ஆரம்பமே அபசகுனமா இருக்கிறதே புதுவருஷம் வரப்போகிறதும் அதுவூமாக என்று நினைக்காதீர்கள்.நான் சொல்ல வருவதே வேறு.
பணத்தை மிக மிக சரியாக கையாண்டால் அது நம்மை உயர்த்தும்.பணத்தைப் பற்றி சொல்லும்போது பணம் என்பது கெட்டுப்போன கள்ளைக் குடித்த கிறுக்குத்தனமான குரங்கு என்று சொல்லலாம்.அதனிடம் ஒரு பொருளைக் கொடுத்தால் என்ன செய்யூம்.அந்த பொருளே நீங்களாக இருந்தால் நிலைமை என்ன ஆகும்.ஆகவே பணத்தை நம் வழிக்கு கொண்டு வர வேண்டும்.அதற்கு முன்பாக சில முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.
திருச்சியில் நான் சிறிய வயதில் இருந்தபோது அங்கே ஒரு மனிதரை அடிக்கடி பார்க்கும்போதெல்லாம் வியந்து போவேன்.அவர் ஆண்டார்தெருவில் இருப்பார்(பேச்சு வழக்கில் ஆண்டாள்தெரு,ஆனால் தெருவின் பெயர் ஆண்டார் தெருதான்).திருச்சியில் பொதுவாக மூன்று பகுதிகளில் உள்ள ஆட்கள் ரொம்ப விபரமானவர்கள்.ஆண்டார்தெரு, வரகநேரி அப்புறம் உறையூர் இந்த பகுதிகளில் உள்ள ஆட்கள் பண விஷயத்தில் விபரமானவர்கள்.
நான் சொல்லும் ஆசாமியின் பெயர் சிவா.அவரை ஆசாமி என்று சொல்வது தவறு.அப்போதே அவரது வயது எழுபது இருக்கும்.அவர் யாரிடம் பணம் வாங்கினாலும் அதை அவர் கையாள்வதே அலாதியாக இருக்கும்.நுரறு ரூபாய்தான் வாங்கியிருப்பார்.அந்நாளைய நுரறு ரூபாய் இன்றைய பத்தாயிரத்திற்கு சமம்.அந்த நுரறு ரூபாயூம் பத்து பத்து ரூபாய் தாள்களாக இருக்கும்.ஒவ்வொரு பத்து ரூபாயையூம் அவர் எண்ணும்போது ஒரு லட்சம் ரெண்டு லட்சம் மூணு லட்சம்...என்றுதான் உரக்க சொல்லிக்கொண்டே மிகவூம் சந்தோஷமாக மெதுவாக வெற்றிலையை எடுத்து மடியில் வைத்து விரலால் தேய்ப்பார்களே அது போல எண்ணுவார்.சரக் சரக்கென்று பரக்க பரக்க ரூபாய்நோட்டுக்களை எண்ண மாட்டார்.
அவரது எண்ணத்தை பாருங்கள்.
பத்து ரூபாயை லட்ச ரூபாயாக பாவிக்கிறார்.அப்போது ஒரு கோடி என்பதெல்லாம் கற்பனைக்கும் எட்டாத உயரம்.அதனால் லட்சம்!
இது போல பணத்தை மென்மையாக ஆர்வமாக ஆசையாக கையாள்பவர்களை விட்டு பணம் போகாது.ஒரு குழந்தையை மென்மையாகக் கையாண்டால் அது நம் மடியை விட்டுப் போகாது.அதை விட்டு அந்த குழந்தைக்கு தலை வாரி விடுகிறேன் என்று வரட்..வரட்..என்று சீப்பால் இழுத்தால் ஓடியே போய் விடும்.பணமும் அது போலத்தான்.
இப்போது சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன்.
கடன் வாங்குங்கள் என்று சொல்கிறேன்.எதற்காக? அவசரத் தேவைக்காக இல்லை.தொழில் தொடங்குவதற்காக இல்லை.பின் வேறெதற்கு?
ச்சும்மா!
சும்மா வாங்கி வையூங்களேன்.
அட வாங்கினால் மாதாமாதம் வட்டி கட்ட வேண்டுமே?
ஆமாம்.மாதாமாதம் வட்டியையூம் அசலையூம் ஒழுங்காகக் கட்டிவிடுங்கள்.ஆனால் கடன் வாங்குங்கள்.எதற்காக என்பதை பிறகு சொல்கிறேன்.இப்போது எப்படி கடன் வாங்கலாம் என்று பார்ப்போம்.
