"தட்டி எழுப்புங்கள்..."
நினைத்த மாதிரியே இரவில் நிம்மதியாக உறக்கம்.காலையில் மெல்லிய ஜில்லிப்புடன் இருக்கும் மரங்கள் பூக்கள் இவற்றை சன்னல் வழியே பார்த்துக் கொண்டே எழுந்தாயிற்று.அப்புறம் வெளியே வந்து சின்னதாய் ஒரு நடைப்பயிற்சி அல்லது ஜாக்கிங்.வந்து அமரும்போதே செல்போனில் வரிசையாய் வந்திருக்கும் எஸ்எம்எஸ் விசாரிப்புகளுக்கு பதிலளித்து விட்டு செய்தித்தாளையூம் டிவியையூம் ஒருங்கே பார்த்துக்கொண்டு காபியையோ டீயையோ எடுத்துக் கொண்டு உட்கார்ந்தால்-
அன்றய பொழுது துவங்கி விட்டது என்று அர்த்தம்.அப்புறம் அசத்தலாக உடையணிந்து கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டுப் போகிறீர்கள்.பார்க்கிங் ஏரியாவில் காரையோ, டூவீலரையோ நிறுத்தும்போதே பெருமிதமாக இருக்கிறது.வழியில் எதிர்ப்படும் புன்னகைகளை வாங்கிக் கொள்கிறீர்கள்.ரிசப்ஷன் பெண் தரும் ஸ்பெஷல் புன்னகையூம் வணக்கமும் இன்னும் கொஞ்சம் உற்சாகத்தை உள்ளே ஏற்றுகிறது.
அப்படியே கேபினுக்குள் வந்து உட்கார்ந்தால் அன்றைய அலுவலக தினம் ஆரம்பமாயிற்று.
வேலையை துவங்குகிறீர்கள்.
எப்படி துவங்குகறீர்கள் தெரியூமா?
துரங்கி வழிந்து கொண்டு.இன்னமும் பல்துலக்காமல், முகம் கழுவாமல் குளிக்காமல், உடையணியாமல்...
வாட்?
எப்படி தெரிகிறது என்னைப் பார்த்தால்.எல்லாமே ஆச்சு.ரெடியாகக் கிளம்பி என்ன ஒரு கதாநாயகத்தனமாக வந்து உட்கார்ந்திருக்கிறேன் பாருங்கள்.என் பர்ஃப்யூம் மணத்திற்கு ஆக்ஸ் (AXE) பெண்கள் எல்லாம் விழுந்தடித்துக் கொண்டு என்னிடம்தான் வரவேண்டும்.நான் எப்படி எங்கே துரங்கி வழிந்து கொண்டு அதுவூம் பல்துலக்காமல் முகம் கழுவாமல்..ரப்பிஷ்!
என்று கோபம் வருகிறதுதானே.
நான் சொன்னது உங்களது புற உடலைப் பற்றியல்ல.
பின்னே?
உங்களுக்குள் ஒரு 'நீங்கள்' இருக்கிறீர்களே.இன்னும் மேலே போக வேண்டும்.இன்னும்..இன்னும்..அதிகமாக ஏராளமாக பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற வேட்கையூடன் உங்களது உள்ளே இருக்கும் உங்களை ஏன் துரங்க வைத்துக் கொண்டே அலைகிறீர்கள்.
அதுதான் நல்ல மார்க் வாங்கி நல்ல காலேஜில் படித்து நல்ல வேலையில் சேர்ந்து நல்ல பொண்ணாகப் பார்த்து கல்யாணம் செய்து நல்லதான் ஒரு அபார்ட்மன்ட் வாங்கி நல்லதாய் ஒரு மிட்சைஸ் காரும் வாங்கி...
நல்லதுதான்.
ஆனால் இதுவா உங்களது வாழ்க்கை.இதுவா உங்களது கனவூ வாழ்க்கை.நீங்கள் உட்கார்ந்திருப்பது ஒரு கேபினில்.இதே அலுவலகத்தில் இன்னோர் ஆடம்பரமான இடத்தில் உங்களது கம்பெனியின் சிஇஓ அமர்ந்திருக்கிறாரா? அவரும் உங்களைப்போல்தானே நல்ல மார்க் வாங்கி...நல்ல கல்லுரரியல் சேர்ந்து...ஆனால் அவர் சிஇஓ.நீங்கள் ஒரு அதிகாரி.அதிகபட்சம்ஒரு உயரதிகாரி.இவ்வளவூ ஏன்.நீங்கள் வேலை பார்க்கும் கார்ப்பரேட் நிறுவனத்தின் முதலாளி அவரும் உங்களைப் போல்தானே நல்ல மார்க் வாங்கி..நல்ல காலேஜில் சேர்ந்து...
என்ன சொல்ல வருகிறாய் என்றுதானே முறைக்கிறீர்கள்.
நீங்கள் வாழும் வாழ்க்கை நீங்கள் வாழ விரும்பிய வாழ்க்கையே அல்ல.நினைத்த பஸ் வரும் வரை கிடைத்த பஸ்ஸில் ஏறி சன்னலோர சீட் கிடைக்கும் வரை கிடைத்த சீட்டில் உடலைக்குறுக்கிக்கொண்டு விருப்பமில்லாத பாடலை ஸ்பீக்கரில் கேட்டுக்கொண்டு பயணிக்கும் சாமான்ய மனிதனுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு.
உங்களது புறமனிதரான நீங்கள் அடைந்திருக்கும் இந்த வாழ்க்கை வேலை வசதியெல்லாம் ஒரு டெம்ப்ரவரியான ஏற்பாடுதான் என்பதை உணருங்கள்.உங்களுக்குள் ஆசை லட்சியத்தோடு எரியூம் ஆர்வத்தோடு இருக்கும் உங்களது அகமனிதனையூம் உங்களோடு கைகோர்த்துக் கொள்ளச் செய்யூங்கள்.
அதைச் செய்வதற்கு முதலில் உங்களுக்குள் இருக்கும் 'உங்களை' நீங்கள் தட்டி எழுப்ப வேண்டும்.அதற்கு ஒரு சின்ன டெக்னிக் வைத்துக் கொள்ளலாம்.
அலாரம் டைம்பீஸ் வைத்து எழுப்புவது போல.
தினம் ஒரு தரம் காலையில் உங்களுக்குள்ளிருக்கும் 'உங்களை'
தட்டியெழுப்பி நீங்கள் வாழ வேண்டிய கனவூ வாழ்க்கை இன்னும் கையை விட்டுப் போய் விடவில்லை.அதை நீதான் அடைவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்ளுங்கள்.
தினம் ஒரு தரம் காலையில் அதிகாலையில் இதை சொல்லிக் கொள்ளுங்கள்.
அப்புறம் தானாக கதவூகள் திறக்கும்.காசும் உள்ளே வர ஆரம்பித்து விடும்.
Click here to get money making tricks & techniques
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon