கதவைத் திற காற்று வரட்டும் -11
ஒரு செயலை வெற்றிகரமாக செய்ய வேண்டுமென்றால் அந்த செயலை எல்லோரும் எப்படி செய்கிறார்கள் என்று பாருங்கள்.அதையே சற்று மாற்றிப்போட்டு செய்து பாருங்கள்.நல்ல பலன் கிடைக்கும்.இதையேதான் மேலாண்மை ஆளுமை பற்றி பேசுபவர்கள் 'வின்னர்ஸ் டு டிஃபரன்ட்லி'(winners do differently)என்கிறார்கள்.கீழே உள்ள வாசகத்தைப் பாருங்கள்.இந்த வாசம் ஐயாயிரம் வருடங்கள் பழைமையானது.ஏன் இப்படி செய்ய வேண்டும் என்று இதை சொன்னவரிடமோ தற்போது ஆங்காங்கே மேற்கோள் காட்டுபவரிடமோ யாரும் கேட்பதேயில்லை.
கடமையை செய் பலனை எதிர்பாராதே.
இப்போது இதையே மாற்றிப் போட்டுப் பார்ப்போம்.
பலனை எதிர்பார்ப்போம்.கடமையை செய்வோம்.
எவ்வளவூ பலன் கிடைக்குமென்று ஒரு கணக்குப்போட்டு வைத்துக் கொள்வோம்.இந்த அளவிற்கு பலன் கிடைக்க இந்த அளவிற்கு கடமையை செய்வோம் என்று முடிவூ செய்து செயலாற்றுவோம்.
ஒரு உதாரணம் சொன்னால் புரியூமென்று நினைக்கிறேன்.
ஐந்து வருட காலம்தான் இலக்கு.Click here to know 'how to multiply money with bank deposits'
ஐந்து வருட முடிவில் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து விட வேண்டும்.
இந்த ஐந்து வருடத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பதற்கு எத்தனை ரூபாய் முதல் போட வேண்டும்.என்ன வியாபாரம் அல்லது வணிகம் செய்ய வேண்டும் என்று அலசிப்பார்க்க வேண்டும்.ஆனால் சத்தியமாக ஒரு வேலைக்குப் போய்(சாப்ட்வேர் வேலையாகவே இருந்தாலும் கூட) சம்பளம் வாங்கி அந்த சம்பளத்தில் பணத்தை மிச்சம் பிடித்து வங்கிக்கணக்கில் போட்டு வைத்துக்கொண்டே வந்தால் நிச்சயம் ஐந்து வருடத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்கவே முடியாது.
பிசினசில்தான் சம்பாதிக்க முடியூம்.பங்குச்சந்தையிலும் சம்பாதிக்க முடியூம் என்று அடிக்கடி எழுதி வருகிறேன் என்பதால் இன்றும் பங்குச்சந்தை பற்றி எழுத வேண்டாம் என நினைக்கிறேன்.
சரி அதுதான் அந்த காலத்திலிருந்தே சொல்கிறார்களே 'கடமையைச் செய் பலனை எதிர்பாராதே' என்று தேமே என்று ஒரு பிசினசை ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் கடையை திறந்து கஸ்டமரை கவனித்து பிசினசில் அமைதியாக இருந்து விட்டால் ஐந்து வருட முடிவில் ஒரு கோடி ரூபாய் கிடைக்குமா?Click here to get intraday updates & stock tips
கிடைக்கவே கிடைக்காது.
அதனால்தான் இந்த வாசகத்தை மாற்றிப்போட்டுள்ளோம்.
பலனை எதிர்பார்.கடமையைச் செய் என்று.
ஐந்து வருட காலத்தில் எத்தனையோ மாற்றங்கள் வரும்.அந்த மாற்றங்களை எதிர்பார்க்க வேண்டும்.எத்தனையோ தடவை தடைகள் குறுக்கீடுகள் ஏன் நஷ்டம் கூட வரும்.அதையூம் எதிர்பார்க்க வேண்டும்.சின்னதாய் ஒரு ரிஸ்க் எடுத்து விட்டால் அருமையாக பணத்தைக் கொண்டு வந்து கொட்டக்கூடிய வாய்ப்பும் வரும்.அப்படி ஏதாவது அமைந்தால் அதற்கென்று சிறிதளவூ பணத்தை தயாராக வைத்துக் கொள்வது எப்படி என்றும் எதிர்பார்க்க வேண்டும்.எந்த பிசினசிலும் ஆரம்பித்த ஆறுமாதங்களுக்கு எதுவூம் வராது.அப்போது நாட்களை ஓட்டுவது எப்படி என்றும் எதிர்பார்க்க வேண்டும்.அப்புறம் பணம் வர ஆரம்பித்தவூடன் அந்த பணத்தை என்ன செய்ய வேண்டுமென்றும் எதிர்பார்க்க வேண்டும்.
மேற்கண்ட பாராவை ரீவைண்ட் செய்து பாருங்கள்.
திரும்பத் திரும்ப வரும் வார்த்தை இதுதான்.
'எதிர்பார்க்க வேண்டும்'
ஆக பலனை எதிர்பார்க்க வேண்டும்.வரும் நல்லது கெட்டதையூம் எதிர்பார்க்க வேண்டும்.அதன்பிறகு கடமையைச் செய்ய வேண்டும்.
எனவே-
பலனை எதிர்பாருங்கள்.அப்புறம் கடமையை செய்து கொள்ளலாம்.
அப்படி செய்தால் கதவைத் திறந்தவூடன் காற்றுக்கு பதிலாக காசு வந்து கொட்டும்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get 'top trading shares list'
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.
விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon