கதவை திற காசு வரட்டும் -12
நேரடியாக கட்டுரைக்குள் போவதை விட ஒரு சின்ன அசைன்மன்ட் செய்து பார்ப்போம்.ஒரு சிறிய பேனாவை எடுங்கள்.பால்பாயின்ட் பேனா வேண்டாம்.பழைய கால இங்க் பேனாவாக இருக்கட்டும்.அதன் மூடியை மட்டும் தனியாக எழுத்து மேசை மேல் வையூங்கள்.அடுத்து ஒரு டம்ளரை எடுங்கள்.காலியான வெறும் டம்ளர்.அதையூம் பேனா மூடியின் அருகில் மேசை மீது வையூங்கள்.Visit here daily to improve your financial status
இப்போது நீங்கள் வெளியே போகும்போது பயன்படுத்தும் கைப்பையை எடுங்கள்.அதில் உள்ளவற்றை முழுவதுமாக வெளியே எடுத்து விட்டு கைப்பையை மட்டும் மேசை மீது பேனாவூக்கும் டம்ளருக்கும் நடுவில் வையூங்கள்.Click here to get 'share trading tips to make more money'
செய்து விட்டீர்களா?
இப்போது உங்களது பர்சை எடுக்க வேண்டும்.அதிலுள்ள அத்தனை கார்டுகளையூம் இன்னபிற விஷயங்களையூம் எடுத்து விட்டு அந்த பர்சை டம்ளருக்கு இடது புறம் வையூங்கள்.
அடுத்து ஒன்றே ஒன்றை செய்ய வேண்டும்.
உங்களது வீட்டில் உள்ள பீரோவை திறக்க வேண்டும்.எந்த பீரோவில் நீங்கள் நகை பணம் வைப்பீர்களோ அதை திறந்து வைத்தால் போதுமானது.அதிலுள்ள எதையூம் வெளியே எடுக்க வேண்டாம்.
வைத்தாகி விட்டதா?
ரெடியா?
ஆரம்பித்து விடலாமா?
உங்களுக்கு பணம் வேண்டுமா?நிறைய நிறைய பணம் வேண்டுமா?எடுக்க எடுக்க குறையாமல் பணம் வந்து கொண்டே இருக்க வேண்டுமா?
அதற்காகத்தான் இத்தனை ஏற்பாடும் செய்து கொண்டிருக்கிறௌம்.இப்போது நான் கேட்கிற ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் சரியாக பதில் சொல்லி விட்டால் போதும்.
கேள்வி இதுதான்.
மேசையில் வைத்துள்ள எல்லா பொருட்களையூம் பாருங்கள்.ஒரு தரம் நிதானமாக பாருங்கள்.வேண்டுமானால் அவற்றை தொட்டுக் கூட பாருங்கள்.
பேனா மூடி.டம்ளர்.கைப்பை.பர்ஸ்.
அப்புறம் வீட்டில் திறந்து வைத்துள்ள பீரோ.
இப்போது பதில் சொல்லுங்கள்.பேனா மூடிக்குள் என்ன இருக்கிறது.டம்ளருக்குள் என்ன இருக்கிறது.கைப்பைக்குள் என்ன இருக்கிறது.பர்ஸூக்குள் என்ன இருக்கிறது.பீரோவூக்குள் என்ன இருக்கிறது.
ஒன்றுமில்லை.பீரோவூக்குள் மட்டும் துணிமணிகளும் பணம் நகையூம் இருக்கிறது என்பது சாதாரண பதில்.
சரியான பதில் என்பது காலியான பேனா மூடிக்குள் காற்று இருக்கிறது.டம்ளருக்குள்ளும் காற்று இருக்கிறது.கைப்பைக்குள்ளும் காற்று இருக்கிறது.பர்ஸினுள்ளும் காற்று இருக்கிறது.திறந்து வைத்திருக்கிற பீரோவினுள்ளும் காற்று இருக்கிறது.
விஷயம் இதுதான்.அதாவது எங்குமே எதுவூமே காலியாக இருக்காது.வெற்றிடம் என்ற ஒன்று இருக்கிறது.அதைப் பற்றி இங்கே பேசவில்லை.பொதுவாக எல்லா இடத்திலும் காற்று இருக்கிறது.அல்லது எதுவோ இருக்கிறது.