வெளி ஆட்களிடமோ தவணைக்காரர்களிடமோ கனவில் கூட கடன் வாங்கி விடாதீர்கள்.வங்கிகளில் அதுவூம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில்(ஒரே ஓரு வங்கியில்தான்.ஒரு வங்கிக்கு தெரியாமல் இன்னொரு வங்கியில் வாங்கும் ஜேப்படி வேலையெல்லாம் நடக்காது.சிபில் கோடு இருக்கிறது.கவனம்) வாங்குங்கள்.
எவ்வளவூ வாங்கலாம்.
ஒரு வங்கியின் மேனேஜர் எந்த ஆவணமும் இல்லாமல் தனிநபர் கடனாக ஐம்பதாயிரம் வரை ஜஸ்ட் லைக்காக பத்து நிமிடத்தில் கடன் கொடுக்க வங்கிகளில் வசதியூம், சட்டமும் இருக்கிறது,வட்டி கொஞ்சம் அதிகம்தான்.வருடத்திற்கு 13.50 சதவீதம் வரை வரும்.
ஐம்பதாயிரம் வாங்காதீர்கள்.
சும்மா பத்தாயிரம் கேட்டுப் பாருங்கள்.உடனே தருவார்கள்.வாங்குங்கள்.அதை அந்த வங்கியிலேயோ அல்லது வேறு வங்கியிலோ பிக்சட் டெபாசிட்டில் போட்டு விடுங்கள்.வட்டியையூம் அசலையூம் மட்டும் ஒரு வருட காலத்தில் கட்டிக்கொண்டே வந்து கணக்கை முடித்து விடுங்கள்.நீங்கள் டெபாசிட் செய்த பணத்திற்கு 8 சதவீத வட்டி கிடைக்கும்.நீங்கள் கட்டிய வட்டி 13.5 சதவீதம்.ஆக நிகர நஷ்டம் 5.5சதவீதம்.இதை பணமாக கணக்கிட்டால் ரூ550 வரை நஷ்டம்.இதை 12ஆல் வகுத்தால் ஒரு மாதத்திற்கு ரூ 45.83 நஷ்டம்.இதை 30ஆல் வகுத்தால்(31ம்தேதியை கணக்கில் கொள்ளவில்லை) ஒரு நாளைக்கு ரூ 1.527 அதாவது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஒன்னரை ரூபாய் நஷ்டம்.ஒரு பிச்சைக்காரருக்கு நாள்தோறும் தர்மம் போட்ட மாதிரி என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
இதனால் என்ன லாபம்.
ஒரே லாபம்தான்.
நீங்கள் மிகவூம் 'நாணயமானவர்" என்ற பெயர் கிடைக்கும்.நீங்கள் நாணயமானவர் என்ற இந்த பெயர் வங்கியின் பதிவேட்டில் அழுத்தமாக எழுதப்பட்டு விடும்.இதை ஒவ்வொரு வருடமும் செய்து கொண்டே வாருங்கள்.ஏன் இப்படி செய்ய வேண்டுமென்றால் திடீரென்று ஒரு அவசரத் தேவை அல்லது புதிதாக ஒரு தொழில் தொடங்க வேண்டுமென்று ஐடியா வருகிறது.வெளிநாட்டில் வேலை கிடைத்திருக்கிறது.அங்கே செல்வதற்கான பயணச் செலவிற்கு பணம் தேவை.அல்லது ஒரு வண்டி வாங்கி வாடகைக்கு விடலாம் என நினைக்கிறீர்கள்.வீட்டை விரிவூபடுத்தி கட்ட நினைக்கிறீர்கள்.இது போன்ற ஏதாவது ஒரு தேவைக்காக பணம் தேவை என்று போய் வங்கியில் நிற்கும்போது-
"அட நீங்களா..வாங்க வாங்க சார்"என்பார் வங்கியின் மேனேஜர்.
அப்போதே நமது 'வேல்யூ' என்ன என்று தெரிந்து விடும்.
ஆக உங்களை ஒரு 'நாணயஸ்தர்" என்று விளம்பரப்படுத்திக்கொள்வதற்கு ஒரு நாளைக்கு ஒன்னரை ரூபா செலவழித்தால் என்ன தப்பு?
செய்து பாருங்கள்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get market updates & stock tips
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.
விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).புத்தகம் வேண்டுவோர் என்ற
bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon