நேற்றைய சந்தை பிரமிக்கத் தக்க வகையில் மேலே ஏறி விட்டது.இன்னும் மேலே ஏறும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.சந்தையில் சிலநேரங்களில் ஏன் எதற்கு எப்படி என்றெல்லாம் கேட்கக் கூடாத வகையில் சில சம்பவங்கள் நடந்துள்ளன.அவற்றில் ஒன்றுதான் டிபிகார்ப்()பங்கில் அகர்வால்கள் ஆடிய ஆட்டம்.
ரூ 159.57 கோடிகளுக்கு சுமார் 54 லட்சம் டிபிகார்ப் (DBcorp)பங்குகள் ப்ளாக் டீலில் நேற்று கைமாறியிருக்கிறது.இந்த பங்குகளை விற்றவர்கள் இந்த நிறுவனத்தின் பிரமோட்டர்களான மூன்று பேர்கள்தான்.சுதிர் அகர்வால் கிரிஷ் அகர்வால் மற்றும் பவன் அகர்வால் என்ற இந்த மூன்று பேரும்தான் இந்த காரியத்தை செய்துள்ளனர்.
இதில் ஏதாவது உள்நோக்கம் இருக்குமா?
பொதுவாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தும் பிரமோட்டர்கள் தங்கள் வசம் உள்ள மிக அதிக அளவிலான பங்குகளை விற்று வெளியேறுகிறார்கள் என்றால் அவர்கள் அந்த பிசினஸை விட்டு ஏன் அந்த நிறுவனத்தை விட்டே வெளியேறுகிறார்கள் என்றுதான் அர்த்தம்.குடும்பத் தேவைகளுக்காக இத்தனை லட்சம் பங்குகளை யாரும் விற்க மாட்டார்கள்.
இதே போன்ற செயலை ரிலையன்ஸ் நிறுவனத்தில் அதன் பிரமோட்டர்கள் முன்பெல்லாம் செய்வார்கள்.அதாவது பங்கின் விலை உச்சமாகும்போது விற்று விடுவது.பின்னர் விலை இறங்கிய பின்னர் மீண்டும் உள்ளே போய் வாங்கி கணக்கை நேர் செய்து விடுவது.இதே போன்ற செயலை வங்கிகளே ஐந்தாண்டுகளுக்கு முன்னர் செய்து வந்தன.அப்போதெல்லாம் பர்சனல் லோன் என்று பரவலாக மார்க்கெட்டிங் எக்சிகியூட்வ்களை வைத்து கஸ்டமர்களை விரட்டி விரட்டி கடன் கொடுத்தார்களே அதெல்லாம் எந்த பணத்திலிருந்து என்று நினைக்கிறீர்கள்.தங்களது வங்கி பங்கின் விலை உயரும்போது அவர்களே விற்று விட்டு விலை குறைந்ததும்(சில சமயங்களில் 'குறைய வைத்ததும்' கூட நடந்திருக்கிறது) வாங்கிக் கொண்டு விட்டு கிடைத்த அபரிதமான லாபத்தைத்தான் பர்சனால் லோனாக கொடுத்திருக்கிறார்கள் என்பது அதிகாரப்பூர்வமல்லாத சேதி.
அதிருக்கட்டும்.
டிபிக்கு வருவோம்(Click here to go to main website to get intraday updates).பிரமோட்டர்கள் 54 லட்சம் பங்குகளை விற்ற அதே நேரத்தில் எச்டிஎஃப்சி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபன்டு இந்த டிபிகார்ப் பங்குகளை அதிக அளவில் அதாவது 10 லட்சம் பங்குகள் அளவிற்கு வாங்கியிருக்கிறது.
கொஞ்சம் யோசியூங்கள்.
பிரமோட்டர்கள் 54 லட்சம் பங்குகளை விற்கிறார்கள்.
ஒரு முன்னணி மியூச்சுவல் ஃபன்ட் நிறுவனம் 10 லட்சம் பங்குகளை வாங்குகிறார்கள்.விற்பவர்கள் விலை அதிகமாகி விட்டது.விற்று வெளியேறுவோம்.விலை குறைந்ததும் வாங்குவோம் என் நினைப்பில் இருப்பார்கள்.வாங்கியோர் விலை மலிவூதான்.இன்னும் விலை ஏறும் என்ற நினைப்பில் இருப்பார்கள்.
இந்த இரண்டு எண்ண ஓட்டங்களுக்கு இடையே ஏதேனும் இருக்கிறதா என்று அலசிப்பார்க்க வேண்டும்.அப்படிப் பார்த்தால் -
இந்த பங்கின் தற்போதைய விலையான ரூ 291 என்ற விலையிலிருந்து இறங்கும்-அப்புறம் இந்த ரூ 291க்கு மேலேயூம் ஏறும் என்று தெரிகிறது.
எனவே டிபிகார்ப் பங்கின் விலை இன்னும் 20 சதவீதம் வரை குறைந்தால் வாங்குங்கள்.அப்படி வாங்கினால் தற்போதைய விலையான ரூ 291லிருந்து 20 சதவீதம் வரை உயரும்போது விற்று விடுங்கள்.
ஆக மொத்தம் 40 சதவீதம் நிகர லாபம் கிடைக்கும்.
டிபிகார்ப்- முதலீட்டிற்கான பங்கு.
நமது தபால்வழிப் பயிற்சியில் ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கு நிறைய பேர் சேர்ந்திருக்கிறார்கள்.ஒவ்வொருவரும் வெவ்வேறு பின்புலம் உள்ளவர்கள் என்பதால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத்தான் பாடங்களை வடிவமைத்து வழங்கி பயிற்சி தந்து வருகிறேன்.நமது பயிற்சியின் சிறப்பம்சமே இதுதான்.ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத்தான் பயிற்சி அளிக்கப்படும்.ஒவ்வொருவரையூம் பணம் பண்ணும் கலையை கற்றுக் கொள்ள வைத்து அவர்களை நிறைய சம்பாதிக்க வைப்பதே நமது லட்சியம் கூட.
ஈக்விட்டி டிரேடிங்கில் பயிற்சியில் சேர விரும்புபவர்களும் சேரலாம்.
பாடங்களை முடித்தபின்னரும் சந்தையின் போக்கிற்கேற்ப அப்டேட்கள் கொடுத்து வருகிறேன்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get 'today's Top trading shares list'
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.
விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).புத்தகம் வேண்டுவோர் என்ற
bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon