பொதுவாக ஜோதிடத்தின் அடிப்படையில் டிரேடிங் செய்யூம்போது அவரவர்கள் சுயஜாதகத்திலுள்ள கிரகங்களின் வலிமையை அறிந்து கொண்டு அதன்பிறகு கோள்சார அடிப்படையில் டிரேடிங்கை மேற்கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்காக இந்த வாரம் கும்பராசி நேயர்கள் எவ்விதம் தங்களது டிரேடிங்கை அமைத்துக் கொள்ளலாம் என்று பார்ப்போம்.ரொம்ப காலமாகவே கும்பராசிக்கார்கள் எதிலும் சரிவர செட்டிலாகாமல் ஒரு வித பரிதவிப்பிலேயே காலம் தள்ளிக்கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.இந்த வாரம் அவர்களுக்கு டிரேடிங் செய்ய அருமையான வாரமாக இருக்கிறது.
கோள்சாரப்படி இரண்டு பரிவர்த்தனைகள் காணப்படுகிறது.ஒன்று பாசிட்டிவ்வாகவூம், இன்னொன்று நெகட்டிவ்வாகவூம் உள்ளது.
ஒன்பதாம் இடத்துக்குரிய துலாமின் அதிபதியான சுக்கிரனும் ராசிநாதனான சனியூம் பரிவர்த்தனையில் இருக்கிறார்கள்.இது ஒரு அருமையான பரிவர்த்தனையாகும்.இதை பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம்.
மூன்றாம் இடத்துக்குரிய மேஷத்தின் அதிபதியான செவ்வாயூம், எட்டாம் இடத்துக்குரிய கன்னி ராசியின் அதிபதியான புதனும் பரிவர்த்தனையில் இருப்பது நெகட்டிவ்வாக பரிவர்த்தனை.இது புதன் திசையோ அல்லது வேறு திசையில் செவ்வாய் புத்தியோ நடப்பவர்களுக்கு பொருந்தாது.அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.Click here to go main website for free NaMo tips
நான் அறிந்தவரையிலும் நானே டிரேடிங்கில் கண்டுபிடித்த வெற்றிகரமான ஜோதிட உத்திகளில் ஒன்றான முறை என்ன தெரியூமா?நல்லவிதமாக கிரகங்கள் அமர்ந்திருக்கின்றனவா.அவற்றைக் கொண்டு லாங்(Long) போய் விடுங்கள்.கெட்ட நிலைமையில் கிரகங்கள் இருக்கிறதா.அவற்றைக் கொண்டு ஷார்ட்(Short selling)செல்லிங் செய்து விடுங்கள்.இது பொது விதி.ஒவ்வொருவர் ஜாதகத்திற்கேற்ப மாறுபடும்.
இப்போது விஷயத்திற்கு வருவோம்.
முதலில் சுக்கிரன்-சனி யோக பரிவர்த்தனையை எடுத்துக் கொள்வோம்.
சனிக்கிழமை மார்க்கெட் கிடையாது.அதனால் சுக்கிர வாரமான வெள்ளிக்கிழமை 9.30 முதல் 10.00மணிக்குள் (அதாவது சனி ஹோரையில்) சுக்கிரன் காரகத்துவம் வகிக்கும் பங்குகளை டெலிவரிக்காக வாங்கிக்கொள்ளலாம்.
சிம்ப்பிளான ப்ளான் இதுதான்.
வெள்ளிக்கிழமை-சனி ஹோரையிலும் சனிக்கிழமை-சுக்கிரஹோரையில் டிரேடிங் செய்ய வேண்டும்.ஆனால் சனிக்கிழமை மார்க்கெட்டிற்கு விடுமுறை.Click here to go to main website for intraday updates & trading tips
அதனால் ஒவ்வொரு நாளும் (திங்கள் முதல் வெள்ளி வரை) சுக்கிரஹோரையையூம் சனி ஹோரையையூம்(கவனிக்கவூம்:மார்க்கெட் நேரமான 9.30 முதல் 3.30க்குள் வரும் ஹோரைகள் மட்டுமே) பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சுக்கிரஹோரையில் என்றால் சனி காரகத்துவம் வகிக்கும் பங்குகளில் லாங் போகலாம்.வாங்கி வைக்கலாம்.சனி ஹோரையில் என்றால் சுக்கிரன் காரகத்துவம் வகிக்கும் பங்குகளில் லாங் போகலாம்.வாங்கி வைக்கலாம்.
இப்போது நெகட்டிவ்வான பரிவர்த்தனைக்கு வருவோம்.
அதாவது செவ்வாய்-புதன் பரிவர்த்தனை.Click here to go to main website for market updates
பொதுவாகவே செவ்வாயூம், புதனும் ஒருவரது ஜாதகத்தில் சேர்ந்திருந்தால் கபட நாடகம் ஆடி அவர் பெரும் பொருள் சேர்த்து விடுவார்.திடீரென அரசியலுக்குள் நுழைந்து மந்திரியாகி பெரும்பொருள் சேர்த்த ஒருவரது ஜாதகத்தில் இது போன்ற அமைப்பு உள்ளது.
விஷயத்திற்கு வருவோம்.
செவ்வாய்கிழமை புதன் ஹோரையிலும், புதன்கிழமை செவ்வாய் ஹோரையிலும் மறந்தும் லாங் போகாமல் அதற்கு பதிலாக ஷார்ட் செல்லிங் செய்ய வேண்டும்.ஈக்விட்டி என்றால் இன்ட்ரா டேயிலும் டெரிவேட்டிவ் என்றால் இன்ட்ரா டே அல்லது பொசிஷனிலும் செய்ய வேண்டும்.ஆஃப்ஷன் என்றால் கால் வாங்குவதை விட புட் வாங்குவது நல்லது.
இது பொதுவான விதி.
சனி-சுக்கிரனுக்கு சொன்னது போலவே தினமும் செவ்வாய் ஹோரையில் புதன் காரகத்துவம் உள்ள பங்குகளையூம் புதன் ஹோரையில் செவ்வாய் காரகத்துவம் உள்ள பங்குகளையூம் ஷார்ட் செல்லிங் செய்து அடித்து துவைத்து தள்ளலாம்.
ஜோதிடம் என்பது பங்குச்சந்தைக்கு மிகவூம் உதவக் கூடிய ஒன்று.அதை சரியாகக் கையாளத் தெரிந்து கொண்டால் நீங்கள் பணத்தை சம்பாதிக்க வேண்டாம்.பணம் அதுவாகவே வந்து உங்களிடம் உட்கார்ந்து கொள்ளும்.சும்மா இல்லை கட்டுக் கட்டுக்களாக.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get market updates & trading tips
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.
விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக
(10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon