பங்குச்சந்தையில் தொடர்ந்து வெற்றிகரமாக பணத்தை சம்பாதித்துக் கொண்டிருப்பவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?அவ்விதம் வெற்றிகரமாக பணத்தை சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் சந்தையின் ஏற்ற-இறக்கம் குறித்து அலட்டிக்கொள்ளாதவர்களாகவோ டெக்னிக்கல் சார்ட்டுகள் வைத்து பந்தாவாக டிரேடிங் செய்யாதவர்களாகவோ லாபம் வருகிறதா சரி வரட்டும்.நஷ்டம் வரும்போல் தெரிகிறதா சரி பரவாயில்லை என்று தொடர்ந்து தங்களது பயணத்தை நடத்திக் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.
ஆனால் இது போல் சிலர்தான் இருப்பார்கள்.பெரும்பாலும் டென்ஷன் தவிப்பு ஆசை அவசரம் என்று பரபரவென அலையூம் அன்பர்கள் மட்டுமே பங்குச்சந்தையில் பெரும் பணத்தை இழந்தவர்களாக இருப்பார்கள்.
எனது ஒருநாள் பயிற்சி வகுப்பிலும் தபால்வழிப் பயிற்சியிலும் சேர்கின்ற இது போன்ற அன்பர்களிடம் நான் பேசிப்பார்த்தவரை இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிற நஷ்டம் என்பது ஜாதக ரீதியாகவூம் பேராசையூடன் தவறான வழிகாட்டலால்தான் ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்து கொண்டிருக்கிறேன்.பொதுவாக இவர்கள் தங்களது பணத்தை சரியான மேலாண்மை செய்யத் தெரியாதவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மை.
இவர்களுக்காக ஒரு பரிகாரத்தை கண்டுபிடித்து அதை செயல்படுத்தியூம் இருக்கிறேன்.இந்த பரிகாரம் சுலபமானது.வெற்றிகரமாக நஷ்டத்திலிருந்து மீட்கக் கூடியது.
இது அதிகம் செலவில்லாத பரிகாரம்.
நீங்களும் விரும்பினால் செய்து பாருங்கள்.
இதுவரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் டிரேடிங் செய்தவராக இருக்கலாம்.ஈக்விட்டி, ஆஃப்ஷன், நிஃப்டி, இன்ட்ரா டே, டெலிவரி என்று எந்த முறையில் வேண்டுமானாலும் டிரேடிங் செய்திருக்கலாம்.
இனி நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.
நீங்கள் எப்போது ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கினாலும் விற்றாலும் வேறொரு சிறிய விலையில் கிடைக்கக் கூடிய பங்கை 33 என்ற எண்ணிக்கையில் வாங்கி உங்களது டிமேட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
உதாரணமாக டாடாமோட்டார்ஸ் பங்கினை ரூ 412 என்ற விலையில் 100 பங்குகள் டெலிவரிக்காகவோ அல்லது இன்ட்ரா டே டிரேடிங்கிற்காகவோ வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அப்போது வேறு ஏதாவது ஒரு சிறிய பங்கை- அதாவது பென்னி ஸ்டாக்ஸ்(Penny stocks)என்று அழைக்கப்படும் சிறிய பங்கை 33 என்ற எண்ணிக்கையில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.இந்த 33 என்ற எண்ணிக்கையில் வாங்கிய பங்குகளை விற்கவே வேண்டாம்.அது பாட்டுக்கு அப்படியே வருடக்கணக்கில் டிமேட் கணக்கில் கிடக்கட்டும்.
இப்போது நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம்.
ஏன் 33 என்ற எண்ணிக்கை.
ஏனென்றால் 33 என்பது நியூமராலஜிப்படி ராசியான எண்.மகாலட்சுமியின் அருளை கொண்டு வரக்கூடிய எண்.அதனால்தான் 33 என்ற எண்ணிக்கையில் வாங்கி வைக்கச்சொல்கிறேன்.
இப்போது இன்னொரு கேள்வியை நீங்கள் கேட்கலாம்.
இப்படி 33 பங்காக வாங்கினால் இது ஒரு கூடுதல் செலவாக இருக்கிறதே.ஒவ்வொரு முறையூம் ஒரு டிரேடிங் ஆர்டர் போடும்போது 33 என்ற எண்ணிக்கையில் பங்குகளை வாங்கிக் கொண்டிருக்க வேண்டுமா?
கூடுதல் செலவூதான்.ஆனால் இந்த செலவினை மிக மிக குறைந்த செலவாக அமைத்துக் கொள்ள முடியூம்.அதனால்தான் பென்னி ஸ்டாக்காகப் பார்த்து வாங்கச் சொல்கிறேன்.
நன்றாக அலசி ஆராய்ந்து ஒரு பென்னி ஸ்டாக்கை (சிறிய விலையூள்ள பங்கு) கண்டுபிடியூங்கள்.அது வர்த்தகமாகிற விலை ஒரு ரூபாய்க்குள் இருக்கட்டும்.
ஒரு ரூபாய்க்குள் இன்றைக்கு வர்த்தகமாகிற சில பங்குககள் சில ஆண்டுகள் கழித்து ஐம்பது ரூபாய் நுரறு ரூபாய் என்று விலையேறக் கூடிய வாய்ப்புகள் சந்தையில் இருக்கிறது.அது போன்ற சில நல்ல பங்குகள் வலுவான அடிப்படை அம்சங்களுடன்(fundamental factors)கிடைக்கின்றன.
எனவே 33 பங்குகளை ரூ 1 என்ற விலைக்கு வாங்கினால் உங்களது கூடுதல் செலவூ ரூ 33 மட்டும்தான் ஆகிறது.இதை ஒவ்வொரு டிரேடிங் ஆர்டர் போடும்போதும் வாங்கிக் கொண்டே இருக்க வேண்டாம்.
ஒரே ஒரு பென்னி ஸ்டாக்கை என்றைக்கெல்லாம் நீங்கள் டிரேடிங்கில் அமர்கிறீர்களோ அன்றைக்கெல்லாம் ஒரு நாளைக்கு 33 பங்குகள் என்ற எண்ணிக்கையில் சேர்த்துக் கொண்டே வாருங்கள்.இந்த பங்குகளை விற்க வேண்டாம்.
இதுதான் பரிகாரம்.
ஒரு நாளைக்கு டிரேடிங்கில் உட்கார்ந்தால் கூடுதலாக ரூ 33 மட்டுமே செலவூ செய்கிறீர்கள்.அதுவூம் செலவல்ல.சரியாக யோசித்துப் பார்த்தால் ரூ 33ஐ முதலீடுதான் செய்கிறீர்கள்.ஒரு பக்கம் நீங்கள் பாட்டுக்கு டிரேடிங் செய்து கொண்டே இருங்கள்.இன்னொரு பக்கம் 33 பங்குகளாக சேர்த்துக் கொண்டே வாருங்கள்.
சில வருடம் கழித்துப் பார்த்தால் ஒரு ரூபாய் என்ற விலையில் வாங்கிக் போடுகிற பங்குகளே உங்களுக்க பெரும் பணத்தை தரும்.
33 என்ற வசீகர எண்ணின் அடிப்படையில் உள்ளே பாசிட்டிங் சக்தியை டிமேட்டில் செலுத்திக் கொண்டே இருப்பதால் உங்களது கடந்த கால நஷ்டத்தின் தாக்கம் குறைந்து லாபகரமான பாதையில் திரும்பி விடுவீர்கள்.
அப்புறமென்ன..தொட்டதெல்லாம் லாபம்தான்.பணம்தான்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get 'top traded shares'
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.
விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்)
.பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).புத்தகம் வேண்டுவோர் என்ற
bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon