கதவைத் திற காசு வரட்டும் -13
என்னைப் பொறுத்தவரை மனம் என்பதும் பணம் என்பதும் தனித்தனியே இருப்பவை அல்ல.நம் கையில் வைத்துப் பார்க்கும்போது பணம் மட்டும்தான் நமக்கு தெரிகிறது என்றாலும் அந்த பணத்துடன் நமது மனம் பின்னிப்பிணைந்திருக்கிறது.அந்த பணம் நம் கையில் தவழ்வதற்கு காரணமே நமது மனம்தான்.இதைப்பற்றித்தான் பாக்யா வாரஇதழில் 'மனம் போல் பணம்' என்ற தலைப்பில் ஒன்றரை வருடங்கள் தொடராக எழுதி வந்தேன்.
உங்களது அலுவலகத்தில் இரண்டு வித மேலதிகாரிகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.ஒருவர் கடுகடு ஆசாமி.ரெடிமேடாக தயாரிக்கப்பட்ட ஆபீசர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் உள்ளே நுழையூம்போதே இவனை எப்படி கடித்துக் குதறலாம் என்றுதான் பார்ப்பார்.என்ன வேலை செய்தாலும் நொள்ளை நொட்டை என்று மட்டம் தட்டுவார்.என்ன ஐடியா கொடுத்தாலும் அதெல்லாம் நடக்காது என்று மறுப்பார்.Click here to know HUGE money making techniques
இன்னொரு மேலதிகாரி மிக இனிமையானவர்.நீங்கள் அவரது அறைக்கு உள்ளே நுழையூம் முன்பே அவரது புன்னகை கதவருகில் வந்து உங்களிடம் கை குலுக்கி விடும்.என்ன சொன்னாலும் பொறுமையாக கேட்டுக்கொள்வார்.ஏதாவது பிரச்சனையா என்றால் அந்த பிரச்சனையை மெதுவாக திறந்து பாருங்கள்.அதற்கான தீர்வூ உள்ளேயே இருக்கும் என்பார்.நீங்கள் சுமாரான ஐடியா கொடுத்தால் கூட க்ரேட் என்பார்.நடக்கும்.எல்லாமே நல்லவிதமாக நடக்கும் என்பார்.
இப்போது சொல்லுங்கள்.
நீங்கள் எந்த மேலதிகாரியை சந்திக்க விருப்பப்படுவீர்கள்.அந்த கடுகடு ஆசாமிதான் உங்களது நெகட்டிவ் மனம்.இந்த இனிய ஆசாமிதான் உங்களது பாசிட்டிவ் மனம்.
ஆக பாசிட்டிவ் மனம்தான் அனைவரையூம் கவர்கிறது.அனைவரையூம் மட்டுமல்ல.பணத்தையூம் அதுதான் கவர்கிறது.எனவே உங்களது மனதை பாசிட்டிவ்வாக மாற்ற வேண்டுமென நினைக்காதீர்கள்.பாசிட்டிவ் மனது உங்களிடமேதான் இருக்கிறது.அந்த நெகட்டிவ் மனது அதை விட பெரியதாக இருப்பது போல தோற்றம் தருவதால் பாசிட்டிவ் மனது நம்மிடம் இல்லையோ என்று தோன்ற வைத்து விடுகிறது.
எனவே ஒரு சின்ன ட்ரிக் செய்தால் போதும்.
ட்ரிக் என்று கூட சொல்ல வேண்டாம்.
ஒரு பயிற்சி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
காலையில் எழுந்தரிக்கிறீர்கள்.வெளியே போய் ஜாக்கிங் செய்கிறீர்கள்.அப்புறம் திரும்பி வந்து ஏரோபிக் செய்கிறீர்கள்.ஏன் யோகா கூட செய்கிறீர்கள்.இதெல்லாம் உடற்பயிற்சிகள்.Click here to know market trends & stock ideas
உடற்பயிற்சி செய்தால்தான் நமது உடல் கட்டுக்கோப்பாக இருக்கிறது.நோய் நொடி வராமல் பிபி டயபடிஸ் வராமல் இருக்கிறது.
அது போல நீங்கள் 'மனப்பயிற்சி' செய்தால் என்ன?
மனப்பயிற்சியா?
ஆம்.உடற்பயிற்சி போல மனப்பயிற்சி.
இப்படி துவங்குங்கள்.ஒரு நாளைக்கு அரை மணி நேரம் போதும்.அந்த அரை மணிநேரத்தில் எதைப் பேசினாலும் பாசிட்டிவ்வாகவே பேச வேண்டும்.எதைச் செய்தாலும் உற்சாகமாகவே ஏதாவது பாடலை ஹம் செய்து கொண்டே செய்ய வேண்டும்.நேரிலோ ஃபோனிலோ ஃபேஸ்புக் ஸ்டேட்டஸிலோ அடுத்தவரை பாராட்ட மட்டுமே செய்ய வேண்டும்.
எதையெல்லாம் நீங்கள் உங்களால் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களோ அதையெல்லாம் உங்களால் செய்ய முடியூமென்று நம்ப வேண்டும்.
அரை மணி நேரம் போதும்.
தினம் செய்து பாருங்கள்.உங்களது பாசிட்டிவ் மனம் உங்கள் மேல் ஆளுமை செலுத்தப்போவதால் அங்கே பணமும் பணம் சார்ந்த விஷயங்களும் வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்.
அப்புறமென்ன?
பணம் சம்பாதிப்பது சுலபம் என்று புரிந்து கொள்வீர்கள்.பணம் சம்பாதிக்கவூம் செய்வீர்கள்.
'பணம்' பற்றிய ஒருநாள் பயிலரங்கத்தை உங்களது ஊரில் வந்து நடத்த வேண்டுமென்றால் மின்னஞ்சலில் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to get intraday updates & stock tips
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon