"உங்களோடு ஒரு நிமிடம்..."
Click here to get 'free share trading tips'
கையில் ஒரு கப் காபியை எடுத்துக் கொள்ளுங்கள்.உங்களுக்குப் பிடித்தமான சூட்டில் அந்த காபி இருக்கட்டும்.சிட் அவூட்டிற்கு வாருங்கள்.அல்லது மொட்டை மாடி.அல்லது வீட்டின் படிக்கட்டிலாவது அமர்ந்து கொள்ளுங்கள்.ஒரு சிப் காபியை அருந்தி விட்டு எதிரே தெரிவதை பாருங்கள்.உற்றுப் பார்க்க வேண்டாம்.வீட்டில் பூனை இருந்தால் ஒரே இடத்தை பார்த்துக் கொண்டிருக்குமல்லவா.அது துரங்குகிறதா அல்லது எதையாவது பார்த்துக் கொண்டிருக்கிறதா என்றே தெரியாத அளவூக்கு ஒரே இடத்தைப் பார்த்துக் கொண்டிருக்குமல்லவா?
அது போல பார்த்துக் கொண்டே இருங்கள்.
இது போல பார்க்க இயலாதவர்கள் எதிரே தெரிவதை ஃபோகஸ் செய்யாமல் உங்களது கண்களை 'அன்ஃபோகஸ்"டாக(unfocused) வைத்துக் கொண்டு பாருங்கள்.
இன்னொரு சிப் காபி.Click here to get 'top traded scrips recently'
மீண்டும் ஒரு முறை பாருங்கள்.வேறு எந்த நினைப்பிலும் சிந்தனையை ஆழ்த்த வேண்டாம்.ஏதாவது சிந்தனைகள் அது பாட்டுக்கு வந்தால் வந்து விட்டுப் போகட்டும்.அந்த சிந்தனைகளின் பின்னால் போக வேண்டாம்.
இன்னொரு சிப் காபி.
மூச்சை இயல்பாக விடுங்கள்.யோகா செய்வது போன்ற பிரயத்தனம் எல்லாம் வேண்டாம்.செய்து விட்டீர்களா?
இப்போது எப்படி இருக்கிறது.Click here to get 'how to earn 1 Crore by investing just Rs 163/- only
இது வேறென்றுமில்லை.உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு உடலை 'வார்ம்அப்' செய்வார்கள் அல்லவா அது போன்று மனதை வார்ம்அப் செய்வதற்கான பயிற்சி இது.இதை நானாக எனது ஒருநாள் பயிலரங்கத்தில் கண்டுபிடித்து சொல்லிக்கொடுத்து வருகிறேன்.
இது மெயின்மேட்டர் அல்ல.மெயின்மேட்டர் வேறு.அதற்குத்தான் இப்போது போகப்போகிறௌம்.அப்படியே எழுந்து வாருங்கள்.உடலை தளர்வாகவே வைத்துக் கொள்ளுங்கள்.இறுக்கமாக இருக்க வேண்டாம்.யாரிடமும் பேச வேண்டாம்.செல்பேசியை புறக்கணித்து விடுங்கள்.
எழுந்து வீட்டின் உள்ளே வாருங்கள்.
உங்களது அறையில் நிலைக்கண்ணாடி இருந்தால் நல்லது.கதவை சார்த்திக் கொண்டு இந்த பயிற்சியை தொடரலாம்.இல்லையென்றால் எங்கே வீட்டில் முகம் பார்க்கும் பெரிய கண்ணாடி இருக்கிறதோ அங்கே போய் கண்ணாடியில் உங்கள் முகம்(இயன்றால் முழு உருவமும் தெரிகிற மாதிரி பீரோவில் எல்லாம் பதித்திருப்பார்களே அந்த கண்ணாடி முன் சென்று நின்று கொள்ளுங்கள்) தெரிகிறதல்லவா?
அந்த முகத்தை அதாவது உங்களையே பார்த்துக் கொண்டிருங்கள்.எத்தனையோ பேரை நீங்கள் இதுவரை அன்போடு பாசத்தோடு பரவசத்தோடு பார்த்திருப்பீர்கள்.முதன் முதலாக உங்களையே நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள்.
பாருங்கள்.
வேறெதுவூம் செய்ய வேண்டாம்.
சும்மா பார்த்துக் கொண்டே இருங்கள்.ஏதாவது கேள்வி மனதில் எழுகிறதா?ஏதாவது தோன்றுகிறதா? பார்த்துக் கொண்டே இருங்கள்.
மெல்ல உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்.
இதுதான் நீங்களா?
இதுதான் நீங்கள் விரும்பிய வாழ்க்கையா?
இவ்வளவூதான் நீங்கள் சம்பாதித்த பணமா?
இவ்வளவூ வரைதான் சம்பாதிப்பதற்கு நீங்கள் கஷ்டப்பட்டு பத்தாவதிலும் ப்ளஸ்டுவிலும் கல்லுரரியிலும் படித்தீர்களா?
ஸ்கூல் டிராப்அவூட் எல்லாம் எத்தனை பெரிய கம்பெனி ஆரம்பித்து (உதாரணம் தேவையில்லை.யாரெல்லாம் அவர்கள் என்று உங்களுக்கே தெரியூம்) இருக்கிறார்கள்.கோடிகளில் புரள்கிறார்கள்.
இத்தனை படித்து இத்தனை வயதாகியூம் இவ்வளவூதானா நீங்கள்?இவ்வளவூதானா உங்களது சம்பாத்தியம்?இவ்வளவூ பணம்தானா உங்களிடம் இருக்கிறது? என்று உங்களையே நீங்கள் அன்போடும் ஆதரவோடும் கேட்டுப் பாருங்கள்.
சட்டென்று ஒரு சுயபச்சாதாபம் எட்டிப்பார்க்கும்அதை கிள்ளி எறிந்து விட்டு சொல்லிக் கொள்ளுங்கள்.
வீட்டில் இத்தனை நாள் எங்கே கிடந்தது என்று தெரியாமல் பரண் மேலே தட்டுமுட்டு சாமான்கள் போட்டு வைத்திருந்த இடத்திலோ கிடந்த ஒரு அபூர்வமான வைரக்கல்லை கண்டுபிடித்து விட்டேன்.அந்த வைரக்கல் நான்தான் என்று உங்களை நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்.
இனி ஒவ்வொரு சந்தர்ப்பத்தையூம் விடமாட்டேன்.இது நானே இல்லை.நான் விரும்பிய நான் வேறு.அந்த மிகப்பெரிய 'நானாக' மாறும்வரை ஓயமாட்டேன்.நான் மேலே மேலே வருவதற்கு எதையாவது கற்றுக்கொள்ள வேண்டுமானால் இந்த வயதிலும் தயக்கமின்றி கற்றுக் கொள்ளுவேன்.ஒவ்வொரு நாளும் இனி எனக்கான நாளே.
இவ்வாறாக சொல்லிக் கொள்வதோடு நிறுத்தி விடாதீர்கள்.நீங்கள் அடைய நினைக்கிற கனவூ வாழ்க்கை உங்களை வந்தடையூம்வரை போராட வேண்டாம்.நம்பிக்கையோடு ஒவ்வொரு ஸ்டெப்பாக எடுத்து வைத்துக் கொண்டே இருங்கள்.காசு கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து உங்கள் அருகில் அமர்ந்து கொள்ளும்.
Click here to get how to get more money from bank stocks
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
புத்தகம் வேண்டுவோர்
பின்வரும் வங்கிக் கணக்கில் புத்தக விலை ரூ 555ஐ செலுத்தி விட்டு மின்னஞ்சலில் உங்களது முகவரியை தெரவித்து விடுங்கள்.கொரியரில் புத்தகத்தை அனுப்பி வைக்கிறௌம்.
புத்தக விலையை செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு விபரம்:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
Amount:Rs 555
ConversionConversion EmoticonEmoticon