையெல்லாம் பிறந்திருச்சி சார்.நாங்க இப்பவூம் அதே ஃபைவ் ஸ்டார் யூசுப்பாய் கடை டெக்னிக்கை ஃபாலோ பண்றௌம்"
"அதெப்படிப்பா.நீ யூஎஸ்ல.அவன் ஆஸ்திரேலியாவில.ஆனா தப்பாச்சே"
"ச்சே.இல்லை விஜய் சார்.இங்க நானும் என் மனைவியூம் நான் லாங்.அவ ஷார்ட்.இல்லைன்னா அவ லாங்.நான் ஷார்ட்.அதே போல அவன் அங்க தன் வொய்ஃப்போட.இப்பதான் ஆன்லைன் இருக்கே.மொபைல்லயே ஆர்டர் போட்ருவம்.யூசுப்பாய் அப்பா பேட்டை இன்னும் கொஞ்சம்.."
என்று சிரித்தான்.சிரித்தோம்.
பொதுவாக இது எல்லாரும் செய்து பார்க்கும்டெக்னிக்தான்.ஆனால் அவ்வளவூ சீக்கிரம் பெரிய லாபம் வராமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்.இந்த டெக்னிக்கை செய்வதற்கென்று சில தந்திரங்கள் இருக்கின்றன.அதை புரிந்து கொண்டால் யூசுப்பாய் போல வெட்டிக் கொண்டே இருக்கலாம்.இன்னொரு பக்கம் தைத்துக் கொண்டேயூம் இருக்கலாம்.
ஆனால் பாதி லாபம் நிச்சய கேரன்டி.
செய்து பாருங்கள் என்று சொல்ல மாட்டேன்.ஏனென்றால் இது சட்டப்படி தப்பு!
ConversionConversion EmoticonEmoticon