கதவை திற காசு வரட்டும்-10
பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை இருக்குமென்று சொல்ல முடியாது.நான் அறிந்தவரை இரண்டே பிரிவினர்தான் சந்தையில் இருக்கிறார்கள்.ஒரு அப்பாவி முதலீட்டாளர்கள்.இன்னொன்று சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் டிரேடர்கள்.இதில் இரண்டாவது பிரிவினரைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம்.சந்தை இறங்கினாலும் ஏறினாலும் சைடுவாக்கில் படுத்துக் கொண்டே நகர்ந்தாலும் அவர்கள் காசு பார்த்து விடுவார்கள்.
பெரும் ஆசையூம் கனவூம் கொண்ட இந்த அப்பாவி முதலீட்டாளர்களால்தான் பங்குச்சந்தையே இயங்கிக்கொண்டிருக்கிறது.இதில் என்ன ஒரு வருத்தமான விஷயம் என்றால் எப்போது ஒரு வேக ஓட்டம் அதாவது ராலி(rally) வந்தாலும் இவர்களால் அதில் கலந்து கொள்ள முடிவதில்லை.காரணம் இவர்கள் சாதா பங்குகளை வாங்கி சோர்ந்து போயிருப்பார்கள்.சந்தையில் என்னென்னவோ பங்குகள் எல்லாம் ஏறிக்கொண்டிருக்கும்.இவர்கள் வாங்கி வைத்திருக்கிற பங்குகள் மட்டும் கிணத்தில் போட்ட கல்லைப் போல அப்படியே உட்கார்ந்திருக்கும்.
இவர்கள் அப்படியே உன் குத்தமா என் குத்தமா என்று பாடிக்கொண்டே அமர்ந்திருப்பார்கள்.இது ஏன் இப்படி நேர்கிறது.இது யாருடைய தவறு என்று பார்த்தால் இரண்டே காரணம்தான் சொல்ல முடியூம்.
முதல் காரணம் ஜோதிடரீதியாகப் பார்க்க வேண்டும்.அவரது ஜாதகத்திலுள்ள கிரகங்களின் உதவியை அவர் சரியாக பெற்று டிரேடிங் செய்யவில்லை எனலாம்.ஆனால் இதை ஒரு காரணமாக பொதுவெளியில் கூற முடியாது.பெரும்பாலானவர்களுக்கு ஜோதிடம் மீது அவ்வளவூ நம்பிக்கை கிடையாது.
இரண்டாவது காரணம் அந்த நபரேதான்.அந்த நபரின் மனமேதான்.மனதிலுள்ள நம்பிக்கையூம் அவநம்பிக்கையூம்தான் இதற்கு காரணம்.Click here to go to main website to get trading tips
காலையில் சந்தை துவங்குகிறது என்று வைத்துக் கொள்வோம்.எத்தனை பேர் ஒரு சிறு குறிப்புடன் டிரேடு செய்ய வேண்டிய பங்குகள் பற்றிய விபரங்களுடன் டிரேடு செய்கிறார்கள் என்று பாருங்கள்.இரண்டொரு நாட்கள் அப்படி செய்தாலும் அதன்பின் சோம்பேறித் தனம் வந்து விடும்.
'விடுங்க சார்.வாங்க பார்த்துக்கலாம்..என்ன ஆகிடப்போவூது.இன்னிக்கி இல்லைன்னா நாளைக்கு பிடிச்சிடலாம்"என்று சொல்லி இவர் மனதைக் கலைப்பதற்கென்றே நண்பர்கள் என்ற சிலர் காத்துக் கொண்டிருப்பார்கள்.
நான் டிரேடர்களின் சைக்காலஜி தெரிந்தவன்.அதன் அடிப்படையில் கேட்கிறேன்.என்றைக்காவது இந்த சிறு முதலீட்டாளர்கள் டிரேடிங்கில் அமரும்போது அவர்கள் தங்களிடம்(ஆம்.அவர்களிடமேதான்) இன்றைக்கு இத்தனை ரூபாய் லாபமாக வேண்டுமென்று கேட்டிருக்கிறார்களா?அப்படி கேட்டு விட்டு டிரேடிங் செய்திருக்கிறார்களா? Click here to go to main website to get top performed sharesஆர்டரைப் போடுவோம்.என்னவோ சொல்றான்வோய் டிவியில.எவனோ எஸ்எம்எஸ் கொடுத்துண்டிருக்கான் இந்த ஷேரை வாங்குன்னு.நாலா பக்கமும் ஆர்டரை போட்டுப் பார்ப்போம்.ஏதும் கிடைக்காமயா போயிரும் என்ற எண்ணத்தில்தான் இவர் அமர்ந்திருப்பார்.
இதைத்தான் தவறு என்கிறேன்.
இங்கேதான் அம்மா சைக்காலஜியை பயன்படுத்திக் கொள்ளச் சொல்கிறேன்.தேர்தலுக்கு மக்களை சந்திக்க வரும் அவர் தன்னை மக்கள் முந்திக்கொண்டு பல கோரிக்கைகளை வைத்து-
செய்வீர்களா..செய்வீர்களா...என்று கேட்டு விடுவதற்குள் அவர் முந்திக்கொண்டு நம்மிடம் -செய்வீர்களா..செய்வீர்களா..என்கிறார்.
இது ஒரு நல்ல மனோதத்துவம்.
நாம் சின்ன வயது முதலே பள்ளிக்கூட நாட்கள் முதலாகவே
'சொன்னதை; செய்" என்று பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறௌம்.கேள்விகளுக்கு பதில் சொல்லப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறௌம்.நமது தேர்வூ முறையெல்லாம் கூட அப்படித்தான் இருக்கின்றன.
அதனால் செய்வீர்களா..செய்வீர்களா..என்றால் இதோ செய்து விடுகிறௌம் என்று எதிர்வினையாற்ற அதாவது பதிலளிக்கக் கூடிய மனநிலையில் நாம் இருக்கிறௌம்.
இதையே உங்களிடம் பயன்படுத்திப் பாருங்கள்.உங்களது மனதிடம் நீங்களே கேள்வி கேட்டுப் பாருங்கள்.உங்கள் மனதிடம் கட்டளையிட்டுப் பாருங்கள்.
இன்றைக்கு பணம் தருவாயா என்று கேளுங்கள்.
இன்றைக்கு இத்தனை ரூபாய் லாபமாக தருவாயா என்று கேளுங்கள்.
இன்றைக்கு நாலே நாலு டிரேடிங்தான்.இரண்டே மணிநேரம்தான் டிரேடு செய்வேன்.அதற்குள் காசு தருவாயா என்று கேளுங்கள்.
யாரிடம்?
உங்களது மனதிடம்.
யார் கேட்பது?
நீங்கள்தான்.
எப்படி கேட்பது?
செய்வாயா..செய்வாயா..என்று.
எதைச் செய்வாயா என்று?
லாபத்தை மட்டுமே தருவாயா என்று.
இப்படி கேட்டு விட்டு டென்ஷனே இல்லாமல் ஆற அமர உட்காந்துண்டு பொறுமையா டிரேடு பண்ணினா எப்படி நஷ்டம் வரும்.இப்படி ஒரு யூக்தியை நான் சொல்லச் சொல்ல என்னங்கடா சொல்றிங்க என்று ஒரு வெறுப்பு வரும்.ஆனால் பொறுமையா செய்து பாருங்கள்.நாளாக நாளாக எல்லாம் சரியாக வந்து விடும்.
ஆக கதவைத் திறந்தால் காசு வந்தே ஆகனும்.
நிச்சயம் வரும்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get top performing shares for trading
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.
விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
1 comments:
Click here for commentsவணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
ConversionConversion EmoticonEmoticon