பிசினஸ் செய்பவர்களாகட்டும், பங்குச்சந்தை போன்ற டிரேடிங் செய்பவர்களாகட்டும் அவர்கள் எதை நினைத்து இந்த செயல்களைச் செய்கிறார்கள்என்று கேட்டால் ஒரே ஒரு பதில்தான் கிடைக்கும்.
மிகப்பெரிய பணக்காரனாக வேண்டும்.பங்களா போன்ற வீடு.சொகுசுக்கார்.நகைகள், உல்லாசமான வாழ்க்கை என்று பட்டியலிட்டு சொன்னாலும் அதிலுள்ள ஒரே ஒரு அம்சம் பணம்.
பணத்தை சம்பாதிப்பதற்குத்தான் இத்தனை அலைச்சலும்அவஸ்தையூம்.எவ்வளவூ பணம் வேண்டும் என்றால் நிறைய பணம்..கோடிக்கணக்கான பணம்.இன்னும் இன்னும் பணம் என்று அவர்கள் மனம் சொல்லிக்கொண்டே இருக்குமே தவிர குறிப்பாக இவ்வளவூ பணம்தான் வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள்.
என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஒரு கோடி ரூபாய் வேண்டும்.என்றால் அந்த ஒரு கோடி ரூபாயை அடைந்ததும் அடுத்து எத்தனை கோடி ரூபாய் என்று கேள்வி எழும்.அதனால் கேட்கும்போதே சரியாகக் கேட்டு விட வேண்டும்.கொஞ்சம் புத்திசாலித்தனமாகவூம் கேட்க வேண்டும்.
யாரிடம்?
வேறு யாரிடமும் அல்ல.உங்களது மனதில்தான்.நீங்கள் கேட்பதை அப்படியே பதிவூ செய்து வைத்துக் கொண்டு அதை நோக்கி உங்களது சிந்தனையை மனம் திருப்பி விட்டு விடும்.நீங்கள் உங்களை அறியாமலேயே அதன்பிறகு அந்த இலக்கை நோக்கி பயணப்பட்டு கொண்டிருப்பீர்கள்.இது வெளியிலிருந்து பார்த்தால் தெரியாது.சில காரியங்களை ஏன் எதற்கு என்று தெரியாமல் நீங்கள் செய்து கொண்டிருப்பீர்கள்.அது உங்களது உள்மனதின் கட்டளையினால் விளைவதுதான்.
சரி இப்போது மெயின் மேட்டருக்கு வருவோம்.
வரம் கேட்பது எப்படி?
கடவூளோ, தேவதையோ உங்கள் முன் தோன்றி கேளு.ஆனா ஒரே ஒரு வரம்தான் தருவேன் என்றால் என்ன கேட்பீர்கள்.நானாக இருந்தால் பின்வருமாறு கேட்பேன்.
'கேட்கும்போதெல்லாம் வரம் தா" என்பதுதான் அது.
நீங்கள் இப்போது உங்கள் மனதில் கேட்பதை ஒரு ஐந்தாண்டு திட்டமாகப் போட்டு கேளுங்கள்.உதாரணமாக ஐந்தாண்டுகளில் ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டால் அதையடுத்து அந்த ஒரு கோடியை ஐந்தாகப் பிரித்து ஒரு ஆண்டில் இருபது லட்சம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று கேளுங்கள்.அதற்காக இதை இன்னும் பிரித்துக் கொண்டே போய் மாதாமாதம் ரூ 1.66 லட்சம் சம்பாதிக்க வேண்டும் என்று கேட்டு விடாதீர்கள்.மனம் மலைத்துப் போகிறதோ இல்லையோ நீங்கள் மலைத்துப் போய் விடுவீர்கள்.
இப்போது மெயின் மேட்டரின் அடுத்த ஸ்டெப்புக்கு வருவோம்.ஒரு மாதத்தில் ரூ 1.66 லட்சம் சம்பாதிக்க வேண்டுமென்றால் எவ்வளவூ முதல் போட வேண்டும்.இதை கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.கீழ்க்காணும் அளவில் உங்களது முதலீடு இருக்க வேண்டும்.
1.முதல் முதலீடு:நீங்களேதான்.நீங்கள் டெடிகேட்டிவ்வாக உங்களது பிசினசில் அல்லது பங்குச்சந்தை டிரேடிங்கில் ஈடுபடவேண்டும்.
2.இரண்டாவது முதலீடு:உங்களது தன்னம்பிக்கைதான்.சிறு சரிவூ ஏற்பட்டாலோ சிறு ஏமாற்றம் ஏற்பட்டாலோ துவண்டு போய் விடாமல் மேலே மேலே போய்க்கொண்டே இருக்க வேண்டும்.
3.மூன்றாவது முதலீடு:உங்களது நேரம்.ஒரு நாளில் உங்களுக்கு உண்மையாக உங்களது பிசினசிற்கு உண்மையாக இரண்டு மணிநேரமாவது இருந்தே ஆக வேண்டும்.
4.நான்காவது முதலீடு:சேமிப்பும் மறுமுதலீடும் கலந்த உத்தி.அதாவது நீங்கள் பிசினசில் அல்லது பங்குச்சந்தை டிரேடிங்கில் சம்பாதிப்பதை ஒரு பாதி சேமிப்பிலும் மறுபாதி மறுமுதலீட்டிலும் போட வேண்டும்.
