சுண்டைக்காய் மனிதர்கள்...
ஒரு நிமிடம் நில்லுங்கள்.உங்களைச் சுற்றியூள்ள மனிதர்களைப் பாருங்கள்.அவர்களில் யார் யாரிடமெல்லாம் நீங்கள் விரும்பிப் பேசுகிறீர்கள்.யாரையெல்லாம் நீங்கள் பேச விரும்பாமல் தவிர்க்கிறீர்கள் என்று ஒரு மெல்லிய சர்வே எடுத்துப் பாருங்கள்.ஒரு விஷயம் புலப்படும்.
இரண்டே வகை மனிதர்களிடம் மட்டும்தான் நீங்கள் பேசுவதற்கு ஆர்வம் காட்டுவீர்கள்.ஒன்று அவர்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்குமென்ற மனிதர்கள்.இரண்டு அவர்கள் பேச்சு உங்களுக்கு சுவாரஸ்யம் தரக்கூடியதாக உற்சாகம் தரக்கூடியதாக இருக்கும் மனிதர்கள்.மற்றவர்களிடம் பேசுவதற்கு விரும்பமாட்டீர்கள்.Click here to get market updates & trading tips
நான் கூட இப்படித்தான் இருந்தேன்.சின்ன வயதிலிருந்தே இந்த பழக்கம் என்னிடம் ஊறிப்போயிருந்தது.நெகட்டிவ்வாகப் பேசுபவர்கள் எந்த லட்சியமும் இல்லாதவர்கள் நேரத்தை வீணடிப்பவர்கள் என்று இருப்பவர்களை எதற்கும் லாயக்கில்லாதவர்கள் என்று நான் நினைத்திருந்தேன்.அவர்களிடம் நான் பேச மாட்டேன்.என்னைப் பற்றி அவர்கள் இவன் கர்வமாக இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டால் கூட பரவாயில்லை இவர்கள் எல்லாம் நமது நேரத்தை திருடிக்கொண்டு போக வந்தவர்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.அது தவறு என்பதை பின்னாளில் உணர்ந்து என்னை மாற்றிக்கொண்டேன்.
நேற்று கூட பேஸ்புக்கில் எனது வொர்க்கிங் ஸ்டைலையூம் ஷேர் டிரேடிங் தொடர்பான செய்திகளை நான் வெளியிடும் முறையையூம் ஒருவர் அப்படியே காப்பி அடித்து வருவதாக எனது கவனத்திற்கு பேஸ்புக் நண்பர்கள் கொண்டு வந்தனர்.அதற்காக என்னை காப்பியடித்தவர் மீது நான் கோபம் கொள்ள முடியூமா?அவர் ஏதோ தெரியாத்தனமாக பிழைப்புக்காக ஏதோ செய்து விட்டார்.அதை ஏன் பெரிது படுத்துவானேன் என்று பேசாமல் விட்டு விட்டேன்.
இது போன்ற மனிதர்களையூம் எதற்கும் உதவாத மனிதர்களையூம் முன்பெல்லாம் நான் சுண்டைக்காய் மனிதர்கள் என்று குறிப்பிடுவது வழக்கம்.நீங்கள் கூட 'கிடக்கிறான் அவன் சுண்டைக்காய் பய' என்ற வார்த்தைப் பிரயோகங்களை அடிக்கடி வீட்டிலோ வெளியிலோ கேள்விப்பட்டிருக்கலாம்.
சுண்டைக்காய் மனிதர்கள் என்றால் சுமாரான வேலை செய்பவர்களையூம் அவர்கள் சார்ந்திருக்கிற வாழ்க்கைச் சூழலையூம் நான் குறிப்பிடவில்லை.பெரிதாக எந்த லட்சியமும் இல்லாதவர்கள் இவர்கள்.இவர்களிடம் பேசும்போது நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் நம்மையூம் இவர்கள் விழுந்து கிடக்கும் 'லட்சியமின்மை' என்ற படுகுழிக்குள் இழுத்துத் தள்ளி விடுவார்கள் என்பது மட்டும்தான் இவர்களிடம் உள்ள ஆபத்து.Click here to know 'money making secrets'
ஆனால் இவ்வகை சுண்டைக்காய் மனிதர்கள் பெரும்பாலும் சந்தோஷமாக இருப்பதை நான் கண்டிருக்கிறேன்.பெரிய லட்சியம் இருந்தால்தான் அதை நோக்கிய போராட்டம் மனஅழுத்தம் எல்லாம் இருக்கும்.ஆனால் இவர்களுக்கு அதெல்லாம் கிடையாது.இந்த யதார்த்த மனிதர்கள் சிலவேளைகளில் நமக்கே பெரிய அளவில் உதவி விடக்கூடும்.உதாரணமாக ஒரு பெரிய ஆபீசரின் டேபிளில் கோப்புகள் அவரது கையெழுத்திற்காக வரிசையாக மேசையில் காத்துக் கிடக்கின்றன.அவற்றில் நமது கோப்பும் அடியில் இருக்கிறது.அன்றைய வேலைப்பளுவில் அவரால் நாலைந்து கோப்புகளைத்தான் படித்துப் பார்த்து கையெழுத்திட முடியூம்.அதன்பிறகு அவர் டெபுடேஷனில் எங்கோ போய்விட்டு இரண்டு மாதம் கழித்துத்தான் வருவார்.அவருக்கு பதிலாக வரப்போகிற 'இன்சார்ஜ்' ஆசாமிக்கு கையெழுத்திடக்கூடிய அதிகாரம் இருந்தாலும் எதற்குடா வம்பு என்று கையெழுத்திட மாட்டார்.இந்த சூழ்நிலையில் நானொரு பிசினஸ்மேன் உயர்வான ஆட்களிடம் மட்டும்தான் பேசுவேன் என்று முகத்தை இறுக்கிக்கொண்டு போனால் நம் கோப்பு போட்டபடி போட்ட இடத்திலேயே மாதக்கணக்கில் இருக்க வேண்டியதுதான்.அதுவே அந்த அலுலவத்தில் உள்ள வரவேற்பில் உள்ள பெண்மணி, ஆபீசரின் அறை வாசலில் அமர்ந்திருக்கும் ஏவலாள், இன்னும் சில சப்ஸ்டாப் தரை பெருக்க தண்ணீர் பிடித்து வைக்க வருகிற வயதான பெண்மணி என்று எல்லோரிடத்திலும் ஒரே மாதிரி ஒரு மலர்ச்சியான புன்னகையூடன் பேசி அவர்களது சொந்தக் கதையையூம் சில நிமிடங்கள் செலவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்து விட்டால்- நமது கோப்பை தானாகவே மேலே எடுத்து வைத்து விடுவார்கள் இந்த சுண்டைக்காய் மனிதர்கள்.ஆக இவர்களை சுண்டைக்காய் மனிதர்கள் என்று சொல்வதும் தவறுதான்.Click here to know 'how to convert Rs 163 in to Rs 1 Crore in 365 days' in trading
லட்சியமில்லாத வாழ்க்கையில் மேலே வரத் தெரியாத இந்த மனிதர்கள் பட்டை தீட்டப்படாத வைரங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
இது போன்ற வைர மனிதர்கள் உங்கள் வீட்டின் அருகிலும் அலுவலகத்திலும் இருக்கக் கூடும்.அவர்களிடம் எம்பதியோடு(empathy)பேசிப்பாருங்கள்.
பணம் சம்பாதிக்கும் முயற்சியில் இருக்கும் உங்களது பிசினசிற்கும் வேலைக்கும் இவர்கள் தக்க சமயத்தில் தானாகவே முன்வந்து உதவிவிட்டு அவர்கள் நமக்கு உதவியிருக்கிறார்கள் என்ற உணர்வே இல்லாமல் வெள்ளந்தியாக சிரித்துக் கொண்டே போய் விடுவார்கள்.
ஆக வைர மனிதர்களை ஒரு போதும் மிஸ் செய்து விடாதீர்கள்.
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon