பங்குச்சந்தையில் எப்போதோ நீங்கள் தீவீரமாக ஈடுபட்டவராக இருக்கலாம்.அப்போது சில பங்குகளை அவசர அவசரமாகவூம் மற்றவர்கள் பரிந்துரையின் பேரிலும் வாங்கிக் குவித்திருக்கலாம்.அதன்பின் டிரேடிங்கில் நஷ்டம் வந்து விட போதுமடா சாமி என்று சந்தையை விட்டு விலகியிருக்கலாம்.இது போன்ற அன்பர்களில் பலரது டிமேட் கணக்கைப் பார்த்தால் அவற்றில் நிச்சயம் யூனிடெக், சுஸ்லான் போன்ற பங்குகளை அதன் விலை உச்சத்தில் இருக்கும்போது வாங்கி வைத்தவராக இருந்திருப்பார்கள்.Click here to get daily market updates & stock tips
இப்போது சந்தை ஏறிக்கொண்டிருக்கிறதே.தற்காலிகமாக ஒன்றிரண்டு நாட்கள் சந்தை சரிவது போல இருந்தாலும் சந்தைக்கு இனி ஏறுமுகம்தான்.செக்செக்ஸ் 35000 வரை சென்று விடும் என்றெல்லாம் தகவல்கள் மீடியாவில் வந்து கொண்டிருக்கும் நிலையில் நமது டிமேட் கணக்கில் உள்ள தேறாத பங்குகளை என்ன செய்வது என்ற குழப்பத்தில் பலர் இருக்கலாம்.Click here to get the list of top performed shares
அவர்களுக்ககாக ஒரு ரெகவரி ப்ளான் இதோ:
முதலில் உங்களது டிமேட் கணக்கில் உள்ள பங்குகளின் விபரத்தை ஒரு எக்ஸெல் ஷீட்டிலோ அல்லது டயரியிலோ எழுதுங்கள்.அவற்றின் மொத்த முதலீட்டுத் தொகை எவ்வளவூ.அவற்றின் சந்தை மதிப்பு எவ்வளவூ என்றும் எழுதுங்கள்.இப்படி எழுதும்போதே அவை பயமுறுத்தும்.இத்தனை அதிக விலையிலா போய் வாங்கியிருக்கிறௌம் என்ற சுயபச்சாதாபத்தை கழற்றி எறிந்து விடுங்கள்.
இப்போது அந்த பட்டியலில் உள்ளவற்றில் தேறுகிற பங்கு ஏதாவது இருக்கிறதா என்று பாருங்கள்.இருந்தால் அவற்றை ஒரு தனி லிஸ்ட்டில் எழுதுஙூகள்.Click here to get what's around & hot news
தேறாத பங்குகளை தனியாக எழுதுங்கள்.தேறாத பங்குகளின் மொத்த நடப்பு மதிப்பை எழுதிக்கொள்ளுங்கள்.இப்போது தயவூ தாட்சண்யம் இல்லாமல் தேறாத பங்குகள் அனைத்தையூம் அப்படியே வந்த விலைக்கு விற்று விடுவதுதான் நல்லது.ஆபரேஷன் செய்து கட்டியை அகற்றுவதைப் போல.
விற்று வரும் பணத்தை மூன்று பங்காகப் பிரியூங்கள்.
தற்போது என்ன செக்டாருக்கு இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு வலுவான எதிர்காலம் இருக்கிறது என பாருங்கள்.அதில் ஏதாவது ஒரு முதன்மையான செக்டாரை எடுத்துக் கொள்ளுங்கள்.அந்த செக்டாரில் உள்ள மார்க்கெட் லீடராக இருக்கிற (டாப் ஆஃப் தி லிஸ்ட்) சூப்பர் பங்கை முதல் பகுதி பணத்தைக் கொண்டு வாங்கி டிமேட்டில் போட்டு வைத்து விடுங்கள்.அதே முதன்மையான செக்டாரில் உள்ள பங்குகளின் வரிசையில் கடைசியில் உள்ள(ஏன் கடைசியில் உள்ள...என்றால் அந்த பங்கின் தற்போதைய விலை குறைவாக இருக்கும்) வலுவான அடிப்படை காரணிகள் உள்ள ஒரு நிறுவனத்தின் பங்கை இரண்டாம் பகுதி பணத்தைக் கொண்டு வாங்கி அதையூம் டிமேட் கணக்கில் போட்டு விடுங்கள்.
இப்போது மூன்றாவது பகுதி பணம் கையில் இருக்கும்.
இதில் அந்த செக்டார் என்று இல்லை.எந்த செக்டாராக இருந்தாலும் பரவாயில்லை.இரண்டு மூன்று ஆண்டுகளில் கிடுகிடுவென்று மேலே ஏறி வரப்போகிற பென்னி ஸ்டாக்குகள் சிலவற்றை இந்த மூன்றாவது பகுதி பணத்தைக் கொண்டு வாங்கி விடுங்கள்.
இப்போது இந்த மூன்று பகுதி பணத்திலும் வாங்கிய பங்குகளை டிரேடிங்கே செய்ய வேண்டாம்.அது பாட்டுக்கு கிடக்கட்டும்.இவை மேலே எழுந்து வருவதற்கு இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை ஆகும்.
இப்போது இன்னொற்றை செய்யூங்கள்.
ஒரு மாத கால அவகாசம்.
தினமும் 250 ரூபாய் தனியாக எடுத்து வைத்து விடுங்கள்.தினமும் 250 ரூபாயை எடுத்து வைப்பது என்பது பிசினசில் ஏன் சிறு வணிகத்தில் உள்ளவர்களுக்கு சுலபமாக இருக்கும்.மாச சம்பளக்காரர்களுக்கு சிரமம்தான் என்றாலும் சில செலவூகளை தியாகம் செய்து எடுத்து வைத்து விடுங்கள்.ஒரு மாதம் வரையில்தானே சிரமப்படப்போகிறீர்கள்.
ஒரு மாதம் முடிந்தபிறகு பார்த்தால் உங்களது கையில் தினம் 250 ரூபாய் சேமித்த வகையில் ரூ 7500 இருக்கும்.இந்த பணத்தை முதலீடாக வைத்துக் கொண்டு ஆஃப்ஷன் டிரேடிங் செய்யூங்கள்.
தினம் ரூ 375 லாபம் கிடைத்தால் போதும்.ஆனால் ஒரு நல்ல ஆஃப்ஷன் டிரேடிங்கில் தினம் ரூ 800 வரை கிடைக்குமென்றாலும் ரூ 375 கிடைத்தாலே போதும்.மெதுவாக மிக ஸ்லோவாகவே பார்த்து பார்த்து நஷ்டம் வராமல் செய்யலாம்.ஏற்கனவே நஷ்டப்பட்டிருக்கும் உங்களைப் பொறுத்தவரை ரூ 375 போதும்.
ஆக இரண்டாவது மாத முடிவில் பார்த்தால் உங்களது கையில் ஏற்கனவே உள்ள ஆஃப்ஷனுக்கான முதலீட்டுத் தொகை ரூ 7500ம் ஆஃப்ஷனில் சம்பாதித்த ரூ 7500மாக ஆக ரூ 15000 இருக்கும்.
இனி மூன்றாவது மாதம்.
இப்போது அதே மாதிரி ஆஃப்ஷன் டிரேடிங்கில் இரண்டு லாட் எடுத்து டிரேடிங் செய்யூங்கள்.தினமும் அதே ரூ 375 லாபமாக கிடைத்தால் போதுமென்ற மெதுவான டிரேடிங்தான்.
ஆக மூன்றாவது மாத முடிவில் இன்னொரு ரூ 7500 கிடைத்திருக்கும்.
எனவே நான்காவது மாதத்திலிருந்து மூன்று லாட்களாக டிரேடிங் செய்யூங்கள்.
ஐந்தாவது மாதத்திலிருந்து நான்கு லாட்கள்.
ஆறாவது மாதத்திலிருந்து ஐந்து லாட்கள்.
ஏழாவது மாதத்திலிருந்து ஆறு லாட்கள்.
எட்டாவது மாதத்திலிருந்து ஏழு லாட்கள்.
ஒன்பதாவது மாதத்திலிருந்து எட்டு லாட்கள்.
பத்தாவது மாதத்திலிருந்து ஒன்பது லாட்கள்.
பதினோராவது மாதத்திலிருந்து பத்து லாட்கள்.
பனிரெண்டாவது மாதத்திலிருந்து பதினோரு லாட்கள்.
வருட முடிவில் உள்ள தொகை:ரூ 7500ஐ 12ஆல் பெருக்கினால் கிடைப்பது: ரூ 90000 ஆகும்.
இப்போது இந்த ரூ 90000ஐ பயன்படுத்தி ஈக்விட்டியில் உங்களது போர்ட்ஃபோலியோவில் எந்த பங்கு ஏமாற்றியதோ அது ஏறும்போல தெரிந்தால் அந்த பங்காக மாற்றி விடுவது.அதன்பின் அடுத்த வருடத்தில் மறுபடியூம் தினமும் ரூ 250ஐ ஒரு மாதம் சிக்கனமாக இருந்து எடுத்து வைத்துக் கொள்வது.அதன்பின் அடுத்த மாதத்திலிருந்து தினமும் ரூ 375ஐ எதிர்பார்த்து ஆஃப்ஷனில் டிரேடிங் செய்வது.அடுத்த வருடத்தின் முடிவில் இன்னொரு ரூ 90000 சம்பாதிப்பது அதையூம் ஈக்விட்டியில் நுழைத்து ஏமாற்றிய பங்கை வாங்கித் தள்ளுவது என்று இது போல் மூன்று வருடங்கள் செய்யூங்கள்.ஒரு பக்கம் ஏற்கனவே மாற்றி வாங்கி வைத்த பங்குகளும் வளர்ந்திருக்கும்.இன்னொரு பக்கம் வருடத்திற்கு ரூ 90000 என்று டிமேட்டிற்கு குளுக்கோஸ் ஏற்றியது மாதிரியூம் இருக்கும்.
இப்போது என்ன தோன்றுமென்றால் அட இது நல்லா இருக்கே.எதுக்கு ஈக்விட்டியில் போய் அல்லாடனும்.பேசாம ஆஃப்ஷனே பண்ணின்டு போயிரலாமேன்னு மனசு நினைக்கும்.அப்போதான் புத்தி மனதை அடக்கி வைக்கனும்.
இந்த ஆஃப்ஷனில் ஒரு நாளைக்கு சுமாராக ரூ 375தான் லாபமாக எதிர்பார்க்கிறௌம்.ஆனால் ஆஃப்ஷனையே முழுநேரமாக செய்தால் ஒரு லாட்டிற்கு தினம் ரூ 800 முதல் ரூ 1000 வரை கூட லாபமாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது.ஆனால் அதெல்லாம் ஆஃப்ஷன் டிரேடிங் ஸ்ராட்டஜிகளை படித்து வைத்துக் கொண்டு செய்ய வேண்டும்.அப்படி செய்தால் பணம் கொட்டும்.இல்லையென்றால் தலையில்தான் குட்டும்.
ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான தபால்வழிப்பயிற்சியில் சேர்ந்து பாருங்கள்.நிறைய கற்றுக் கொள்வீர்கள்.நிறைய சம்பாதிக்கவூம் கற்றுக் கொள்வீர்கள்.அல்லது கீழே உள்ள எனது புத்தகங்களையாவது வாங்கி படித்துப் பார்த்து விட்டு டிரேடிங் செய்யூங்கள்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get daily market updates & trading tips
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.
விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).புத்தகம் வேண்டுவோர் என்ற
bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon