கதவை திற காசு வரட்டும் - 8
கோடீஸ்வரர் ஆவதற்கோ கோடி கோடியாக பணத்தை சம்பாதிப்பதற்கோ குறுக்கு வழிகள் ஏதும் இருக்கிறதா என்று கேட்டால் அப்படி ஏதும் கிடையாது என்பதே உண்மை.கடின உழைப்புடன், கடுமையாக பாடுபட்டால் பணத்தை நிறைய சேர்க்கலாம் என்று முந்தைய தலைமுறை ஆட்கள் சொல்லக் கேட்டிருக்கலாம்.
ஆனால் சற்று வித்தியாசமாக யோசித்தால் கடுமையாக பாடுபடாமல் கடின உழைப்பென்று ஏதும் செய்யாமல் பணத்தை சம்பாதிக்கலாம்.அது கோடி கோடியாக வருகிறதோ இல்லை அதற்கும் குறைவாக வருகிறதோ என்பது அவரவர் எடுக்கும் நடவடிக்கையைப் பொறுத்தது.
அதென்ன டெக்னிக்?
அழகாக இருந்தால் யாரையூமே ஒரு முறை திரும்பிப் பார்த்துச் செல்லத் தோன்றும்.இது இயற்கை.மிக அழகாக இருந்தால் மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்துச் செல்லத் தோன்றும்.சூப்பர் அழகாக இருந்து விட்டால் இன்னொரு முறை பார்க்கமாட்டோமா, ஃப்ரன்ட்ஸ் ரிக்வெஸ்ட் கொடுத்து விட மாட்டோமா என்று ஏங்கச் செய்யூம்.
இங்கே அழகு என்பது ஒரு துரண்டில் போல செயல்படுகிறது.
பணம் சம்பாதிப்பதற்கும் நிறைய பணத்தை கவர்வதற்கும் ஒரு துரண்டில் தேவைப்படுகிறது.
அதென்ன துரண்டில்?
இருக்கிறது.அந்த துரண்டில் உங்களுக்குள்ளேயே இருக்கிறது.உங்களுக்குத் தெரியாமலேயே இருக்கிறது.நீங்களே கூட அதை அறிந்திருக்க மாட்டீர்கள்.
அது என்ன என்று பார்ப்போம்.
நீங்கள் வெளியில் நாலு பேர் மதிக்கும்படி ஒரு பார்ட்டிக்கோ விழாவிற்கோ வேறு ஏதாவது அவூட்டிங்கிற்கோ செல்ல வேண்டுமானால் எப்படி செல்வீர்கள்.
நன்றாக உடையணிந்து பர்ஃப்யூம் அடித்துக் கொண்டு உற்சாகமாக கிளம்பி விடுவீர்கள்தானே.
இங்கே கீவேர்ட்ஸ் அதாவது குறிச்சொற்களாக இருப்பது இரண்டே வார்த்தைகள்தான்.
ஒன்று:நன்றாக.
இரண்டு:உற்சாகமாக.
ஆக நன்றாக உடையணிந்தால் (அஃப்கோர்ஸ் பாக்கெட்டில் உள்ள டெபிட் கார்டில் நிறைய பணமும் இருந்து விட்டால்) உற்சாகம் தானே வந்து விடுகிறது.
இங்கே நான் சொல்லப்போவது நன்றாக 'உடையணிந்தால்' என்பதற்கு பதிலாக நன்றாக 'மனம் அணிந்தால்' என்பதுதான்.
அதென்ன புதிதாக?
மனத்தை அணிவதா?மனம் என்ன உடை போன்று அணியக் கூடிய ஒன்றா?அப்படி இல்லைதான்.நான் சொல்ல வருவது உடையைக் கொண்டு உடலை அலங்கரித்துக் கொள்வது போல வேறு எதையோ கொண்டு 'மனதை' நன்றாக 'அலங்கரித்துக் கொள்ள' வேண்டும் என்பதுதான்.
ஒரே வார்த்தையில் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள சொல்கிறீர்கள்.அவ்வளவூதானே என்று நீங்கள் கேட்கலாம்.அப்படி இல்லை.மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள்.நம்பிக்கையோடு பாசிட்டிவ்வாக வைத்துக் கொள்ளுங்கள் என்று ஏற்கனவே ஆள் ஆளுக்கு சொல்லி விட்டார்கள்.
நான் சொல்வது-
நீங்கள் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியானால் எப்படி ஒரு மிடுக்காக இருப்பீர்களோ அதைப் போல நடிக்க வேண்டாம்.உங்கள் எதிரில் இருப்பவர்கள் உங்களைப் பார்ப்பவர்கள் இவர் ஏதோ ஒரு பெரிய ஆள் என்று நினைக்க வைப்பது போன்ற உடல்மொழியை மனதால் உருவாக்குங்கள்.
உரக்க இரைந்து பேசாதீர்கள்.கண்களில் ஒரு எனர்ஜி தெரியட்டும்.பரபரவென்று நடக்காதீர்கள்.மெதுவாக நடந்து பாருங்கள்.யார் அருகே வந்து பேசினாலும் ஏற்கனவே பலமுறை பேசியது போல உரையாடலை தொடருங்கள்.அப்புறம் எங்கே உட்கார்ந்திருந்தாலும் எதுவோ பெரிதாக உங்களுக்கு கிடைக்கப்போகிறது என்றும் அதை வாங்கிக் கொள்ள வந்திருப்பது போலவூம் அல்லது யாரோ மிகப்பெரிய ஆளான உங்களை யாரோ சந்திக்க வருவது போலவூம் அதற்காக காத்திருப்பது போலவூம் உங்களது டேப்லட் பிசியிலோ அல்லது ஸ்மார்ட்ஃபோனிலோ பிசியாக இருங்கள்.
இன்னும் சுருக்கமாக நான் உங்களுக்குச் சொல்ல வேண்டுமென்றால் உடல்மொழி(body language)என்று ஒன்று இருப்பது போல 'மனமொழி'யை(mind language)என்றும் ஒன்று இருக்கிறது.அந்த 'மனமொழி' கச்சிதமாக பயன்படுத்துங்கள்.
அப்புறம் நிஜமாகவே
நீங்களும் ஒரு கோடீஸ்வரர்தான்.
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.
விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக
(10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).புத்தகம் வேண்டுவோர் என்ற
bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to get 'top performed shares'
ConversionConversion EmoticonEmoticon