அப்படியானால் உங்களது மனதிற்குள்?
ஏதோ வாழ்க்கை ஓடுது.
இப்படியே நாளை கடத்திடலாம்.இன்னைய பொழுது போனா சரி.
நமக்கெல்லாம் கட்டம் சரியில்லை.
அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்பா.
விக்கிற விலைவாசியில சைக்கிள்ல போகவே முடியலை.ஃப்ளைட்ல போக ஆசைப்பட்டானாம் ஒருத்தன்.போவியா..வேலையைப் பார்த்துக்கிட்டு.
இப்படி ஏதேனும் எண்ணங்கள் மனதிற்குள் அடைபட்டுக் கிடைக்கும்.
இப்போது அந்த பேனா மூடிக்குள் ஏதாவது ஒரு பொருளை காகிதத்தையோ துணியையோ வைத்து அழுத்தி மூடினால்?
உள்ளே இருக்கும் காற்று வெளியே ஓடிப்போய் விடும்.
டம்ளரில் தண்ணீரை ஊற்றி வைத்தால்?
காற்று காணாமல் போய் விடும்.
பர்ஸையூம் கைப்பையையூம் அது போல பொருட்களால் நிரப்பி விட்டால்(அப்போதும் இயற்கையின் நியதிப்படி சிறிது காற்று இருக்கத்தான் செய்யூமென்ற வாதம் வேண்டாம்).பீரோவிலும் அது போல முழுக்க பொருட்களால் நிரப்பி விட்டால் குறைவான காற்றே அங்கு இருக்கும்.
அது போல உங்கள் மனதில் பாசிட்டிவ்வான எண்ணங்கள் தன்னம்பிக்கை மற்றும் ஆசைகளால்(ஏன் பேராசையாகவே இருந்தாலும் ஒன்றும் தப்பில்லை) நிரப்பி விட்டால்?
பேராசையைப் பற்றி ஒரு வார்த்தை.
சின்ன வயதில் அப்பாவோ பள்ளிக்கூட வாத்தியாரோ 'நீயெல்லாம் உருப்படமாட்டே.மாடுமேய்க்கத்தான் லாயக்கு' என்று சொல்லியிருந்தால் இப்படி பேராசைப்படுங்கள்.ஆமாம்.மாடு மேய்க்கத்தான் போகிறேன்.ஆனால் பத்து லட்சம் மாடுகளை ஊர் முழுக்க நாடு முழுக்க ஒவ்வொரு நாட்டிலும் பண்ணை வைத்து என் பெயரில் 'பிரான்டட் பண்ணையாக' நடத்தப் போகிறேன் என்ற எண்ணத்தால் மனதை நிரப்பி விட்டால்?
நீங்கள் வளர்ந்ததும் அப்பாவோ அல்லது அந்த வாத்தியாரோ பிரமித்துத்தானே போவார்.
பங்குச்சந்தையிலும் அப்படித்தான்.
முதலீடு வேண்டுமானாலும் சிறிய அளவில் இருக்கலாம்.ஆனால் நீங்கள் சம்பாதிக்க விரும்புகிற பணம் நீங்கள் சம்பாதிக்கப்போகிற பணம் பல்லாயிரம் கோடிகளாக இருக்க வேண்டும்.
எனது முந்தைய பதிவில் கூட வெறும் பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் ஒரே ஆண்டில் அதை ஒரு கோடியாக மாற்றும் வித்தை பற்றி எழுதியிருக்கிறேன்.அப்படி மாற்ற உங்களாலும் முடியூம்.என்ன அதற்கென்று சில நுணுக்கங்கள் தெரியவேண்டும்.அந்த நுணுக்கங்களைத்தான் எனது தபால்வழிப் பயிற்சியில் சொல்லிக்கொடுக்கிறேன்.அதுவூம் 'உயர்நிலைப் பயிற்சியில்'தான் நிறை நுணுக்கங்கள் உள்ளன.உயர்நிலைப் பயிற்சி என்பது பணக்காரர்களுக்குத்தானே என்ற எண்ணத்தை கைவிடுங்கள்.அது உங்களுக்கும் பயன்தரக் கூடிய பயிற்சியாக இருக்கக் கூடும்.
Click here to get 'money multiplying ideas'
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.
விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon