யெஸ் பாங்க் பற்றிய செய்திகள் ஏற்கனவே வலம் வந்தபடி இருக்கின்றன.நான் சொல்லப் போகிற செய்திகளில் ஏதும் கெட்ட சேதி கிடையாது.இந்த வங்கியில் சேமிப்புக் கணக்கை வைத்திருக்கிறீர்களா?இந்த வங்கியில் பிக்சட் டெபாசிட் ஏதும் போட்டிருக்கிறீர்களா?
அப்படியானால் மேற்கொண்டு கவனித்துப் படியூங்கள்.
தனியார் துறை வங்கிகளில் கடைசியாக வந்த இந்த வங்கியின் செயல்பாடு நன்றாக இருக்கிறது.இன்றைக்கு கூட பங்குச்சந்தையில் இந்த வங்கியின் பங்கு ரூ 412 என்ற அளவில் இறங்குமுகமாகத்தான் இருக்கிறது என்றாலும் சில பாசிட்டிவ்வான செய்திகளை இப்போது சொல்கிறேன்.
இந்த வங்கியின் பங்கு ரூ 400க்கு மேல் வலுவாக இருக்கும்.கீழே வந்தால் ரூ 370 அதன்பிறகு இன்னும் கீழே வந்தால் ரூ 340 என்று வரும் பாருங்கள் அதுதான் இந்த வங்கிப் பங்கின் நெகட்டிவ்வான பகுதி என்று கொள்ளலாம்.
பங்குச்சந்தை முதலீட்டாளராக இருப்பவார்கள் இந்த வங்கியின் பங்கு கீழே இறங்கி வந்தால் முதலீடு செய்யலாம்.
எந்த விலையில்?
ரூ 370க்கும் ரூ 340க்கும் இடைப்பட்ட எந்த விலையானாலும் இந்த வங்கிப் பங்கினை வாங்கலாம்.ஆனால் ரூ 338க்கு கீழே வந்து விட்டால் விற்று விட்டு வெளியேறி விட்டு பின்னர் மறுபடி ரூ 340க்கு மேலே வரும்போது(இப்படி அதிக விலை கொடுத்து வாங்க வேண்டுமா என்பார்கள் சிலர்.ஆனால் இப்படி வாங்குவதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது) வாங்கிக் கொள்ள வேண்டும்.
அப்படியானால் இலக்கு விலை என்று ஒன்று இருக்குமல்லவா அது என்ன?
ரூ 400க்கு மேலே(தற்போது ரூ 412) வணிகமாகிக் கொண்டிருக்கிற இந்த பங்கு ரூ 444க்கும் அதன்பிறகு ரூ 462க்கும் செல்லக் கூடிய திறன் படைத்தது.
எனவே ஒரு முதலீட்டாளராக இருப்பவர்கள் நான் மேலே சொன்ன விலைகளுக்குள் வாங்கி ரூ 444க்கோ அல்லது ரூ 462க்கோ விற்று லாபம் பார்க்கலாம்.
இப்போது இந்த யெஸ் பாங்க்கில் பிக்சட் டெபாசிட் போட்டிருப்பவர்களின் கவனத்திற்கு.அதுவூம் வெளிநாட்டில் பணிபுரியூம் அன்பர்களுக்கான ப்ளான் இது.(Click here to get NRI & other investor's investment plans)
ஒரு வித்தியாசமான ஸ்ட்ராட்டஜி சொல்கிறேன் பாருங்கள்.
உதாரணமாக நீங்கள் யெஸ் பாங்க்கில் ஒரு லட்ச ரூபாய் பிக்சட் டெபாசிட்டில் போட்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.அதற்கு யெஸ் பாங்க் தரும் வட்டி சுமார் 9.00 சதவீதம்தான்.
இப்போது ஒரு ஆண்டின் முடிவில் உங்களுக்குக் கிடைக்கும் தொகை வட்டியூடன் சேர்த்து ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாயாக இருக்கும்.
இதே நான் என்ன சொல்கிறேனென்றால் நீங்கள் முதலீடு செய்துள்ள ஒரு லட்ச ரூபாய் பிக்சட் டெபாசிட்டின் மீது அடமானக் கடனாக யெஸ் பாங்கிடம் (எந்த பாங்க்கிலும் இதே போலத்தான் செய்வார்கள்) 90000 மட்டும் கடனாகக் கேட்டால் அதற்கு உங்களது டெபாசிட் வட்டியை விட கூடுதலாக இரண்டு சதவீத வட்டியை சேர்த்து அவர்கள் கடனாக தருகிற 90000க்கு 11.00 சதவீத வட்டியை ஓர் ஆண்டு முடிவில் கணக்கு தீர்க்கும்போது கேட்பார்கள்.நடுவிலும் வட்டியை மட்டும் கட்டிக்கொண்டே வரலாம்.அது உங்களது இஷ்டம்.
இப்போது நமது திட்டத்திற்கு வரலாம்.
உங்களது ஒரு லட்சரூபாயிலிருந்து 90000 வருகிறதல்லவா.அதை பங்குச்சந்தையில் கன்னாபின்னாவென்று முதலீடு செய்யாமல் ஒரு ஆன்லைன் டிமேட் கணக்கு துவங்கி அதில் யெஸ் பாங்க் பங்கினை மட்டுமே ரூ 90000க்கு வாங்கி பேசாமல் வைத்து விடுங்கள்.இதில் டிரேடிங் செய்ய வேண்டாம்.அப்படியே இருக்கட்டும்.உதாரணமாக நீங்கள் வாங்கும் ஒரு பங்கின் விலை ரூ 350 ஆகக்கூட இருக்கட்டும்.அதாவது விலை குறையூம்போதுதான் வாங்கப்போகிறௌம்.அதுவரையில் கடனாக வாங்கிய ரூ 90000 உங்களது சேமிப்புக் கணக்கிலேயே இருக்கட்டும்.பங்குச்சந்தைக்கு அவரசப்பட்டு கொண்டு வர வேண்டாம்.ஆக ரூ 90000க்கு சுமார் 257 பங்குகள் கிடைக்கும்.(புரோக்கரேஜை கணக்கில் சேர்க்கவில்லை).
நமது திட்டப்படி இந்த பங்கு எப்போது ரூ 460க்கு போகிறதோ அப்போது விற்றுக் கொள்ளலாம்.நிச்சயம் ஒரு வருடத்திற்குள் ஏன் ஆறு மாதத்திற்குள்ளாகவோ சிலவேளைகளில் மூன்று மாதத்திலேயே(Click here to get short-term gain stocks) கூட இலக்கு விலையை இந்த பங்கு அடைந்து விடக் கூடும்.
கவனியூங்கள்.
257 யெஸ் பாங்க் பங்குகளை ரூ 460க்கு விற்கும்போது கிடைக்கும் தொகை(புரோக்கரேஜை சேர்த்துக் கொள்ளவில்லை) ரூ 118220 ஆக இருக்கும்.
இதில் நீங்கள் ஒரு வருட கணக்காகவே வைத்துக் கொண்டாலும் நீங்கள் கடனாக வாங்கிய 90000ற்கான கூடுதல் வட்டி 2 சதவீதத்தை கணக்கிட்டால்ரூ 1800 வருகிறது.இதை வங்கியில் கட்டுவதாக கணக்கிட்டு அதை இந்த ரூ 118220ல் கழித்து விட்டால் மீதம் இருப்பது: ரூ 116420 ஆகிறது.
அதாவது இந்த யெஸ் பாங்க்கை பங்குகளை மட்டும் வாங்கி விற்றதில் கிடைத்திருக்கிற தொகை(116420-90000 = 26420) ரூ 26420 ஆகிறது.
ஏற்கனவே பிக்சட் டெபாசிட்டில் போட்டு வைத்திருந்த உங்களது ஒரூ லட்ச ரூபாய்க்கான 9.00 சதவீத வட்டி:ரூ 9000ம் வங்கியில் இருக்கும்.
ஆக மொத்தமாக கிடைத்திருக்கும் உபரி தொகை அல்லது லாபத்தொகை(26420+9000 = 35420) என்பது ரூ 35420 ஆக இருக்கிறது.
அதாவது ஒரு லட்சரூபாயை அப்படியே பிக்சட் டெபாசிட்டில் உறங்க விடாமல் ஒரே ஒரு தடவை 90000 ரூபாயை மட்டும் எடுத்து பங்குச்சந்தையில் (Click here to get bank & other stock prices)அதே யெஸ் பாங்க் பங்கை வாங்கியதால் இவ்வளது கிடைத்திருக்கிறது.
இப்போது பாருங்கள்.
பிக்சட் டெபாசிட்டில் பணம் கிடந்தால் கிடைப்பது ரூ 9000 அதாவது 9 சதவீத வட்டி.
பிக்சட் டெபாசிட்டிலிருந்து பங்குச்சந்தைக்கு வந்தால் கிடைப்பது ரூ 35420.அதாவது 35.42 சதவீத வட்டி போன்றது.
இரண்டில் எது லாபம்.
நீங்களே முடிவூ செய்யூங்கள்.
இது மட்டுமல்ல.பாதுகாப்பாக பங்குச்சந்தையில் பணத்தைப் பெருக்க இன்னும் பல உத்திகள்(winning strategies)இருக்கின்றன.அவற்றை(Click here to know money making strategies ) நீங்கள் விரும்பினால் நமது தபால்வழிப் பயிற்சியில் சேரந்து தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைன் டிமேட் மற்றும் டிரேடிங் கணக்கை துவங்கி சின்னதாய் டிரேடிங் செய்தும் பணத்தை சிறுகச் சிறுக சேர்க்கலாம்.மேலும் விபரமறிய bullsstreet.com@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get stock tips & trading guidance
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.
விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்.
பாக்யா வாரஇதழில் எழுதிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக
(10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon