சில பங்குகள் சில நேரத்தில் ஏறும்.சில பங்குகள் ஏன் எதற்கென்றே ஏறும்.சில பங்குகள் சில மறைமுக காரணங்களுக்காக ஏறும்.சில பங்குகள் சிலர் சொன்னார்கள் என்பதற்காக ஏறும்.அவ்வகையில் நாம் சொல்கிறௌம் கீழே காணும் இரண்டு பங்குகளும் ஏறும்.
இந்த பங்குகளை நாம் ஏற்கனவே நமது மெயின்வெப்சைட்டில் (Click here to go to main website)அறிவித்திருந்த பங்குகள்தான்.இந்த இரண்டு பங்குகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது.ஆனால் இரண்டும் வெவ்வேறு தருணத்தில் ஏற்றம் காட்டியிருக்கிறது.Click here to get 'money making formulae'
அவை எந்த பங்குகள் என்றுதானே கேட்கிறீர்கள்.
ஒன்று:அதானி போர்ட்.
இந்த பங்கைப் பற்றி அடிக்கடி நாம் இப்போதெல்லாம் நமது தளத்திலும் நமது மெயின்வெப்சைட்டிலும் இந்த பங்கைப் பற்றி எழுதியிருக்கிறௌம்.சில நாட்கள் முன்பு பேஸ்புக்கிலும் இந்த பங்கைப் பற்றி மறைமுகச் செய்தியாகக் குறிப்பிட்டிருந்தோம்.
இன்னொன்று:குஜராத் பிபாவ்போர்ட்.
இந்த பங்கைப் பற்றி நமது தளத்தில் அடிக்கடி எழுதவில்லை என்றாலும் நமது மெயின்வெப்சைட்டில்(Click here to go to main website) குறிப்பிட்டிருந்தோம்.சந்தாதார்களுக்கும் இந்த பங்கை சிபாரிசு செய்திருந்தோம்.
இப்போது இந்த பங்குகளின் விலையோட்டத்தை கவனிப்போம் வாருங்கள்.
முதலில் அதானிபோர்ட்:
கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி இதன் விலை:ரூ 147
கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி இதன் விலை:ரூ 213
இந்த நான்கு மாதத்தில் 44 சதவீத உயர்வைக் கண்டிருக்கிறது.இன்னும் நன்றாகவே போய்க்கொண்டிருந்தால் அடுத்த காலாண்டிற்குள் இன்னொரு 40சதவீத உயர்வை இந்த பங்கு அடையூம்.
அடுத்தது குஜராத் பிபாவ் போர்ட்:
கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி இதன் விலை:ரூ 62
இப்போது மே மாதம் 12ம் தேதி இதன் விலை:ரூ 113
இந்த நான்கு மாதத்தில் 82 சதவீத உயர்வைக் கண்டிருக்கிறது.இன்னும் நன்றாகவே போய்க்கொண்டிருந்தால் அடுத்த காலாண்டிற்குள் இன்னொரு 60சதவீத உயர்வை இந்த பங்கு அடையூம்.
மேற்கண்ட இரண்டு பங்குகளுக்கும் உள்ள ஒற்றுமை அவை குஜராத் மாநிலம் சம்பந்தப்பட்ட பங்குகள்.வேறொரு காரணம் உள்ளது.அதை இந்த சந்தர்ப்பத்தில் சொன்னால் வலிந்து வேண்டுமென்றே சொன்னது போலிருக்கும்.
ஒரு காலாண்டு அளவில் நல்ல லாபம் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறவர்கள் இந்த இரண்டு பங்குகளையூம் தங்களது போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக் கொள்ளலாம்.
அப்புறம் சரி சந்தை மேலே போனால் ஆட்சியமைத்த சில மாதங்களில் 7447க்கு போகுமென்று சொன்னீர்கள்.அதற்கு காரணம் என்ன என்று பலரும் இன்றைக்கு கேட்டிருந்தார்கள்.
இந்த எண்களைப் பாருங்கள்.
ராகுவூம் கேதுவூம் சேர்ந்த எண்கள் இவை.ராகுவூம் கேதுவூம் பின்னிப்பிணைந்த மாதிரி உள்ள இந்த எண்கள் எங்கிருந்து வருகின்றன என்று சொல்ல விருப்பம்.ஆனால் மோடி என்ற தனிப்பட்ட மனிதரின் ஜாதகத்தை எல்லாம் இழுக்க வேண்டி வரும்.அது முறையல்ல.குறிப்பாகச் சொல்கிறேன்.ஒரு பந்தத்தை ராகு கேது கொடுக்க மறுத்தால் பொதுவாழ்வில் மிகுந்த ஏற்றத்தைக் கொடுப்பான்.அந்த ஏற்றம் மேலே மேலே போகும்போது அதனை சார்ந்த துறைகள் ஏற்றம் பெறும்.இங்கே இப்போது மோடி என்ற பெயரை வைத்துதான் பங்குச்சந்தையே ஏற்றம் பெறுகின்றன.அதனால்தான் அந்த குறியீடு நிஃப்டியில் 7447 என்று இருக்கும் என்று குறிப்பிட்டேன்.
இதை எழுதும்போதே சிலர் சரி மோடி ஆட்சிக்கு வராவிட்டால் என்கிறார்கள்.யாரங்கே!அவர்களை யாராவது இழுத்துக் கொண்டு போய் இருட்டு அறையில் அடைத்து செல்வராகவன் படத்தை இருநுரறு முறை பார்க்கும்படி செய்யூங்கள்.
அப்படி ஆகாவிட்டால் ஒரு வேளை தொங்கு பாராளுமன்றம் வந்தால் மூன்றாவது அணியிலிருந்து யாராவது ஒரு ஆசாமியை காங்கிரஸ் ஆட்சியில் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கும்.அப்படி மட்டும் ஆகக்கூடாது.
அப்படி ஆனால்-
நிஃப்டி வலுவிழந்து போய் 5959 என்ற புள்ளிக்கு வந்து விடும்.வரக்கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள்.
ஏன் 5959 என்றுதானே கேட்கிறீர்கள்?
5959என்பது செவ்வாயூம் புதனும் பின்னிப் பிணைந்த மாதிரியான ஒரு எண்.செவ்வாயூம் புதனும் தனித்தனியாக இருந்தால் நல்லது.ஒன்று சேர்ந்தால் அது கடபவேடதாரிகளைக் குறிக்கும்.அது சந்தைக்கு மட்டுமல்ல.பணத்திற்கும் நல்லதல்ல.
Click here to get intraday updates & market tips
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon