தங்கம்!
இந்த மஞ்சள் உலோகத்தின் கவர்ச்சி அவ்வளவூ அலாதியானது.காரணம் இதை எப்போதும் வாங்கலாம்.எப்போதும் விற்று பணமாக்கலாம்.இதன் விலை இறங்கினாலும் மற்ற பொருட்கள் போல அதலபாதாளத்தில் விலையிறங்காது என்பதால் ஒரு பாதுகாப்பான முதலீடாகவூம் கௌரவத்தின் அடையாளமாகவூம் கருதலாம்.
கமாடிட்டி சந்தையில் (Click here to read how to make Rs 163/- in to Rs 1 Crore in 365 days)தங்கத்தில் மினிலாட்டோ மெகாலாட்டோ எடுப்பவர்கள் எல்லாரும் எப்போதுமே சம்பாதித்துக் கொண்டே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.ஒரு முறை லாபம் வந்தால் நான்கு முறை நஷ்டம் வந்திருக்கும்.ஆனால் தாங்கள் ஒரு முறை பெற்ற லாபத்தையே வெளியில் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.அதைக் கேட்கிற மற்றவர்களும் நாமும் கமாடிட்டி செய்வோம் என்று கொண்டு போய் பணத்தை கொட்ட அனுபவம் இல்லாததாலும் டிரேடிங் டெக்னிக் தெரியாததாலும் பணத்தை ஒரே நாளில் இழந்து விடுவார்கள்.
கமாடிட்டி டிரேடிங் செய்யாமலே தங்கத்தில் எப்படி லாபம் சம்பாதிக்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.இது போன்ற நிறைய டெக்னிக்குகளை எனது ஒருநாள் பங்குச்சந்தை பயிற்சி வகுப்பிலும் தபால்வழிப் பயிற்சியிலும் சொல்லிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
உதாரணமாக ஒரு லட்ச ரூபாயை (இதன் மடங்கில் மேலும் பல லட்ச ரூபாய்களையூம் நீங்கள் முதலீடு செய்யலாம்.அது உங்களது வசதியூம் விருப்பமும்) கமாடிட்டியில் முதலீடு செய்ய விரும்புவதாக வைத்துக் கொள்வோம்.
முதல் விதி:கமாடிட்டியில் முதலீடு செய்யாதீர்கள்.
இரண்டாவது விதி:அந்த ஒரு லட்சரூபாய் உங்களது வங்கி சேமிப்புக் கணக்கிலேயே இருக்கட்டும்.தங்கம் விலை வெளி மார்க்கெட்டில் குறைகிறதா என காத்துக் கொண்டே இருங்ககள்.முடிந்தால் உங்களுக்கு தெரிந்த ஒரு நகைக்கடைக்காரரை தங்கம் விலை குறையூம்போது தகவல் கொடுக்கச் சொல்லி வைத்திருங்கள்.
விலை குறையட்டும்.
ஒரு லட்ச ரூபாய்க்கு அப்படியே தங்க நகைகளாக -கல் வைக்காத பெரிதாக நுணுக்கமான டிசைன்கள் இல்லாத மிகக் குறைந்த சேதாரம் உள்ள நகைகளாக வாங்கி வாருங்கள்.
வாங்கிய நகையை வங்கியில் அடமானமாக வைத்து நகை;கடன் வாங்குங்கள்.கடனாக வாங்கிய பணத்தில் (85சதவீதம் வரை நகை மதிப்பில் கடன் கொடுப்பார்கள்) மீண்டும் இதே போன்று குறைந்த சேதாரமுள்ள நகையை வாங்கி வங்கி லாக்கரில் வைத்து விடுங்கள்.
இதில் மிக மிக முக்கியமான விஷயம் அதன்பின் ஒவ்வொரு மாதமும் வட்டியை கட்டிக்கொண்டே வாருங்கள்.இப்படி வட்டி கட்டுவதை டெரிவேட்டிவ்வில் கமாடிட்டி டிரேடிங்கில் எம்-டு-எம்(M to M:mark to market)கொடுப்பதுடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.
மறுபடியூம் உங்களது நகைக்கடைக்காரரை தங்கம் விலை உயரும்போது தகவல் கொடுக்கச் சொல்லுங்கள்.அவர் தகவல் கொடுத்ததும் நீங்கள் வாங்கி லாக்கரில் வைத்திருக்கும் தங்க நகையை விற்று விடுங்கள்.அதன்பின் விற்று வரும் பணத்தில் நகைக்கடனை அடைத்து விட்டு மீதம் எவ்வளவூ இருக்கிறது என்று பாருங்கள்.
அனுபவத்தில் கண்ட உண்மை (Click here to read success stories in money making)இது.
சுமார் மூன்று மாத காலத்தில் 10 சதவீதத்திற்கு குறையாத நிகர லாபம் கிடைத்திருக்கும்.அதாவது ஒரு மாதத்திற்கு 3.3சதவீத லாபம்.இதை ஒரு வருடத்திற்று ஆன்லுவலைஸ்(annualize)செய்து பார்த்தால் வருடத்திற்கு 40 சதவீத வருமானம்.அதுவூம் ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான வருமானம்.
இது உட்கார்ந்த இடத்தில் பணத்தை அதுவாகவே பணம் சம்பாதிக்க வைக்கும் ஸ்ட்ராட்டஜி.இதையே வேறு மாதிரி செய்யலாம்.
சற்று சிறிய வயதிலேயே இந்த ஆட்டத்தை ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் லாபமாக வருகிற பணத்திற்கு தங்க காசுகளாக வாங்கி சேர்த்துக் கொண்டே வாருங்கள்.பின்னால் பல ஆண்டுகள் கழித்து உங்களது குழந்தைகளுக்கு சேர்த்து வைத்த தங்கக்காசுகளிலிருந்து நகை பண்ணிப் போட்டு விடலாம்.
செய்து பாருங்கள்.
இது போன்ற அருமையான டெக்னிக்குகள் (Click here to get different strategies in money making)மற்றும் பணத்தின் மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு பணத்தை சம்பாதிப்பதை ஒரு கலையாக செய்வதற்கான டெக்னிக்குகளை எனது "மனம் போல் பணம்" புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.
பாக்யா வாரஇதழில் இரண்டு ஆண்டுகள் தொடராக வெளிவந்த இந்த தொடர் இப்போது 10வது பதிப்பாக புத்தகமாக வெளிவந்திருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555 மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் மின்னஞ்சலில் (bullsstreet.com@gmail.com)தொடர்பு கொள்ளுங்கள்.கொரியர் செலவூ இலவசம்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get 'today's top trading shares'
ConversionConversion EmoticonEmoticon