5.ஐந்தாவது முதலீடு:நிஜமாகவே சிறிது பணம்.
நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.ஐந்தாண்டுகளில் ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பதற்கு 'பணம்' என்பது கடைசியில்தான் தேவைப்படுகிறது.முதலீடு என்ற இந்த பணம் முதலில் தேவைப்படுவதில்லை.
சரி எவ்வளவூ பணம் தேவைப்படும்?
முதலீடாக...
பங்குச்சந்தையில் டிரேடிங் செய்வதற்கு...
இன்ட்ரா டே மட்டுமே செய்வதற்கு...
அதுவூம் ஆஃப்ஷன் டிரேடிங்கில் (Option trading) செய்வதற்கு...
ஐந்து லட்சம்?
மூன்று லட்சம்?
ஒரு லட்சம்?
ஐம்பதாயிரம்?
தேவையில்லை.வெறும் பத்தாயிரம் போதும்.
வெறும் பத்தாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு இந்த காலத்தில் மோபட் கூட வாங்க முடியாது.ஆனால் இந்த பத்தாயிரத்தை வைத்துக் கொண்டு ஐந்தாண்டுகளில் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து விட முடியூம்.
எப்படி? ஏதும் கண்கட்டு வித்தையா?
அப்படி ஏதும் இல்லை.எல்லாமே திட்டமிட்ட கவனத்துடன் எடுத்து வைக்கிற பேபி ஸ்டெப்தான் (baby steps).அடி மேல் அடி அதுவூம் சின்னச் சின்னதாய் அடியெடுத்து வைத்து நடக்கப்போகிறௌம்.
ஒரு நாளைக்கு மூன்று டிரேடிங் மட்டும் ஆஃப்ஷனில் செய்வோம்.அல்லது இரண்டு டிரேடிங்காகவோ அல்லது ஒரே டிரேடிங்காகவோ செய்வோம்.
ஒரே ஒரு டிரேடிங் என்றால் ஒரு டிரேடிங்கில் ஒரு சதவீத லாபம் கிடைத்தால் போதும்.ஒரு நாளைக்கு மூன்று வெற்றிகரமான டிரேடிங் என்றால் ஒரு மாதத்தில் கிடைக்கிற இருபது டிரேடிங்குகளில் மொத்தமாக 60 சதவீத லாபம் கிடைக்கிறது.
அப்படியானால் நீங்கள் போட்ட முதல் ரூபாய் பத்தாயிரம் ஒரு மாதத்தில் வெறும் ரூ 16000 ஆகத்தான் உயர்கிறது.ஆனால் ஒரு வருட முடிவில் ரூ 17.59 லட்சமாக வளர்ந்திருக்கும்.இதுவே ஐந்தாண்டுகளின் முடிவில் ஒரு கோடி ரூபாயாக வளர்ந்திருக்கும்.ஆக ஒரு கோடி ரூபாயை சம்பாதிப்பதற்கான முதலீடு வெறும் பத்தாயிரம் ரூபாய்.ஒரு டிரேடிங்கில் ஒரு சதவீத லாபம் மட்டுமே போதுமென்று, ஒரு நாளைக்கு மூன்று டிரேடிங் மட்டுமே செய்கிறௌம்.மாதத்தில் இருபது நாட்கள் இது போல ஐந்தாண்டுகளுக்கு தினமும் இரண்டு மணிநேரம் மட்டுமே உழைத்தால் போதும்.கோடிகளை எட்டுவது சுலபம்தான் என்று புரிகிறதல்லவா.
இந்த டிரேடிங்கில் நஷ்டமே வராதா?
நஷ்டம் வரக்கூடாது என்பதற்காகத்தான் ஒரு சதவீத லாபத்தை மட்டுமே ஒரு டிரேடிங்கில் எதிர்பார்க்கிறௌம்.பத்து சதவீத லாபத்தை ஒரு ஆர்டரில் எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தால் நிச்சயம் நஷ்டம் வரும் என்பதால் அதை நாம் செய்வதில்லை.ஆஃப்ஷன் டிரேடிங்கில் இந்த வித்தையை செய்து பார்ப்பதற்கு நமது தபால்வழிப்பயிற்சியில் சேர்ந்து விடுங்கள்.அப்போது எப்படி செய்வதென்று நீங்களே புரிந்து கொள்வீர்கள்.ஐந்தாண்டு காலம் அதிகமென்று நினைத்தால் விரைவாக டார்கெட்டை அடைவதற்கு நமது 'ஹை ஸ்பீடு டிரேடிங்" தபால்வழிப் பயிற்சியில் சேர்ந்து விடுங்கள்.இந்த பயிற்சியில் குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிப்பது எப்படி என்று சொல்லித் தருகிறௌம்.
ஆக பணம் சம்பாதிப்பதோ கோடிகளை சம்பாதிப்பதோ கடினமாக செயல் அல்ல.கடினமான செயல் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது.அது இதுதான்.
'உங்களாலும் முடியூம்' என்று உங்கள் மனதை நம்பவைப்பது.பாசிட்டிவ்வான எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் எதுவூம் சாத்தியமே.நமது தபால்வழிப் பயிற்சியில் சேர விரும்பினால் மின்னஞ்சலில் bullsstreet.com@gmail.com தொடர்பு கொள்ளுங்கள்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get top trading tips
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
1 comments:
Click here for commentsவணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
ConversionConversion EmoticonEmoticon