ஒவ்வொரு மற்றுமொரு நாளே என்கிற தினுசில்தான் இப்போது எல்லோரது வாழ்க்கையூம் போய்க்கொண்டிருக்கிறது.உங்களது ஒவ்வொரு நாளையூம் அந்த நாள் எப்படி இருக்க வேண்டுமென்று தீர்மாணிப்பது யாராக இருக்குமென்று நினைக்கிறீர்கள்.Click here to get market updates & stock tips
நிச்சயமாக நீங்களாக இருக்க முடியாது.
ஏனெனில் இன்றைய வாழ்க்கைச் சூழல் அப்படி.
அலுவலகத்தில் உங்களது மேலதிகாரியூம் வீட்டில் உங்களது மனைவியோ மற்றவரோதான் உங்களது பெரும்பாலான நாட்களை தீர்மாணிக்கிறார்கள்.
நீங்கள் நினைத்த அந்த 'கனவூ வாழ்க்கை'யை என்றைக்காவது ஒரு நாளாவது நீங்கள் வாழ்ந்து பார்த்ததுண்டா? அட அட்லீஸ்ட் கனவிலாவது அந்த 'கனவூ வாழ்க்கை'யை வாழ்ந்து பார்த்ததுண்டா?
நிச்சயம் இருந்திருக்க முடியாது.Click here to get intraday updates & trading guidance
இன்னொரு விஷயமும் நம் வாழ்வில் குறுக்கிட்டுக் கொண்டே இருக்கிறது.அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதுதான் அது.இதெல்லாம் எதிர்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான் என்றே பாதி நாட்களை அடுத்தவர்களுக்காக ஓட்டி விடுகிறௌம்.அப்புறம் ஒரு நாள் என்றைக்காவது அபூர்வமாக நேரம் கிடைத்து நம் வாழ்வை ரீவைண்ட் செய்து பார்த்தால் இதை செய்திருந்திருக்கலாமே.அதை செய்திருந்திருக்கலாமே.நம்முடன் இருந்தவன் எல்லாம் விமானத்தில் நாட்டிற்கு நாடு பறந்து கொண்டிருக்கிறான்.நாம் மட்டும் ஏன் இப்படி? எங்கே எது தவறாகிப்போனது என்று தவித்துக் கொண்டிருப்பீர்கள்.
தவறாகப் போனது எது?
உங்களது வாழ்க்கையா அல்லது நீங்களா?
இரண்டும் இல்லை.Click here to know 'how to convert Rs 163/- in to Rs 1 Crore in few years'
உங்களது மனோபாவம்தான் அது.
இப்போது விஷயத்திற்கு வருகிறேன்.
ஒரு ஷாப்பிங் மாலிற்குள் போகிறௌம்.அங்கே உள்ள பிரான்டட் பொருட்களுக்கும் ஊர் பேர் தெரியாத பொருட்களுக்கும் வித்தியாசம் எப்படி தென்படும்.
பிரான்டட் பொருட்களின் பெயரே அங்கே 'பெரிய எழுத்துக்களில்'
இடம் பிடித்திருக்கும்.ஊர் பேர் தெரியாத பொருள் உள்ளுர் லோக்கல் தயாhpப்பாக அதுவூம் தரமான தயாரிப்பாக இருந்தாலும் அதற்கு அவ்வளவூ மதிப்பு கிடையாது.அதை ஒரு ஓரத்தில் வேண்டாவெறுப்பாகப் போட்டு வைத்திருப்பார்கள்.
பிரான்டட் பொருளுக்கு மதிப்பும் அதிகம்.விலையூம் அதிகம்.இதையே திருப்பிப் போட்டுப் பார்த்தால் விலை அதிகமானதாக இருப்பதால்தான் அது ஒரு பிரபலமான பிரான்டட் பொருள்.
நீங்கள் ஒரு சராசரி மனிதராக கூட்டத்தில் கரைந்து போகிற 'மற்றும் பலர்' என்ற டைட்டிலுக்குள் காணாமல் போகிற நபராக இருந்தால் நீங்கள் ஒரு 'அன்பிரான்டட் ஆசாமி' உங்களுக்கு நீங்கள் என்ன தலைகீழாக நின்றாலும் மதிப்பு கிடைக்கவே கிடைக்காது.
நீங்கள் ஒரு பிரபல மனிதராக இருந்தால் நீங்கள்தான் ஒரு 'பிரான்டட் ஆசாமி"
ஆனால் அதற்கு பிரபலமாகவேண்டுமே என்று மலைக்காதீர்கள்.பிரபலமாவது மிகவூம் சுலபம்.
சுலபமா?சும்மா கதை விடாதீர்கள்.
நிச்சயம் சுலபம்தான்.இரண்டே இரண்டு விஷயத்தை மட்டும் கடைபிடித்து வந்தால்...
ஒன்று:தரமான பொருளாக தரமான கன்டன்ட்டாக நீங்கள் இருக்க வேண்டும்.அதாவது நீங்களே ஒரு தரமான ஆசாமியாக மாற வேண்டும்.
இரண்டு: எதை செய்தாலும் மற்றவர்கள் செய்வது போலத்தான் செய்ய வேண்டும்.வீம்புக்கு வித்தியாசமாக செய்யக் கூடாது.ஆனால் அந்த செய்தலில் ஒரு 'செய்நேர்த்தி' இருக்க வேண்டும்.சுருக்கமாகச் சொன்னால் பார்ப்பவர்களைக் கவர்வது மாதிரி இருக்க வேண்டும்.Click here to get 'stock market trading tips'
இந்த இரண்டையூம் ஒரு பயிற்சியின் வாயிலாக கொண்டு வந்து விடலாம்.
நம்முடைய ஸ்டைல் இதுதான்.தினம் அரை மணிநேரம் போதும்.அப்புறம் சிறுகச் சிறுக நேரத்தை அதிகப்படுத்தி விடலாம்.அந்த அரை மணிநேரத்தில் எதை செய்தாலும் அதை குவாலிட்டியோடுதான் செய்ய வேண்டும்.வீட்டை துடைத்து பெருக்கி சுத்தம் செய்தாலும் அதில் ஒரு குவாலிட்டி கொண்டு வர வேண்டும்.நண்பரிடம் செல்பேசியில் பேசினாலும் பேச்சில் ஒரு கம்பீரம் குவாலிட்டி கன்டன்ட் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதை மட்டும் செய்து வாருங்கள்.
அப்புறம் இதன் பக்க விளைவாக நீங்களே தரமான குவாலிட்டியான ஆசாமியாக மாறி விடுவீர்கள்.குவாலிட்டியான பொருட்களே காஸ்ட்லியான பொருட்களாக இருப்பதோடு அவைதான் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாகவூம் மாறுகின்றன.மற்றவர்களை கவர்ந்து இழுக்கின்றன.
பின்னர் நீங்களே ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக மாறி விடுவீர்கள்.இதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால் உங்களிடம் நட்பு வைத்துக்கொள்ள பலரும் விரும்புவார்கள்.எந்த விருந்துக்கு மீட்டிங்கிற்கு சென்றாலும் அங்கே நீங்கள் பளிச்சென்று இருப்பீர்கள்.உங்களது பேச்சுக்கு மதிப்பு இருக்கும்.பெரிய ஆட்கள் எல்லாம் உங்களிடம் வந்து பேசி விட்டுச் செல்வார்கள்.
ஏனெனில் அப்போது நீங்களே ஒரு பெரிய பிரான்ட் ஆக இருப்பீர்கள்.
என்ன பயிற்சிக்கு ரெடியா?தினம்அரைமணிநேரம்தான்.
செய்து பார்ப்போமா?ஆல் தி பெஸ்ட்!
Click here to get 'market updates & free stock tips'
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
1 comments:
Click here for commentsவணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
2 நாட்களாக பதிவை இணைக்கும் போது ஏற்பட்ட தவறு சரிசெய்யபட்டது.
தற்போது பதிவை இணைக்கலாம்.
தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.
www.Nikandu.com
நிகண்டு.காம்
ConversionConversion EmoticonEmoticon