இதையே வேறு மாதிரி யோசித்துப் பார்க்கலாம்.
இரண்டாம் இடம் என்பதை ஒரு வீட்டின் வாசல் கதவூ வராந்தா மற்றும் வரவேற்பரை மற்றும் வீட்டின் முன்பகுதி என்றும் பனிரெண்டாம்இடம் என்பதை பின்வாசல் மற்றும் வீட்டின் பின்பகுதி என்றும் நமது வசதிக்கேற்றபடி உருவகப்படுத்திக்கொள்ளலாம்.
இப்போது சிலருக்கு ஏன் பணவரவூ சரியாக இல்லாமல் இருக்கிறது.சிலருக்கு பணமே வந்தாலும் வரும் பணமெல்லாம் செலவாளிக்கொண்டே இருக்கிறது.சிலருக்கு வரும் பணம் எல்லாம் வட்டி கட்டுவதற்கே சரியாகப்போய்விடுகிறது.சிலருக்கு நன்றாகத்தான் பணம் வருகிறது.ஆனால் எக்குத்தப்பாக செலவூகள் எகிறிக்கொண்டே போய் விடுகிறது.
பழைய சினிமா பாடலொன்றில் சொல்வதைப் போல கையில வாங்கினேன்.பையில போட்டேன்.போன இடம்தெரியலை என்பது போலத்தான் இன்றைக்கு வாழ்க்கை பெரும்பாலோருக்கு இருக்கிறது.பங்குச்ச்சந்தையைப் பொறுத்தவரை ஒரு டிரேடிங்கில் சரியான லாபம் வந்தால் அடுத்தடுத்த டிரேடிங்கில் நஷ்டம் ஏற்பட்டு சம்பாதித்த பணம் அடித்துக் கொண்டு போய் விடுகிறது.
இது ஏன் எப்படி தனிப்பட்ட ஒருவரின் ஜாதகத்தைத்தான் பார்க்க வேண்டும்.ஆனால் பொதுவாக ஒரு சுவாரஸ்யத் தகவலாக பின்வருபவற்றைப் பாருங்கள்.
இரண்டாம் இடம் அடைபட்டிருந்தால் பனிரெண்டாம் இடம் திறந்து கிடந்தால்?
வீட்டின் முன்வாசல் அடைபட்டுக் கிடந்தால்? பின்வாசல் திறந்து கிடந்தால்..
முதலில் பணவரவூ இருக்கவே இருக்காது.அத்துடன் வீட்டில் உள்ள பணமும் பின்வாசல் வழியாகச் சென்று விடும்.
முன்வாசலும் திறந்து கிடந்து பின்வாசலும் திறந்து கிடந்தால் வந்த பணம் பின்வாசல் வழியாகச் சென்று கொண்டே இருக்கும்.வீட்டில் காசு தங்காது.
இன்னும் யோசித்துப் பார்த்தால் முன்வாசலிலும் வராந்தாவிலும்அடைசலாக கிடந்தால்?பின்வாசலில் கழிவூ நீரும் வேண்டா சாமான்களுமாகக் கிடந்தால்?
அப்போதும் பணம் தங்காமல்தான் போகும்.
அதனால் இதை ஜாதகத்தை வைத்துப் பார்ப்பதை விட ஒரு ஜாதகரின் வீட்டை சரிபடுத்துவதிலிருந்தே செய்து விடலாம்.
வீட்டை இரண்டு பகுதிகளாக முன்பகுதி பின்பகுதி என்று பிரித்துக் கொள்ளுங்கள்.
முன்பகுதியில் வராந்தா உட்பட(முக்கியமாக செருப்புகளை கண்டபடி அங்கும்இங்குமாக போடாதீர்கள்) ஹாலின் முதல்பாதி வரை உள்ள இடத்தை மிகவூம் சுத்தமாக வைத்திருங்கள்.இந்த இடங்களில் அடைசலாக எந்த சாமான்களையூம் பழைய செய்தித்தாள்கள் சாக்ஸ் ஷூக்கள் உடைந்த பொம்மைகள் ஹேர்ஆயில் பாட்டில் சீப்பு உதிர்ந்த முடிகள் என்று போட்டு வைக்காதீர்கள்.சுத்தமாக இருப்பதோடு இந்த இடங்களில் கற்பூவாசனை எப்போதும் இருக்கட்டும்.தசாங்கமோ கம்ப்யூட்டர் சாம்பிராணியோ போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
இனி பின்பகுதிக்கு வருவோம்.அங்கேயூம் தட்டுமுட்டு சாமான்களைப் போட்டு வைக்க வேண்டாம்.பின்பகுதியில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம்.அது பாட்டுக்கு அப்படியே இருக்கட்டும்.
இன்னொரு முறையையூம் பின்வருமாறு செய்வோம்.
இரண்டாம் இடம் வரவிற்கான இடம்.
அதனால் வரவேற்பறையில் சில சில்லறைக்காசுகளை ஒரு பிள்ளையாரின் கீழே (பிள்ளையார் பொம்மை என்று சொல்லக்கூடாதென்றாலும் பரவாயில்லை.ஒரு பிள்ளையார் பொம்மையின் அடிப்பாகத்தில் ஃபெவிக்க்விக் அல்லது அரால்டய்ட் கொண்டு காசுகளை ஒட்டி விடுங்கள்) இரும்புக் காசுகள் வேண்டாம்.தற்போது புதிதாக வந்திருக்கிற பத்து ரூபாய் காசுகள் ஐந்தை மட்டும் ஒட்டினால் போதும்.அதனை சும்மா ஒரு வாஸ்து பொம்மை போல வரவேற்பறையில் எங்காவது வைத்து விடுங்கள் போதும்.அதற்கு கற்பூர ஆரத்தி எல்லாம்; காட்டிக் கொண்டிருக்க வேண்டாம்.அதுவே வரவை உள்ளே இழுத்துக் கொண்டு வந்து விடும்.
பனிரெண்டாம் இடம் என்பதை ஜோதிட சாஸ்திரத்தின்படி சயனஸ்தானம் என்றும் சொல்வோம்.அதனால் படுக்கையறையை கவனியூங்கள்.அங்கே படுக்கை விரிப்புகள் மிகவூம் சுத்தமாக இருக்கட்டும்.தலையணை உறையை குறிப்பிட்ட கால இடைவெளியில் துவைத்துப் பயன்படுத்துங்கள்.மிக முக்கியமாக அழுக்குத் துணிகளையூம் உள்ளாடைகளையூம் அங்கே கழட்டிப்போட்டு வைக்காதீர்கள்.பெண்களுக்கு ஒரு வார்த்தை.கண்ட இடங்களில் ஸ்டிக்கர் பொட்டுக்களை ஒட்டி வைக்காதீர்கள்.ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையின் வசதிகள் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் ஒரு சுத்தமாக ஆரோக்கியமான சூழல் அங்கே இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள்.இயன்றால் ஒரு ரூம் ஃப்ரஷ்னர் அடித்து வைக்கலாம்.
இரண்டாம் இடம் மற்றும் பனிரென்டாம் இடம்(அதாவது படுக்கையறை) ஆகிய இரண்டையூம் சுத்தமாகவூம் சுகாதாரமாகவூம் வீட்டில் வைத்துக் கொண்டாலே வரும் காசு கையை விட்டுப் போகாது.
வீட்டில் காசு தங்கினாலே போதுமே விரையச் செலவூகள் குறைந்து கொண்டு வருகிறது என்று அர்த்தம்.
இவை மூடநம்பிக்கை போல தோன்றினாலும் ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை தருகிறது என்பதால் செய்து பாருங்கள்.நன்றாக வந்தால் மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon