முன்பெல்லாம் இல்லத்தரசிகளிடம் புழங்குகிற பணத்தில் மிச்சம் மீதி பிடித்ததை சம்படத்திலும் வேறு டப்பாவிலும் சமையலறையில் போட்டு வைத்திருப்பார்கள்.அவற்றை என்ன செய்கிறார்கள் என்பது பெரும் ரகசியமாகவே இருக்கும்.ஆனால் ஏதாவது ஒரு இக்கட்டான சமயத்தில் பணம் வேண்டுமென்றால் உடனே இரண்டாயிரம் மூன்றாயிரம் என்று புரட்டிக்கொடுத்து விடுவார்கள்.
முன்பெல்லாம் நகை சீட்டு போடுவார்கள்.பாத்திரச் சீட்டு போடுவார்கள்.இப்போது அதற்கெல்லாம் நேரமில்லை.அப்படியே கிளம்பினாலும் டிராஃபிக் நெரிசலில் நகைக்கடைக்கோ பாத்திரக் கடைக்கோ போய் வருவதென்பது அலுப்பான விஷயமாக இருக்கிறது.தெரிந்தவரிடமோ அக்கம் பக்கத்திலோ சீட்டு போடலாம் என்றால் அதிலும் பயமாக இருக்கிறது.
பங்குச்சந்தைக்கு வாருங்கள் என்றால் இந்த வார்த்தையைக் கேட்டதுமே பணத்தை இழக்கப் போகிறௌம் என்ற நினைப்புதான் எல்லாரது மனதிலும் ஏற்படுகிறது.
பங்குச்சந்தையில் பெரிதாக பணத்தை போட வேண்டாம்.ஒரே ஒரு டிமேட் கணக்கு மட்டும் துவங்கிக்கொள்ளுங்கள்.அதன்பின் விளையாட்டாக உங்களது மிச்சம் மீதி இருக்கிற பணத்தை போடுங்கள்.அதைக் கூட ஒரே தவணையாகப் போடாமல் நீங்களே ஒரு ஆன்லைன் கணக்கு துவக்கிக் கொண்டு அதில் பின்வருமாறு ஒரு விளையாட்டு போல போட்டுக் கொண்டே வாருங்கள்.
இப்படி விளையாட்டு போல நீங்கள் பணம் போடுவதற்கு பெரிய நிறுவனங்களில் ஷேர்களை எடுத்துக் கொள்ளாதீர்கள்.ரூ 10லிருந்து ரூ 20வரை விலையூள்ள பங்குகளை மட்டுமே தேர்ந்தெடுத்து அதில் பங்குகளை "விளையாட்டாக" வாங்கிக் கொண்டே வாருங்கள்.
ஒரு வருடத்தை 12 மாதங்களாகப் பிரித்துக் கொள்வோம்.ஒவ்வொரு மாதமும் ஒரு கம்பெனியின் ஷேர்கள் என்று கணக்கு.இந்த ஷேர்களின் விலை ரூ 20க்குள் இருக்க வேண்டும்.உதாரணத்திற்கு முதல் மாதம் யூனிடெக் கம்பெனியின் ஷேரை வாங்குவதாக வைத்துக் கொள்வோம்.
யூனிடெக்கின் தற்போதைய பங்கு விலை ரூ 15.45 பைசா மட்டுமே.
மாதம் 1:
1ம் தேதி ஒரே ஒரு பங்கை மட்டும் வெறும் ரூ 15.45 பைசா மட்டும் செலவழித்து நீங்களே உங்களது ஆன்லைன் டிரேடிங் கணக்கு வழியாக வாங்கி கணக்கில் வரவூ வைத்து விடுங்கள்.
2ம் தேதி இரண்டே இரண்டு பங்கை மட்டும் சுமார் ரூ 15.45க்கோ அல்லது அதையொட்டிய அன்றைய விலையில் வாங்கி இதே போல் வைத்து விடுங்கள்.
3ம் தேதி மூன்று பங்குகளை வாங்குங்கள்.
4ம் தேதி 4 பங்குகள்.
5ம் தேதி 5 பங்குகள்.
6ம் தேதி 6 பங்குகள்
7ம் தேதி 7 பங்குகள்
8ம் தேதி 8 பங்குகள்
9ம் தேதி 9 பங்குகள்
10ம் தேதி 10 பங்குகள்
11ம் தேதி 11 பங்குகள்
12ம் தேதி 12 பங்குகள்
13ம் தேதி 13 பங்குகள்
14ம் தேதி 14 பங்குகள்
15ம் தேதி 15 பங்குகள்
16ம் தேதி 16 பங்குகள்
17ம் தேதி 17 பங்குகள்
18ம் தேதி 18 பங்குகள்
19ம் தேதி 19 பங்குகள்
20ம் தேதி 20 பங்குகள்
21ம் தேதி 21 பங்குகள்
22ம் தேதி 22 பங்குகள்
23ம் தேதி 23 பங்குகள்
24ம் தேதி 24 பங்குகள்
25ம் தேதி 25 பங்குகள்
26ம் தேதி 26 பங்குகள்
27ம் தேதி 27 பங்குகள்
28ம் தேதி 28 பங்குகள்
29ம் தேதி 29 பங்குகள்
30ம் தேதி 30 பங்குகள்
31ம் தேதி இருந்தால் 31ம் பங்குகள்.
தொடர்ந்து அடுத்த மாதம் வேறு சிறு பங்கிற்கு மாறிவிடுங்கள்.இது போல செய்து கொண்டே வாருங்கள்.ஒரு வருடம் கழித்து பங்குகளை விற்பது பற்றி பார்த்துக் கொள்ளலாம்.இந்த ஒரு வருட காலத்தில் சந்தை ஏறினாலும் இறங்கினாலும் அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ள வேண்டாம்.
30 நாட்கள் இது போல ஒரு பங்கை வாங்கினால் ஒரு மாதத்திற்கு 450 பங்குகளை வாங்கிக் குவிக்க முடியூம்.இது போல ஒரு வருடத்திற்கு 5617 பங்குகள் உங்களிடம் இருக்கும்.இதில் 12 வெவ்வெறு கம்பெனிகளின் பங்குகள் வெவ்வேறு விலைகளில் இருக்கும்.எப்படிப் பார்த்தாலும் உங்களது சராசரி விலை ஒரு பங்கிற்கு ரூ 15 என்று வைத்துக் கொண்டால்(பிராக்டிக்கலாக வேறு சராசரி விலைதான் வரும்.இது சும்மா புரிந்து கொள்வதற்காக ஒரு உதாரணத்திற்காக) உங்களது மொத்த பணத்தின் மதிப்பு அதாவது அத்தனை பங்குகளையூம் விற்கும்போது கிடைக்கும் மொத்த (தோராயமாக) ரூ 84255 ஆக இருக்கும்.அதாவது ஒரு லட்சத்திற்கும் குறைவான தொகை.ஒரு வேளை உங்களது சராசரி விலை ஒரு பங்கிற்கு ரூ 17 ஆக இருந்தால் மொத்த விற்று வரவூத் தொகை ரூ 85489 ஆக அதாவது சுமார் ஒரு லட்சமாக இருக்கும்.
குறிப்பு:இந்த முறையில் ஒவ்வொரு நாளும் பங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க முதலீட்டுத் தொகையூம் அதிகரிக்கும் என்பதால் மாதக்கடையில் அதிக முதலீட்டுத் தொகை தேவைப்படும் என்பதால் இந்த திட்டத்தை 1ம் தேதி ஆரம்பிக்காமல் 20 தேதி முதல் ஆரம்பித்து அடுத்த மாதம் 19ம் தேதி வரை செய்தால் மாதக்கடைசியில் பணப்பற்றாக்குறை கையைக் கடிக்காது.
Click here to get the list of 'top performing shares'
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.
விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக
(10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).புத்தகம் வேண்டுவோர் என்ற
bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
1 comments:
Click here for commentsI like your blog.
I read it purely for entertainment pleasure.
Its like seeing a Captain film. :-)
ConversionConversion EmoticonEmoticon